என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வார விடுமுறையையொட்டி பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
    X

    தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

    வார விடுமுறையையொட்டி பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

    • வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், சிலர் சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
    • ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சிரமமடைந்ததால் பழுது சரிபார்க்கப்பட்டு இன்று வழக்கம்போல் ரோப்கார் சேவை இயங்கியது.

    பழனி:

    3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில்இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    குறிப்பாக மாத கார்த்திகை, விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், சிலர் சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.

    அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வ தற்கான ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். காற்றின்வேகம் காரணமாக நேற்று ரோப்காரில் பழுது ஏற்பட்டது. ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சிரமமடைந்தனர். அதன் பின் பழுது சரிபார்க்கப்பட்டு இன்று வழக்கம்போல் ரோப்கார் சேவை இயங்கியது. இதேபோல் மலைக்கோவிலில் உள்ள பொது, கட்டண தரிசனங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகபெருமானை தரிசனம் செய்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரி வீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பும் பக்தர்கள் தங்கள் ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது

    Next Story
    ×