என் மலர்
திண்டுக்கல்
- 6 மாதங்களாக மர்மகும்பல் இப்பகுதியில் உலாவி வருகிறது. சுவர் ஏறி குதித்து மின்மோட்டார், சைக்கிள், பைக்குகளை திருடிச் செல்கின்றனர்.
- இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருட்டு கும்பலை பிடிக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை இ.பி.காலனி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசுத்துறை மற்றும் தொழிலதிபர்கள் அதிகம் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக மர்மகும்பல் இப்பகுதியில் உலாவி வருகிறது. சுவர் ஏறி குதித்து மின்மோட்டார், சைக்கிள், பைக்குகளை திருடிச்செ ல்கின்றனர்.
குறிப்பாக முகமூடி அணிந்த சைக்கோ நபர் மர்மமான முறையில் அடிக்கடி சுற்றித்திரிகிறார். வீடுகளில் இருக்கும் பொருட்களை திருடிச்செ ல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சமடை ந்துள்ளனர். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருட்டு கும்பலை பிடிக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து போலீசில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் உரிய ரோந்துப்பணி மேற்கொண்டு மோட்டார், பைக் திருடும் கும்பலை கைது செய்ேவாம் என கூறி பொதுமக்களை சமாதான ப்படுத்தி அனுப்பி வைத்தார். திருட்டு கும்பலை பிடிக்காவிட்டால் பொது மக்கள் ஒன்றுகூடி போரா ட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
- 22 வகையான வேளாண் பயிர்கள் சுமார் 1.17 லட்சம் ஹெக்டேரிலும், 175 வகையான தோட்ட க்கலை பயிர்கள் 1.09 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது
- மாவட்டத்தில் யூரியா 3850 டன், டி.ஏ.பி. 2400 டன், பொட்டாஸ் 1535 டன், கலப்பு உரம் 8120 டன், சூப்பர் பாஸ்பேட் 960 டன் என மொத்தம் 16 ஆயிரத்து 865 டன் உரம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் 22 வகையான வேளாண் பயிர்கள் சுமார் 1.17 லட்சம் ஹெக்டேரிலும், 175 வகையான தோட்ட க்கலை பயிர்கள் 1.09 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிர்களுக்கு தேவையான உரம் மாவட்டத்தில் உள்ள 555 சில்லறை விற்பனை உரக்கடைகள் மற்றும் 70 மொத்த விற்பனையாளர்கள் என 625 உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு வினியோ கம் செய்யப்படு கின்றன.
இந்தக்கடைகளில் ராபி பருவத்துக்கு தேவையான உரம் போதிய அளவு கையி ருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராஜேஸ்வரி தெரிவித்து ள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் யூரியா 3850 டன், டி.ஏ.பி. 2400 டன், பொட்டாஸ் 1535 டன், கலப்பு உரம் 8120 டன், சூப்பர் பாஸ்பேட் 960 டன் என மொத்தம் 16 ஆயிரத்து 865 டன் உரம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது வரை மாவட்டத்துக்கு வழங்க வேண்டிய 4000 டன் யூரியா, 1000 டன் டி.ஏ.பி. உரம் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
- மல்லையாபுரத்தில் வேறு ஒரு மின்சார டிரான்ஸ்பார்மில் இருந்து தற்காலிகமாக வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்தனர்.
- அதிக அளவு மின்சாரம் திடீரென வினியோகமான தால் வீடுகளில் பயன்படு த்திய விலை உயர்ந்த டிவிகள், பிரிட்ஜ்கள், பேன்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்தன.
செம்பட்டி:
செம்பட்டியை அடுத்த ஆத்தூர் அருகே மல்லையா புரம் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு மல்லையாபுரம் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மில் இருந்து மின் வினியோகம் செய்ய ப்பட்டு வருகிறது. இந்நிலை யில் மாலை டிரான்ஸ்பார் பழுது ஏற்பட்டதால் அனைத்து வீடுகளுக்கும் மின் வினியோகம் தடைபட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மல்லையா புரத்தில் வேறு ஒரு மின்சார டிரான்ஸ்பார்மில் இருந்து தற்காலிகமாக வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்த னர். அப்போது மல்லையா புரத்தின் புதிய இணைப்பு கொடுத்த டிரான்ஸ்பார்மில் இருந்து அதிக அளவு மின்சாரம் திடீரென வினியோகமான தால் வீடுகளில் பயன்படுத்திய விலை உயர்ந்த டிவிகள், பிரிட்ஜ்கள், பேன்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்தன. வீடு களில் டிவி ஓடிக்கொண்டி ருந்த போது புகை வெளி யாகி பழுது ஏற்பட்டது.
குறிப்பாக, மல்லையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த, சுப்பையா, நாராயணன், ராதா, கணேசன், சக்திவேல், முத்துலட்சுமி, கருங்க ண்ணன் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கிராம மக்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டு ள்ளது. மல்லையாபுரத்தில் இரவு 2 டிரான்ஸ்பார்மும் பழுது ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நள்ளிரவு முதல் அக்கி ராமமே இருளின் மூழ்கியது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் பெரும் அவதிக்கு ள்ளானார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் பழுத டைந்துள்ள டிரான்ஸ்பா ர்மை சரி செய்ய வேண்டு மென மல்லையாபுரம் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிராமத்தில் ஒரே நேர த்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் உயரழுத்த மின்வினியோகத்தால் வீட்டு உபயோக பொருள்கள் சேதம் அடைந்துள்ள சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விடுதி மாணவர்களிடம் தினசரி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் எனவும், இல்லையெனில் வெளியிடத்தில் இருந்து தங்கி பள்ளிக்கு வருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திண்டுக்கல:
திண்டுக்கல் நகர் பகுதியில் அரசு உதவிபெறும் இருபாலர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 80-க்கும் மேற்பட்டோர் தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பள்ளங்கி, தோணிமலை, ஆடலூர், திருப்பூர், கோவை, செந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விடுதி செயல்பட்டு வந்தது. ஆகஸ்டு மாதம் முதல் விடுதியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேற்றும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் இறங்கியது.
தினசரி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் எனவும், இல்லையெனில் வெளியிடத்தில் இருந்து தங்கி பள்ளிக்கு வருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர். அவர்கள் தெரிவிக்கையில்,
நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில் திடீரென விடுதியை விட்டு வெளியேறுமாறு கூறினால் எங்களது கல்வி தடைபடும். எனவே தேர்வு முடியும் வரை எங்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.
திடீரென பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் நஷ்டஈடு வழங்கவேண்டும் என வேடசந்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
- நஷ்டஈடு வழங்க தாமதமானதால் ஜப்தி நோட்டீசை ஒட்டி பயணிகளை கீழே இறக்கிவிட்டு பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
வேடசந்தூர்:
திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தமிழ்ச்செல்வன்(35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் அருகில் உள்ள தோப்பூருக்கு வந்தார். அங்கு அவரை இறக்கிவிட்டு மீண்டும் தனது பைக்கில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கோட்டைமந்தயம் அருகே இவர் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் இவர்மீது மோதியது. இதில் ஒரு கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். தனக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என வேடசந்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3லட்சத்து 60ஆயிரத்து 754 வழங்கவேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் இந்த தொகையை வழங்காமல் போக்குவரத்து கழகம் தாமதம் செய்து வந்தது. இதனைதொடர்ந்து தமிழ்ச்செல்வன் மீண்டும் மேல்முறையீடு செய்தார். நீதிபதி அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் வேடசந்தூர் பஸ்நிலையத்தில் ஜப்தி செய்யப்பட்டது. கோர்ட்டு அமீனா பஸ்சில் ஜப்தி நோட்டீசை ஒட்டி பயணிகளை கீழே இறக்கிவிட்டு பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டுவந்தார். இதனால் பஸ்நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- தொட்டி நிறைந்து வால்வு அடைக்க முடியாத நிலை யில், தண்ணீர் வீணானது. இதனை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் போராடி வாழ்வை அடைத்தனர்.
- தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பழனி சாலை கணபதி அக்ரஹாரம் பகுதியில் மேல்நிலைத் தொட்டி உள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பகுதிகளுக்கு வழங்கப்படு கிறது. இதில் இருந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு முழுவதிற்கும் 7 மற்றும் 12 வது வார்டு பகுதியில் ஒரு சில பகுதி களுக்கும் குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பயன்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை மின் மோட்டார் மூலம் மேல்நிலைத் தொட்டி யில் தண்ணீர் ஏற்றப்பட்டது. தண்ணீர் தொட்டி நிறைந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் கீழே கொட்டியது. 40 அடி உயரத்தில் அருவி போல் விழுந்த தண்ணீரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சென்றனர்.
இந்த தொட்டியில் பொரு த்தப்பட்டுள்ள வால்வு கோளாறு காரண மாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக வார்டு பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று தண்ணீர் ஏற்றப்பட்டது. தொட்டி நிறைந்து வால்வு அடைக்க முடியாத நிலை யில், தண்ணீர் வீணானது. இதனை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் போராடி வாழ்வை அடைத்தனர்.
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் பொது மக்களிடம் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் இதுபோல் தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
- அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
- மேற்கு தொடர்ச்சி மலை குகையில் உள்ள ஸ்ரீசடையாண்டி உள்ளிட்ட 21 தெய்வங்களை வணங்குவதற்காக கரடுமுரடான மலைப்பாதையில் ஏறிச்சென்று வழிபட்டனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
வெளியூர் பக்தர்கள் இங்கு வந்து கிடா மற்றும் சேவல்களை பலியிட்டு அன்னதானம் வழங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழாவில் கலந்து கொள்ள வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் மேற்கு தொடர்ச்சி மலை குகையில் உள்ள ஸ்ரீசடையாண்டி உள்ளிட்ட 21 தெய்வங்களை வணங்குவதற்காக கரடுமுரடான மலைப்பாதையில் ஏறிச்சென்று வழிபட்டனர்.
ஆடி அமாவாசைக்காக செம்பட்டி சித்தையன்கோட்டை, ஆத்தூர், அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி எடுத்து சடையாண்டி சுவாமியை வழிபட்டனர். திருவிழாவில், சின்னாள பட்டி, கன்னிவாடி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர் பக்தர்களும் லாரி, வேன், ஆட்டோக்களில் வந்து சடையாண்டி சுவாமியை வழிபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆத்தூர் காமராஜர் அணையில் யாரும் குளிக்க கூடாது என செம்பட்டி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.
சடையாண்டி கோவிலில் குடிதண்ணீர், சுகாதாரம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.
- சுதந்திரதினத்தை முன்னிட்டு செந்துறை பகுதியில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.
- மகளிர் குழுக்க ள், கிராம மக்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நத்தம்:
சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் செந்துறை ஊராட்சி தலைவர் சவரிமுத்து, பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் தேன்மொழிமுருகன், கோசுகுறிச்சி ஊராட்சி தலைவர் ஷாஜூதாபேகம், குட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள்மணி, சிறுகுடி ஊராட்சி தலைவர் கோகிலவாணிவீரராகவன்,சமுத்திராபட்டி ஊராட்சி தலைவர் சேதுஅமராவதி, ஊராளிபட்டி ஊராட்சி தலைவர் தேன்சேகர் தேனம்மாள், பூதகுடி ஊராட்சி தலைவர் பரமசிவம், ந.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள் மகாலிங்கம், ஆவிச்சிபட்டி ஊராட்சி தலைவர் துர்க்கா சங்கீதா ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது.
இதில் அந்தந்த ஊராட்சி மன்றதுணைதலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், பற்றாளர்கள், உதவியாள ர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.ஊராட்சி செயலர்கள் செந்துறை கருப்பையா, பிள்ளையார் நத்தம் பாக்கியலட்சுமி, குடகிப்பட்டி செல்வராஜ்,பூதகுடி ராஜேஸ்வரி, சிறுகுடி வீரபாண்டி, ஆவிச்சிபட்டி நாதன், சமுத்திராபட்டி சின்னச்சாமி, ஊராளிபட்டி ராஜேஸ்கண்ணா, குட்டு ப்பட்டி சிந்து, சிரங்காட்டு ப்பட்டி அசோக்குமார், கோட்டை யூர்செந்தில், கோசுகுறிச்சி சந்திரன், சேத்தூர் கதிர்வேல் ஆகியோர் தீர்மான ங்களை வாசித்தனர். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம்,
கிராம ஊராட்சி யின் தணிக்கை அறிக்கை, குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி மேம்படுத்துவது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இதில் தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார திட்டம், கிராம வறுமை ஒழிப்பு மகளிர் குழுவினர் பங்கேற்ற னர். மேலும் மகளிர் குழுக்க ள், கிராம மக்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர்.
- திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், ஆஞ்சநேயர் கோயில் முன்பு மோட்ச தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். அதேபோன்று ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.
பொதுமக்களுக்கு சுகாதார வசதிகளை ஊராட்சி சார்பாக செய்யப்பட்டு இருந்தது. ஆடி அமாவா சையை முன்னிட்டு அணைப் பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சி மாலப்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் கள்ளழகர் குதிரை வாகனத்தில் அமர்ந்து அலங்காரத்தில் காலை 4 மணிக்கு ஊர்வலம் தொடங்கி வான வேடிக்கையு டன் புறப்பட்டது.
பிள்ளை யார் நத்தம், கல்கோட்டை, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்கு பிள்ளை பட்டி, அணைப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனை வழிநெடுக பொதுமக்கள் வரவேற்று அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இவ்விழாவில் நிலக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17ந் தேதி) நடைபெற உள்ளது.
- அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எரியோடு:
எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17ந் தேதி) நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எரியோடு, நாகையக்ேகாட்ைட, புதுசாலை, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவுட கவுண்டன்பட்டி,
மல்வா ர்பட்டி, நல்லமநாயக்க ன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்ட ணம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
- கோவில் ஊழியர் தன்னால் எப்படி குரங்கிடம் இருந்து செல்போனை மீட்டு தர இயலும் என கேட்டார்.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் நேற்று சுதந்திர தின விடுமுறை நாளை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவ்வாறு கூடி இருந்த பக்தர்களில் சிலர் மலை மீது அமர்ந்திருந்த குரங்குகளை தங்களது செல்போனின் மூலமாக படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஒரு பக்தர் குரங்கின் அருகே சென்று போட்டோ எடுத்தார். தனக்கு ஏதோ தருகிறார் என நினைத்த குரங்கு செல்போனை திடீரென பறித்துக் கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர் கூச்சலிட்டார். செல்போனை பறித்த குரங்கு லாவகமாக தப்பி செல்போனை கையில் வைத்துக்கொண்டு மலை மீது உள்ள கட்டிடங்களில் தாவித் தாவி சென்றது. அந்த செல்போனை உணவு பண்டம் என நினைத்து கடித்தது. இதனால் பதறிப்போன பக்தர் செல்போனை கொடுக்குமாறு அந்த குரங்கைத் துரத்திச் சென்றார்.
ஆனால் குரங்கு வேகமாக வேறு கட்டிடத்துக்கு தாவிச் சென்றது. செல்போனை பறி கொடுத்த பக்தர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் சொல்லி செல்போனை மீட்டுத் தருமாறு கேட்டார். ஆனால் கோவில் ஊழியர் தன்னால் எப்படி குரங்கிடம் இருந்து செல்போனை மீட்டு தர இயலும் என கேட்டார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குரங்கின் அருகே சென்று செல்போனை வைத்து படம் பிடிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வாழைப்பழம், தேங்காய், உணவு திண்படம் போன்றவற்றை பறித்துச் செல்லும் குரங்கு தற்போது செல்போனையும் பறித்து சென்றது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முன்னாள் காதலியிடம் ஆசை வார்த்தைகள் பேசி கொத்தனார் அவரை கற்பழித்தார்.
- திருமணம் செய்த மறுத்தவரை புகாரின்பேரில் போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 12 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகள் உள்ளனர். குணசேகரன் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பிறகும் முன்னாள் காதலியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.
33 வயதான அந்த பெண்ணுக்கு திருமணமாக வில்லை. இந்நிலையில் முன்னாள் காதலியிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவரை கற்பழித்தார். இதில் 5 மாத கர்ப்பிணியானார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவர் கேட்டபோது மறுத்து விட்டார். இதனால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






