என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை பகுதியில் மின் மோட்டார், பைக் திருடும் மர்மகும்பல் - போலீசில் புகார்
    X

    போலீசில் புகார் அளிக்க வந்த இ.பி.காலனி பொதுமக்கள்.

    நிலக்கோட்டை பகுதியில் மின் மோட்டார், பைக் திருடும் மர்மகும்பல் - போலீசில் புகார்

    • 6 மாதங்களாக மர்மகும்பல் இப்பகுதியில் உலாவி வருகிறது. சுவர் ஏறி குதித்து மின்மோட்டார், சைக்கிள், பைக்குகளை திருடிச் செல்கின்றனர்.
    • இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருட்டு கும்பலை பிடிக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை இ.பி.காலனி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசுத்துறை மற்றும் தொழிலதிபர்கள் அதிகம் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக மர்மகும்பல் இப்பகுதியில் உலாவி வருகிறது. சுவர் ஏறி குதித்து மின்மோட்டார், சைக்கிள், பைக்குகளை திருடிச்செ ல்கின்றனர்.

    குறிப்பாக முகமூடி அணிந்த சைக்கோ நபர் மர்மமான முறையில் அடிக்கடி சுற்றித்திரிகிறார். வீடுகளில் இருக்கும் பொருட்களை திருடிச்செ ல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சமடை ந்துள்ளனர். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருட்டு கும்பலை பிடிக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இதுகுறித்து போலீசில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் உரிய ரோந்துப்பணி மேற்கொண்டு மோட்டார், பைக் திருடும் கும்பலை கைது செய்ேவாம் என கூறி பொதுமக்களை சமாதான ப்படுத்தி அனுப்பி வைத்தார். திருட்டு கும்பலை பிடிக்காவிட்டால் பொது மக்கள் ஒன்றுகூடி போரா ட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×