search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திண்டுக்கல்லில் பள்ளி விடுதி மூடப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
    X

    கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட மாணவர்களை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல்லில் பள்ளி விடுதி மூடப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

    • விடுதி மாணவர்களிடம் தினசரி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் எனவும், இல்லையெனில் வெளியிடத்தில் இருந்து தங்கி பள்ளிக்கு வருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

    திண்டுக்கல:

    திண்டுக்கல் நகர் பகுதியில் அரசு உதவிபெறும் இருபாலர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 80-க்கும் மேற்பட்டோர் தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பள்ளங்கி, தோணிமலை, ஆடலூர், திருப்பூர், கோவை, செந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    நடப்பு கல்வியாண்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விடுதி செயல்பட்டு வந்தது. ஆகஸ்டு மாதம் முதல் விடுதியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேற்றும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் இறங்கியது.

    தினசரி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் எனவும், இல்லையெனில் வெளியிடத்தில் இருந்து தங்கி பள்ளிக்கு வருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர். அவர்கள் தெரிவிக்கையில்,

    நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில் திடீரென விடுதியை விட்டு வெளியேறுமாறு கூறினால் எங்களது கல்வி தடைபடும். எனவே தேர்வு முடியும் வரை எங்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

    திடீரென பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×