search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school hostel"

    • விடுதி மாணவர்களிடம் தினசரி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் எனவும், இல்லையெனில் வெளியிடத்தில் இருந்து தங்கி பள்ளிக்கு வருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

    திண்டுக்கல:

    திண்டுக்கல் நகர் பகுதியில் அரசு உதவிபெறும் இருபாலர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 80-க்கும் மேற்பட்டோர் தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பள்ளங்கி, தோணிமலை, ஆடலூர், திருப்பூர், கோவை, செந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    நடப்பு கல்வியாண்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விடுதி செயல்பட்டு வந்தது. ஆகஸ்டு மாதம் முதல் விடுதியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேற்றும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் இறங்கியது.

    தினசரி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் எனவும், இல்லையெனில் வெளியிடத்தில் இருந்து தங்கி பள்ளிக்கு வருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர். அவர்கள் தெரிவிக்கையில்,

    நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில் திடீரென விடுதியை விட்டு வெளியேறுமாறு கூறினால் எங்களது கல்வி தடைபடும். எனவே தேர்வு முடியும் வரை எங்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

    திடீரென பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு உணவு சமைத்து கொடுத்து வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை காமராஜர்சாலை- குருவிக்காரன் சாலை சந்திப்பில் தனியார் பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியிலேயே மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இங்கு தங்கி படிக்கும் மாணவிகளுக்கு, ராஜபாளையத்தை சேர்ந்த முத்துமாரி(வயது 20) என்பவர் உணவு சமைத்து கொடுத்து வந்தார். 

    இந்தநிலையில் அவர் பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இது குறித்து தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு உறவிடப்பள்ளி விடுதியில் மர்மமான முறையில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் மல்கங்கிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அரசு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. செல்வந்தர்களும், சமூகத்தில் முக்கிய அந்தஸ்து பெற்றவர்களும் பயிலும் இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பந்தனா சர்தார் என்ற சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    நேற்று இரவு பள்ளி விடுதியில் இரவு உணவை முடித்து விட்டு அறைக்கு திரும்பிய மாணவர்கள் பந்தனாவை காணவில்லை என்பது குறித்து வார்டனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விடுதி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணினி அறையில் கை அறுபட்ட நிலையில், சிறுமி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

    இதைக் கண்ட விடுதி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கனவே பந்தனா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரது இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மீட்கப்பட்ட அறையில் இருந்து கையை அறுக்க பயன்படுத்திய பிளேடு கண்டெடுக்கப்பட்டதால், இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆனால், தங்களது மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை எனவும், மகளின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை தீர விசாரிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசு உறைவிடப்பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Odisha
    ×