என் மலர்
நீங்கள் தேடியது "Adi Amavasi"
- அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர்.
- திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், ஆஞ்சநேயர் கோயில் முன்பு மோட்ச தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். அதேபோன்று ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.
பொதுமக்களுக்கு சுகாதார வசதிகளை ஊராட்சி சார்பாக செய்யப்பட்டு இருந்தது. ஆடி அமாவா சையை முன்னிட்டு அணைப் பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சி மாலப்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் கள்ளழகர் குதிரை வாகனத்தில் அமர்ந்து அலங்காரத்தில் காலை 4 மணிக்கு ஊர்வலம் தொடங்கி வான வேடிக்கையு டன் புறப்பட்டது.
பிள்ளை யார் நத்தம், கல்கோட்டை, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்கு பிள்ளை பட்டி, அணைப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனை வழிநெடுக பொதுமக்கள் வரவேற்று அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இவ்விழாவில் நிலக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
- மேற்கு தொடர்ச்சி மலை குகையில் உள்ள ஸ்ரீசடையாண்டி உள்ளிட்ட 21 தெய்வங்களை வணங்குவதற்காக கரடுமுரடான மலைப்பாதையில் ஏறிச்சென்று வழிபட்டனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
வெளியூர் பக்தர்கள் இங்கு வந்து கிடா மற்றும் சேவல்களை பலியிட்டு அன்னதானம் வழங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழாவில் கலந்து கொள்ள வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் மேற்கு தொடர்ச்சி மலை குகையில் உள்ள ஸ்ரீசடையாண்டி உள்ளிட்ட 21 தெய்வங்களை வணங்குவதற்காக கரடுமுரடான மலைப்பாதையில் ஏறிச்சென்று வழிபட்டனர்.
ஆடி அமாவாசைக்காக செம்பட்டி சித்தையன்கோட்டை, ஆத்தூர், அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி எடுத்து சடையாண்டி சுவாமியை வழிபட்டனர். திருவிழாவில், சின்னாள பட்டி, கன்னிவாடி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர் பக்தர்களும் லாரி, வேன், ஆட்டோக்களில் வந்து சடையாண்டி சுவாமியை வழிபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆத்தூர் காமராஜர் அணையில் யாரும் குளிக்க கூடாது என செம்பட்டி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.
சடையாண்டி கோவிலில் குடிதண்ணீர், சுகாதாரம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.






