என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் 17,000 டன் உரம் இருப்பு
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் 17,000 டன் உரம் இருப்பு

    • 22 வகையான வேளாண் பயிர்கள் சுமார் 1.17 லட்சம் ஹெக்டேரிலும், 175 வகையான தோட்ட க்கலை பயிர்கள் 1.09 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது
    • மாவட்டத்தில் யூரியா 3850 டன், டி.ஏ.பி. 2400 டன், பொட்டாஸ் 1535 டன், கலப்பு உரம் 8120 டன், சூப்பர் பாஸ்பேட் 960 டன் என மொத்தம் 16 ஆயிரத்து 865 டன் உரம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 22 வகையான வேளாண் பயிர்கள் சுமார் 1.17 லட்சம் ஹெக்டேரிலும், 175 வகையான தோட்ட க்கலை பயிர்கள் 1.09 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிர்களுக்கு தேவையான உரம் மாவட்டத்தில் உள்ள 555 சில்லறை விற்பனை உரக்கடைகள் மற்றும் 70 மொத்த விற்பனையாளர்கள் என 625 உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு வினியோ கம் செய்யப்படு கின்றன.

    இந்தக்கடைகளில் ராபி பருவத்துக்கு தேவையான உரம் போதிய அளவு கையி ருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராஜேஸ்வரி தெரிவித்து ள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் யூரியா 3850 டன், டி.ஏ.பி. 2400 டன், பொட்டாஸ் 1535 டன், கலப்பு உரம் 8120 டன், சூப்பர் பாஸ்பேட் 960 டன் என மொத்தம் 16 ஆயிரத்து 865 டன் உரம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது வரை மாவட்டத்துக்கு வழங்க வேண்டிய 4000 டன் யூரியா, 1000 டன் டி.ஏ.பி. உரம் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    Next Story
    ×