என் மலர்
தர்மபுரி
- தருமபுரி மாவட்டத்தில் கடும் பனி பொழிவு காணப்பட்டது.
- வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் தொடங்கி மாசி மாதம் வரை 4 மாதங்கள் வரை பனி பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ள சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று அதிகாலை முதல் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு காணப்பட்டது.
கடந்த வாரம் தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் நல்ல வெயில் அடித்து வந்தது. தொடர்ந்து பெய்த மழை நின்றதால், பனி பொழிய தொடங்கியுள்ளது. இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி நகரப்பகுதிகள், நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு இருந்தது அதிகாலை இருந்து காலை 8.30 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டது.
இதேபோன்று தொப்பூர் பகுதியான பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான மூடுபனியால் முன்னால் செல்லும் ஆட்கள் தெரியாத அளவிற்கு மூடுபனி நிலவியது.
அதியமான்கோட்டை, தொப்பூர் நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் தொடங்கியது போலவே காலை 8மணியை கடந்தும் பனி மூட்டம் குறையவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது.
இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
மேலும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏற்படும் பனிப்பொழிவின் அளவிற்கு மூடுபனி ஏற்பட்டுள்ளது. நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி சீதோசன நிலையானது ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு உள்ளிட்ட மலை பிரேதச பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவை போல காணப்பட்டது.
- தருமபுரி அருகே கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானர்கள்
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி அடுத்த பழைய தருமபுரி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, (38) மேஸ்திரி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 17 வயதில் மகள் உள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 17 ந்தேதி காலை கல்லூரி சென்றவர் மதியம் உணவு சாப்பிடுவதற்கு வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் கல்லூரி வரவில்லை என தெரிகிறது. இதனை யடுத்து கல்லூரி ஆசிரியை முனுசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலகோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே போன்று தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்லபுடையாம்பட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் (52) இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மகள் பிரியா (19) அருகே உள்ள கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லை என கடந்த 16 ந்தேதி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அன்று மதியம் 1 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும், உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் விசாரித்தும் அவர் குறித்த தகவல் தெரியவில்லை. இது குறித்து சின்னப்பையன் அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பிரியாவை தேடி வருகின்றனர்.
- சாம்ராஜ் தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் சத்யாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சாம்ராஜ், சத்யாவை வெட்டிக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மல்லாபுரம் அடுத்த செங்கானூரைச் சேர்ந்த சாம்ராஜ் (23) என்பவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் மகள் சத்யா (23) என்பவரை திருமணம் செய்ய விருப்பப்பட்டு பெண் கேட்டுள்ளார். ஆனால், சத்யாவுக்கு அவரது குடும்பத்தார் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையறிந்த சாம்ராஜ் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் சத்யாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்போது சத்யா மறுத்ததால், திடீரென சத்யாவை வெட்டிக்கொலை செய்தார். இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை கைது செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கல்பனா ஆஜராகி வாதாடி வந்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சாம்ராஜ், சத்யாவை வெட்டிக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து குற்றவாளி சாம்ராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
- 40 ஆண்டு காலமாக மருத்துவர் ராமதாஸ் இந்த மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தார்.
- அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இணைந்து சமூக நீதி என்ற கோட்பாட்டிற்கு ஒன்றிணைய வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள் சுற்றுப்ப யணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ளார்.
இந்நிலையில் தருமபுரி அடுத்த கோம்பை, ஒடசல் பட்டிதூர் உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடி யை ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: 40 ஆண்டு காலமாக மருத்துவர் ராமதாஸ் இந்த மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தார்.
தற்பொழுது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை ரத்து செய்து ஓராண்டு காலம் ஆகியும், இப்போ துள்ள அரசாங்கம் அதைக் கொடுப்பதற்கு மனமில்லை. அது கிடைக்க வேண்டும் என்ற நோக் கத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசிய லுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இணைந்து சமூக நீதி என்ற கோட்பாட்டிற்கு ஒன்றிணைய வேண்டும்.
இவ்வளவு நாட்கள் நாம் அடிமையாக இருந்து வந்தோம். இப்பொழுது பாட்டாளிகள் ஆளும் நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
- குண்டல்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் காயங்களுடன் ரோட்டில் அமர்ந்து இருந்தனர்.
- காரை நிறுத்த சொன்ன அன்புமணி ராமதாஸ் காரில் இருந்து கீழே இறங்கி சென்று காயம் அடைந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்க செய்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 9 மணியளவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கம்பைநல்லூர் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவுக்கு காரில் கட்சி நிர்வாகிகளுடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது குண்டல்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் காயங்களுடன் ரோட்டில் அமர்ந்து இருந்தனர்.
உடனே காரை நிறுத்த சொன்ன அன்புமணி ராமதாஸ் காரில் இருந்து கீழே இறங்கி சென்று காயம் அடைந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்க செய்து அவருக்கு ஆறுதல் கூறினார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து அந்த பெண்ணையும் காயம் அடைந்த மற்றவரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியிருக்கிறது. இந்த விபத்து குறித்து மதிகோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
- ரசிகர்கள் குவிந்ததால் தியேட்டர்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தருமபுரி,
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இதற்காக முதல் காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்கம் முன்பு குவிந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் 15 திரையரங்குகளில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் காலை 8 மணி முதல் தியேட்டர் முன்பு நின்று ஆரவாரத்தோடு பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
தருமபுரி நகரில் மட்டும் டி-மேக்ஸ் தியேட்டரில் 5 திரைகளிலும், மீதமுள்ள ஜி.எம், ஹரி, சந்தோஷ், ஆனந்த், உள்ளிட்ட தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் அதிகாலையில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் அடைந்தனர். இந்நிலையில் காலை முதலே தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிந்ததால் தியேட்டர்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
டிக்கெட்கள் ரூ. 500 முதல் 1000 வரை விற்பனை செய்யப்பட்டன. அதனை வாங்க ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கினார்கள். ஆனாலும் பலருக்கு டிக்கெட் கிடைக்காத காரணாத்தால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
- பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த சூரிய பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிவா காலணி தெருவை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன்.கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள்,1 மகன் உள்ளனர்.
இவரது மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் மகன் சூரிய பிரகாஷ் பி.இ.சி.எஸ்.இ படித்து முடித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாப்பாரப்பட்டி வீட்டிற்கு வந்த சூரிய பிரகாஷ் கடந்த சில நாட்களாக கடன் பிரச்ச னையில் சிக்கி தவித்துள்ளார்.
சம்பவத்தன்று மனவே தனையில் இருந்த சூரிய பிரகாஷ் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. உடனே அவரது தந்தை அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சூரிய பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இறப்பு குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரியில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது போலீசார் சிறையில் அடைத்தனர்.
- கடத்தலில் தலைமறைவான ராமன்கு மாரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜய குமார் தனிப்படை தருமபுரி - பாலக்கோடு சாலையில் மேற்கொண்ட வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது சந்தே கப்படும்படி அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் வேனில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேசன் அரிசி இருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட தருமபுரியை சேர்ந்த வேட்டராயன் மகன் சிங்காரவேலன் என்பவரை கைது செய்த போலீசார் அவருக்கு நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைத்தனர்.
இந்த கடத்தலில் தலைமறைவான ராமன்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலில் கைப்பற்றப்பட்ட 550 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்
- அரூர் வட்டத்தில் 316 பேருக்கு ரூ. 1. 31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
- கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், பொய்யப்பட்டிகிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் கி.சாந்திதலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 167 பயனாளிகளுக்கு ரூ.68.85 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைபட்டாக்கள், இணையவழி பட்டாக்கள், நத்தம் பட்டா மாறுதல் ஆணைகளையும், 87 பயனாளிகளுக்கு ரூ.16.49 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி, முதி யோர், முதிர்கண்ணி, ஆதர வற்ற விதவை, திருமணம், இயற்கை மரணம் உள்ளிட்ட உதவித்தொகைகள் மற்றும் விபத்து இழப்பீட்டு தொகை கள் வழங்கப்பட்டது.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்து றையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.5.75லட்சம் மதிப்பீட்டில் விதைகள், உயிரி உரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களையும்,தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில், குழத்தட்டு நாற்றுகள், நுண்ணீர் பாசனம் உள்ளிட்டநலத்திட்ட உதவி களையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 46 பயனாளிகளுக்கு ரூ.38.49 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகள் என மொத்தம் 316 பயனாளிகளுக்கு ரூ. 1.31 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கி.சாந்தி வழங்கினார்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, பன்னாரி சர்க்கரை ஆலை உள்ளிட்டதுறைகளின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டார்கள். இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்கள் கூறியதாவது;-
தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும்எ டுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், பெரியர்களுக்கும், பெண்க ளுக்கும், தாய்மார்க ளுக்கும், பொது மக்களுக்கும், நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்தி ட்டங்களை எடுத்துக்கூறும் விதமாகவும் இந்த முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளார். இவ்வாறு் அவர் கூறினார்.
- தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 87 மனுக்களுக்கு உடனடித் தீர்வு அளிக்கப்பட்டது
- வாரந்தோறும் நடக்கிறது
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் நிலத்தகராறு, அடிதடி, பணப்பிரச்சனை, குடும்ப தகராறு உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 87 மனு பெறப்பட்டு அதில் 87 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், மற்றும் காவல் ஆய்வாளர்கள் சர்மிளா பானு, பாலகிருஷ்ணன், அன்பழகன், காவல் உதவி ஆய்வாளர்கள் விஜயா செல்வி இளமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அனைவரும் நிற்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
- வாச்சாத்தி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்திற்க்கு வருகை தந்த மார்க்சிஸ்டு கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் வாச்சாத்தி கிராமத்திற்கு நேற்று வந்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பொதுமக்களிடம் கலந்துரை யாடினார். பின்னர் அவர்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அக்கிராம பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் வாச்சாத்தி வழக்கில் நீதி பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
வாச்சாத்தி கிராமத்தில் பாதிப்பு ஏற்பட்டு பல ஆண்டு காலமாகிறது. நீதி கிடைத்தும் எங்கள் கிராமத்திற்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. இந்த கிராமத்தில் பல பேருக்கு சொந்த விவசாய நிலம், வீடு, இல்லை. கூலி வேலைக்காக கோய முத்தூர்,ஈரோடு,உள்ளிட்ட வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்து வருகிறோம் ,
இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை ,பொது கழிவறை, சுகாதாரம வளாகம் இல்லை ,சமூதாய கூடம் இல்லை ,விஏஓ அலுவலகம் அமைத்து தரவேண்டும், மாயானம் வசதி இல்லை. பாறைகள் நிறைந்த கரடு முரடான இடத்தில் உள்ளது இறந்தவர்களை புதைப்பதற்க்கு குழி கொண்ட முடியவில்லை என்றனர்.
மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில்;- போராட்டத்தில் நீங்கள் உறுதியாக நின்டு நீதியை பெற்று உள்ளீர்கள். எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படு கிறார்களோ ,பாதிக்கப்ப டுபவர்களுக்கு ஆதரவாக நின்று குரல்கொ டுக்கவேண்டும். பணக்கா ரர்க ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படுவதில்லை, சாதா ரண ஏழை விளிம்புநிலை அடித்தட்டு மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.இவர்க ளுக்கு நாம் துணைநிற்க்க வேண்டும்.
வாச்சாத்தி கிராம மக்களின்கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் நேரில் சந்தித்து வலியு றுத்தியுத்தி யுள்ளோம் நீதிமன்ற தீர்ப்பில் நிறைவேற்ற வேண்டிய அம்சம் குறித்தும் இந்த கிராமத்திற்க்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினோம், முதல்வரும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
- தருமபுரி அருகே கல்லூரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம் ஆனார்கள்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி.
இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த 12-ந் தேதி சிறுமியின் தாய் கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் காணவில்லை. இதனைய டுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்கா–ததால் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாண வியை தேடி வருகின்றனர்.
இதேபோல் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சாமி செட்டிபட்டி அருகே உள்ள பங்கு நத்தம் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடு முறை என்பதால் வீட்டி லேயே இருந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வெளியே வேலைக்கு சென்றவர்கள் மாலை திரும்பி வீட்டில் பார்த்த போது சிறுமியை காண வில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
இதே போன்று தருமபுரி மாவட்டம் மாரவாடி அடுத்த கதிர்நாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா (43). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நன்னடத்தை அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து 15 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் தனது தாய் வீட்டில் கதிர்நாயக்கனளி கிராமத்தில் மகள் ரஞ்சனா தேவி (23) என்பவருடன் வசித்து வந்தார். ரஞ்சனா தேவி 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து தாய் இந்திரா கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன ரஞ்சனா தேவியை தேடி வரு கின்றனர்.






