என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பாலக்கோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
    • சக்திவேல் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

     தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சக்திவேல் (வயது 21). இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அத்தையிடம் படத்திற்கு செல்வதாக கூறி வெளியில் சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் பாலக்கோடு தருமபுரி இடையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் 9 மாதங்களில் வட்டாரப் போக்குவரத்துறை வாகன தணிக்கையில் மூலம் ரூ. 2.42 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    • 513 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல், செப்- 2023 வரை 9 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் அலுவலக பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அதில், ஏறத்தாழ 19,500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 5740 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 513 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

    மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 189 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 60 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 113 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 3510 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 285 வாகனங்களுக்கும், காப்புச்சான்று, புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 740 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 432 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 222 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.

    மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.87.72,240 மற்றும் இணக்க கட்டணமாக ரூ. 62,50,950 ஆக மொத்தம் ரூ.1,50,23,190/- உடனடியாக வசுலிக்கப்பட்டது. மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.92.01,385 நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.2,42,24,575/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் 11,231 வாகனங்களுக்கு இ செலான் மூலம் ரூ.79,13,425- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அரூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • கணக்கெடுப்பிற்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்

    அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் வழங்கினார்.துணை தலைவர் சூர்யாதன பால் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் முல்லை ரவி ஆகியோர் உடனிருந்தார்.

    பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது வீடுகளுக்கு கணக்கெடுப்பு பணிகளுக்கு வரும் போது வீட்டின் உரிமையாளர்கள் கழிவு சேகரிப்பு, தொட்டியை சுத்தம் செய்தல், பொது சமுதாய மற்றும் நிறுவன கழிப்பறைகளை சுத்தம் செய்தல், கழிவு நீர் குழாய் பராமரிப்புக்கள், கழிவுநீர் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், மழை நீர் வடிகால் சுத்தம் செய்தல் ஆகிய வைகள் தங்களது வீடுகளில் இருந்தால் கணக்கெ டுப்பிற்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தை களின் கல்விக்கான கல்வி உதவித்தொகை முறைப்படுத்தப்பட்ட உடல்நல பரிசோதனை மற்றும் இலவச ஆயுள் காப்பீடு பணியில் பாதுகாப் பிற்கான திறன் பயிற்சி அனைவருக்கும் அடையாள அட்டைகள் ஆகியவைகள் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. 

    • காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.
    • விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் விதிமுறைகளை மீறி விதை விற்பனையில் ஈடுபட்ட தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:-

    விதை விற்பனையாளர்கள் விதிமுறைகளை தவறாமல் கடைப் பிடித்தும், விவசாயிகளுக்கு தரமும், உரிய முளைப்புத் திறனும் கொண்ட பருவத்துக்கு ஏற்ற விதைகளை விநியோகிக்க வேண்டும்.

    விதை இருப்புப் பதிவேட்டில் விற்பனை செய்த விதைகளை தினமும் கழித்து இருப்பினை சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமம் கடையில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

    விதை விற்பனையின் போது பயிர், ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, விலை, விவசாயி பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, கடைக்காரரின் கையொப்பத்துடன் கூடிய ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

    விதைகளை உர சிப்பங்கள், பூச்சி மருந்துகளின் அருகே வைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோரின் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

    விதை விநியோகதாரர்கள் அனைத்து குவியல்களுக்கும் பணி விதை மாதிரி எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டு தரத்தை உறுதிசெய்த பிறகே விற்பனையாளருக்கு அனுப்ப வேண்டும். அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.

    எனவே, விதைகள் சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் கீழ் உள்ள விதிகளின்படி விதை விற்பனையாளர்கள் கவனத்துடனும், விவசாயிகளின் நலன் சார்ந்தும் விதை விற்பனையில் ஈடுபட வேண்டும்.

    விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகள் பருவத்துக்கு ஏற்றவையா என்பதை அறிந்தும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் பகுதி வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் விதிகளை மீறி விதை விற்பனை செய்த தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அதியமான் கோட்டம் புனரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று (20.10.2023) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

    செய்தித்துறை அமைச்சர் சட்டமன்ற பேரவை–யின் மானிய கோரிக்கையில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1 கோடி (ரூபாய் ஒரு கோடி) மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

    இதனை தொடர்ந்து, கடந்த 15.03.2023 முதல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்புனரமைப்பு பணிகளை நேற்று தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி, வட்டமான அமைப்பில் ஆத்திச்சூடி அமைக்கும் பணி, வர்ணம் பூசும் பணி, புல்தரை அமைக்கும் பணி, சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணி கள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரூரில் விதிமுறைகளை மீறிய விதை விற்பனை நிலைய உரிமம் ரத்து செய்யப்பட்டது.
    • விதைகள் முளைக்காத காரணத்தால் அதிகாரிகள் நடவடிக்கை

    தருமபுரி மாவட்டம் அரூரில் விதிமுறைகளை மீறி விதை விற் பனையில் ஈடுபட்ட தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் வெளி–யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது: விதை விற்பனையா ளர்கள் விதிமுறைகளை தவறாமல் கடைப் பிடித்தும், விவசாயிகளுக்கு தரமும், உரிய முளைப்புத் திறனும் கொண்ட பருவத்துக்கு ஏற்ற விதைகளை விநியோகிக்க வேண்டும்.

    விதை இருப்புப் பதிவேட்டில் விற்பனை செய்த விதைகளை தினமும் கழித்து இருப்பினை சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமம் கடையில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

    விதை விற்பனையின் போது பயிர், ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, விலை, விவசாயி பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, கடைக்காரரின் கையொப்பத்துடன் கூடிய ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

    விதைகளை உர சிப்பங்கள், பூச்சி மருந்துகளின் அருகே வைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோரின் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்–தரமாக ரத்து செய்யப்படும்.

    விதை விநியோகதா ரர்கள் அனைத்து குவியல்க ளுக்கும் பணி விதை மாதிரி எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டு தரத்தை உறுதிசெய்த பிறகே விற்பனையாளருக்கு அனுப்ப வேண்டும். அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.

    எனவே, விதைகள் சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் கீழ் உள்ள விதிகளின்படி விதை விற்பனை யாளர்கள் கவனத்துடனும், விவ சாயிகளின் நலன் சார்ந்தும் விதை விற்பனையில் ஈடுபட வேண்டும்.

    விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகள் பருவத்துக்கு ஏற்றவையா என்பதை அறிந்தும், ஏதேனும் சந்தே கம் இருந்தால் தங்கள் பகுதி வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    விதைகள் போன்ற வற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் விதிகளை மீறி விதை விற்பனை செய்த தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.
    • வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    சென்னை போக்குவரத்து ஆணையர் ஆயுதபூஜை தொடர் உட்பட விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்து சிறப்பு தணிக்கை மேற்கொண்டு அதிககட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதை தொடர்ந்து 18ந்தேதி முதல் ஆம்னி பஸ் சிறப்பு தணிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடு சாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் தொடர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில் அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பிற மாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.

    இவ்வாகன சோதனையில் அரசுக்கு மொத்தம் ரூ.1,47,500- (ரூபாய் ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

    • தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அன்புமணி ராமதாஸ் உதவி செய்தார்.
    • சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனாது.

        தருமபுரி மாவட்டம் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 9 மணியளவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கம்பைநல்லூர் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவுக்கு காரில் கட்சி நிர்வாகிகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது குண்டல்பட்டி கூட்ரோடு அருகே வந்த போது இரு சக்கர வாக னத்தி்ல் சென்றவர்கள் விபத்தில் காயங்களுட்ன ரோட்டில் அமர்ந்து இருந்தனர்.

    உடனே காரை நிறுத்த சொன்ன அன்புமணி ராமதாஸ் காரில் இருந்து கீழே இறங்கி சென்று காயம் அடைந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்க செய்து அவருக்கு ஆறுதல் கூறினார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து அந்த பெண்ணையும் காயம் அடைந்த மற்றவரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கி யிருக்கிறது. இந்த விபத்து குறித்து மதிகோண் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நீட், ஜி.எஸ்.டி கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ், திமுகவினர், அதனை ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பவ்ர்கள் பா.ஜ.கவினர் என்று சீமான் கூறினார்.
    • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தருமபுரி வந்தார்.

    தருமபுரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். அப்போது நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு எங்கள் மீது அதிக நம்பிக்கை எற்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தேர்தல் மட்டும் தான் வந்து செல்கிறது. ஆனால் வளர்ச்சி இல்லை. அரசியல் என்பது சாதி, மதம், சாராயம், பணம், இலவசம், மானியம் தான். நாங்கள் இலவசம் வேண்டாம் என்கிறோம். கல்வியை மட்டும் இலவசமாக கொடுங்கள் என்று கேட்கிறோம்.

    மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறீங்க. இதை எத்தனை மாதம் கொடுப் பார்கள். எங்கள் தாய்மார்கள் விவசாய நிலத்தில் வேலை செய்கிறார்கள் என்று மாதம் ரூ.5000 கூலி கொடுக்கிறாங்க. நீங்க கொடுக்கிற 1000, ஒரு நாளைக்கு 30 ரூபாய் என்று கணக்குபோட்டு கொடுக்கிறீர்கள். அரிசியில் கோலம் போட்டு, எறும்புகளுக்கு உணவை வைத்தோம். எங்களை அரிசிக்கு இன்று கையேந்த வைத்துவிட்டார்கள்.

    சாதி, மாத போதை ஏறிட்டவனுக்கு, அவன் இறந்தாலும் அது போகாது. அற்ப உணர்ச்சிக்கு மனிதன், கடவுள் என்பதை வணங்குவதோடு வைக்க வேண்டும். வீதியில் இழுத்துவிடக் கூடாது. ஆனால் இதை பிரதமரே செய்கிறார். மதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சாதி, மதம் எதுவும் அண்ட முடியாத பெரு நெருப்பாக, இன்றைய தலைமுறை உருவாகி வர வேண்டும்.

    ஆளுநர் பதவியே தேவை இல்லை. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத உரிமை, நியமனம் செய்யப்பட்டவருக்கு என்ன உரிமை இருக்கு? காவிரி விவகாரத்தில், கர்நாட காவில் தமிழ் திரைப்படம் தடை என்று வட்டாள் நாகராஜ் சொல்கிறார். ஆனால், நாங்கள் நினைத்தால், எங்களாலும் தடை செய்ய முடியும். காவிரி பிரச்சினை வந்தால், மட்டும் விட்டால் வட்டாள் நாகராஜ் வருவார்.

    பங்காரு அடிகளாருடன் நான் நெருக்கமாக இருந்தேன். எல்லோரும் கருவறைக்குள் வரலாம் என்ற புரட்சியை உருவாக்கியவர். நானே உள்ளே சென்று பூஜை செய்துள்ளேன். அவர் இறப்பை கேட்டு அதிர்ச்சி யடைந்தேன். பேரிழப்பு தான். பயணம் முடிந்து நேரில் செல்ல உள்ளேன். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு வரலாற்று அடையாளங்கள் இல்லை. சுதந்திர போராட்டத்தில் பாடப்பட்ட தலைவர்களுக்கு தெரு பெயர்,

    வ.உ.சி.க்கு வரலாறு இல்லை. ஆனால் வல்லபாய் படேலை படிக்கச் சொல்கிறீர்கள். நீட், ஜி.எஸ்.டி. கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ், அவர்களை ஆதரித்தவர்கள் தி.மு.க., அதை ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பவர்கள் பா.ஜ.க. நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளை, தோடு கழற்ற சொல்கிறார். காதில் உள்ள தோட்டில், பிட்டு இருக்கும் என்றால், வாக்கு எந்திரத்தில், ஏன் தவறு நடக்காது?

    சி.ஏ.ஜி. அறிக்கையின் மீது மோடி பதில் பேச மாட்டார். ஆனால் மன்கீபாத் பெட்டிக்குள் மட்டும் அவர் பேசுவார். நாடாளுமன்றத்தில் யார் பேசினால் திரும்பி கூட பார்க்கமாட்டார்.ஈழத்தில் என்ன நடந்ததோ அதே தான் தற்போது பாலஸ்தீனத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • நல்லம்பள்ளி அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மனைவி இறந்த கவலையில் விபரீத முடிவு.

        தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள முத்துபூசாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 49). இவர் லாரி டிரைவராக வேலைப் பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் இருந்த நிலையில் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் பத்மாவதியை மலையூர்காடு பகுதியில் உள்ள உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் பன்னீர்செல்வம் சம்பவத்தன்று செல்போனில் மகளை தொடர்பு கொண்டு மனைவி இன்றி வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி போனை ஆப் செய்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து முத்துபூசாரியூர் சென்று பத்மாவதியும் அவரது கணவரும் பார்த்தபோது பன்னீர்செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருந்தார். இது குறித்து மகள் பத்மாவதி அளித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி. வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பாலக்கோடு அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது பதியப்பட்டுள்ளது.
    • சமூக நல அலுவலர் புகாரின் பேரில் நடவடிக்கை.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள புலிக்கரை- சென்னம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பாலக்கோடு தாலுகா மோதுகுல அள்ளி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பூவரசன் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்து இருப்பதாக பாலக்கோடு மகளிர் ஊர்நல அலுவலருக்கு வந்த புகாரின் பேரில் அவர் பாலக்கோடு் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 17 வயதான சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், வாலிபர் பூவரசனை காதலித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி வாலிபர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது வாலிபர் சிறுமிக்கு தாலி கட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து குழந்தை திருமண சட்டத்தின்படி வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி வராஹி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

        தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வராஹி அம்மன் கோவில்களிலும் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டவராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உபகார பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீ அஷ்டவராஹி அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இந்த வழி பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

    மகாகாளி வராஹி அம்மன்

    தருமபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதேபோன்று தருமபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள16 அடி உயரமுள்ள மகாகாளி வராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×