என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலி
- பாலக்கோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
- சக்திவேல் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சக்திவேல் (வயது 21). இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அத்தையிடம் படத்திற்கு செல்வதாக கூறி வெளியில் சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் பாலக்கோடு தருமபுரி இடையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






