என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • கடத்தூர்-பொம்மிடி சாலையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு.

    தருமபுரி மாவட்டம், கடத்தூர்-பொம்மிடி சாலையில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணிகள் செய்து வருகின்றனர். அப்போது இச்சாலை இருபுறங்களிலும் வாக னங்களின் கூட்டத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    இதயைடுத்து ஆக்கிர மைப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தருமபுரி கடத்தூர் சாலையில் புதிய தார்ரோடு அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

    இதில் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தரமாக வேலைகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெடுஞ்சாலை துறையினர் பலர் உடனிருந்தனர்.

    • கொள்ளையர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
    • கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்தவன் இதுவரை சிக்கவில்லை.

    தருமபுரி:

    காரிமங்கலம் அருகே 6 கிலோ தங்கம் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் தொழிலதிபர்களை குறி வைத்து கொள்ளையடித்தது அம்பலமானது. மேலும், கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    கோவையைச் சேர்ந்த நகை கடை உரிமையாளர் பிரசன்னா என்பவர் கடந்த மாதம் 28-ந்தேதி கர்நாடகாவில் இருந்து தங்க நகைகள் வாங்கி காரில் புறப்பட்டு கோவைக்கு வந்தார்.

    அவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல் ஒன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பூலாம்பட்டி அருகே, வண்டியை வழிமறித்து உள்ளே இருந்தவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி காருடன் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ. 60 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதனை அடுத்து நகை கடை உரிமையாளர் பிரசன்னா காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

    அதில் அவர்கள் கொள்ளையடித்து தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் காரில் சுற்றி அலைந்து விட்டு மறுநாள் தப்பி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த குற்றவாளிகளை 10 தனிப்படையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இதில் சென்னையில் கடத்தப்பட்ட தங்கம் 6 கிலோ மற்றும் ரூ. 19.50 லட்சம் பணம் பிடிப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் சுஜித், சரத், பிரவீன் தாஸ், ஆகிய 3 பேரை கோவையில் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சிகாபுதீன், சைனு, அகில், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சீரல் மேத்யூ ஆகிய 2 பேரையும் போலீசார் சென்னையில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து 9 குற்றவாளிகளிடம் இருந்து 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 60 லட்சம் பணத்தில் இருந்து ரூ. 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சொகுசு கார் வாங்கியுள்ளனர். இதேபோல் வேறு ஒரு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது ஒரு கார் வாங்கியுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார் என மொத்தம் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, ஆகியோர் நேரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், நகைக்கடை வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து திட்டம் போட்டு அவர்களிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களின் செல்போன் அழைப்புகளை எளிதில் கண்டுபிடித்து விடாத படியான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும், இவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

    கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்தவன் இதுவரை சிக்கவில்லை. அவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் பணத்தை மட்டுமே குறி வைத்து திட்டமிட்டு கொள்ளையடித்து பங்கு பிரித்துக்கொண்டு தப்பி செல்லும் கும்பல் என்றும், பெங்களூரில் இருந்து வந்த காரில் பணம் மற்றும் தங்கம் இருப்பதை நோட்டமிட்டு அறிந்து கைவரிசை காட்டியிருக்கின்றனர்.

    உடனடியாக தங்கத்தை விற்றால் எப்படியும் பிடிபட்டு விடுவோம் என நினைத்து பதுக்கி வைத்திருந்தனர். அதனையும் போலீசார் மீட்டுள்ளனர்.

    தலைமறைவாகியுள்ள கும்பலின் முக்கிய தலைவன் உட்பட 6 பேரை பிடிக்க போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டை தொடங்கியிருக்கிறது.

    கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையர்கள் 9 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை.
    • ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகிறது.

    தருமபுரி மாவட்டம் கடத்தூர், தாளநத்தம், புட்டிரெடிப்பட்டி, தா.அய்யம்பட்டி, கேத்து ரெட்டிபட்டி, இராமியணஅள்ளி, தென்கரை கோட்டை, நத்தமேடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்களில் கிழங்கு, ரோஜா, சம்பங்கி, தக்காளி, கம்பு, சாமை, சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானிய வகைகள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகின்றது.

    ஆனால் அப்பொருட்களை உரிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும் போது பகுதியில் 1.50 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யபட்டுள்ளது. தற்போது கிலோ ஏழு முதல் பத்து ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் அறுவடை கூழிகூட இல்லாத நிலையில் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டு விடுகின்றனர்.

    செடி நடவு, யூரியா, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய செலவு செய்து ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது அறுவடை செய்யும் தக்காளியானது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து வருகின்றனர்.

    எனவே கடத்தூரை மையமாகக் வைத்து உழவர் சந்தை மற்றும் குளிர்பதன கிடங்குகள் கட்டித் தருவதன் மூலம் விவசாயிகள் விலை பொருட்களை குடோனில் வைத்து விலை ஏற்றத்துடன் விற்க முடியும். எனவே அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக விவசாயிகளின் நலன் அக்கறை கொண்டு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
    • திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டார்.

    ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவருக்கு 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று கடிதம் அனுப்புவதற்காக கழக இளைஞர் அணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு மாபெரும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி மாவட்ட அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், மாணவர் அணி அமைப்பாளர் பெரியண்ணன் ,மருத்துவர் அணி அமைப்பாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு நீட் விலக்கு நம் இலக்கு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.அதனையடுத்து மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

    முன்னதாக நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் ஏன் நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்தும் காணொலி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியதை மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு கேட்டனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர் வைகுந்தம், பெரியண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மற்றும் திமுக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • கலெக்டர் சாந்தி உத்தரவு.

    தருமபுரி மாவட் டத்தில் உள்ள 14 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றிய ஆறுமுகம், பென்னாகரம் வட்டாட்சியராகவும், காரிமங்கலம் வட்டாட்சியராக பணியாற்றிய ரமேஷ், அரூர் வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் நிலம் எடுப்பு பிரிவில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய, பார்வதி நல்லம்பள்ளி வட்டாட்சியராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் தனி வட்டாட்சியராக இருந்த ரஜினி, காரிமங்கலம் வட்டாட்சியராகவும், மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்ட நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த கலைச்செல்வி, பாலக்கோடு வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் அரூர் வட்டாட்சியராக இருந்த பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும், பென்னாகரம் வட்டாட்சியராக இருந்த சவுக்கத் அலி, தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும், பாலக்கோடு வட்டாட்சியராக பணியாற்றிய ராஜா, நெடுஞ்சாலை துறை நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக பணியாற்றிய சரவணன், மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்ட நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும், நல்லம்பள்ளி தனி வட்டாட்சியராக இருந்த லட்சுமி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் ஆகவும், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக ராதாகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி வட்டாட்சியராக சுகுமார், நல்லம்பள்ளி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக அருண் பிரசாத் என 14 வட்டாட்சியர்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் தலைவர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

    • சாமனூர், படகாண்டஅள்ளி பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சிறுத்தை இரவு நேரங்களில் விவசாய நிலங்களிலும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புக்களை நோக்கி சிறுத்தை வந்து செல்வதை வனத்துறையினர் கண்டு அறிந்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனூர், படகாண்டஅள்ளி கிராமத்தில் மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்பு பிராணிகளை கடித்து சென்று உள்ளது.

    இதையடுத்து திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்ததை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

    அதனை உற்று பார்த்த போது அது சிறுத்தை என தெரிய வந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்தும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்டஅள்ளி பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறுத்தை இரவு நேரங்களில் விவசாய நிலங்களிலும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புக்களை நோக்கி சிறுத்தை வந்து செல்வதை வனத்துறையினர் கண்டு அறிந்துள்ளனர்.

    இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், மேலும் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையால் கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும். அதே போல் வனவிலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சாரம் வைப்பது, நாட்டு வெடிகுண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

    அவ்வாறு ஈடுபடும் நபர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    • அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
    • வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் லட்சுமணன் (வயது 50). இவர் எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் சிறிய அளவிலான பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.

    இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக விரைந்து வந்த நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான மூத்த தீயணைப்பு அலுவலர் நரசிம்மன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் தரை மட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.

    வெடி விபத்து குறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் டி. எஸ்.பி மகாலெட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதல் கட்ட விசாரணையில் சமீப காலமாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்துள்ளது என்பதும், இந்த குடோனில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு போலீசாரால் கைப்பற்றபட்ட வெடி பொருட்கள் குறித்தான வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

    வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெடிவிபத்து நடந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. 

    • தருமபுரியில் வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்தது.
    • உழவர் சந்தையில் ரூ. 78 விற்கப்படுகிறது.

    தருமபுரி 4 ரோடு அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் மொத்த விலை காய்கறி மார்க் கெட்டும் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க் கெட்டிற்கு தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, ஓசூர், மற்றும் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் தினசரி மார்க்கெட்டிற்கு வருகிறது.

    இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, கேரளா, உள்ளிட்ட பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழ கத்தில் உள்ள பிற மாவட்டங் களில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

    அதே போல் சின்ன வெங்காயமும் கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் அதிக அளவில் விற்ப னைக்கு கொண்டு வரப் பட்டது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்திலும் திருச்சி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து வர தொடங்கியதால் விலை குறைந்து 1 கிலோ சின்னவெங்காயம் ரூ.30 வரை விற்பனை ஆனாது.

    இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது குறைவாக இருப்ப தால் விலை மீண்டும் அதிக ரிக்க தொடங்கி உள்ளது. அதாவது கடந்த இரண்டு வாரமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ75 -க்கு விற்பனை செய்யப் பட்டது. விலை உயர்வு காரணமாக விற்பனையும் குறைந்து காணப்பட்டது.

    தருமபுரி உழவர் சந்தையில் நேற்று சின்ன வெங்காயம் கிலோ ரூ 78-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அதே விலையில் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயம் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டத்திலிருந்து வருவது குறைந்து உள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது.

    இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ரூ.32-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி வெங்கயம் தொடர்ந்து விலையேற்றமாக உள்ளது நேற்று முன்தினம் ரூ. 48க்கும் நேற்று ரூ. 50க்கும் இன்று ரூ. 52க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

    • தருமபுரியில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
    • 63 குண்டுகள் முழங்க எஸ்.பி., மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்

    தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக் கப்பட்டது. கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 நாள் இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணு வத்தினர் பதுங்கியிருந்து நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.

    கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21- ந்தேதி காவலர் வீர வணக்க நாள் கடைப்பி டிக்கப்படுகிறது.

    தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் இந்த ஆண்டு தருமபுரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த 189 காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

    இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் வீர வணக்க நினைவு தூணுக்கு தருமபுரி மாவட்ட எஸ்.பி என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அத னைத் தொடர்ந்து காவல் துறையின் சோக கீதங்க ளுடன் 63 குண்டுகள் முழங்க காவல் துறையினர் வீரவ ணக்கம் செலுத்தினர்.

    இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சி யில் தருமபுரி மாவட்ட காவல் துணை கண்காணிப் பாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரியில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
    • சன்னமல்லி கிலோ ரூ. 600க்கு விற்பனையானது.

     ,

    தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டி கை தவிர, புரட்டாசி மாதம் முழு வதும் பூக்களின் விலை கடும் சரிவை நோக்கி சென்றது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பூக்கள் பறிக்கும் கூலி யாட்கள் பாதிப்பு அடைந்த னர்.

    இதனைத் தொடர்ந்து சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை தருமபுரி நகர பஸ் நிலை யத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த விவசாயிகள் விலை யில்லாமல் பூக்களை பூ மார்க்கெட்டிலேயே ஆங்காங்கே விட்டுவிட்டு சென்ற அவலம் ஏற்பட்டது.

    மேலும் பறித்து பூக்களை விலை இல்லாததால் சாலை ஓரங்களில் கொட்டி விட்டு சென்றனர். கடந்த திங்கள் முதல் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. நாளை மறுநாள் வரும் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை ஒட்டி தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று பூ மார்க்கெட்டில் தரமுள்ள சாமந்திப்பூ கிலோ ரூ. 200 , சம்பங்கி கிலோ ரூ. 200 , ரோஜாப்பூ கிலோ ரூ. 160 , அரளி கிலோ ரூ. 400 , குண்டுமல்லி கிலோரூ. 600 , சன்னமல்லி கிலோ ரூ. 600 , செண்டு மல்லி கிலோ ரூ. 50, என விற்பனை செய்யப்ப டுகிறது.

    இந்த பூக்களின் விலை உயர்வால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.  

    • தருமபுரியில் விதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பஸ்களுக்கு ரூ1.47.50 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
    • வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

    சென்னை போக்குவரத்து ஆணையர் ஆயுதபூஜை தொடர் உட்பட விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்து சிறப்பு தணிக்கை மேற்கொண்டு அதிககட்ட ணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதை தொடர்ந்து 18ந்தேதி முதல் ஆம்னி பஸ் சிறப்பு தணிக்கை வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோ தரன், தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக் கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடு சாமி,அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் தொடர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில் அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பிற மாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப் பட்டு தருமபுரி வட்டார போக்கவரத்து அலுவலகத்தில்ல் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. மேலும், அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.

    இவ்வாகன சோதனையில் அரசுக்கு மொத்தம் ரூ.1,47,500- (ரூபாய் ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார். 

    • தருமபுரி கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • அந்த பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட ஏமக்குட்டியூர் பகுதியில் சிறிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்க ளாக மந்தமாக நடைபெற்று வருகிறது. பாலம் பணி நடைபெற்று வருவதால் நெடுஞ்சா லைத்துறையினர் போக்குவரத்தை மாற்றி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் எதிரே செல்லும் ராமன்நகர் பகுதியில் மாற்றி அமைத்த னர்.

    இதனால் அப்பகுதியில் ஏராளமான பஸ்கள், மற்றும் வாகனங்கள் இயக் கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்ளுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. ஏற்கனவே பழுதான சாலை யாக இருந்து வந்த நிலையில் தற்போது சேறும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதி பொது மக்கள் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இது வரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்காத நிலையில் நேற்று சகதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பிரெட் டிப்பட்டி அதிமுக சட்ட மன்ற உறுப்பி னர் கோவிந்த சாமி எம்.எல்.ஏ நெடுஞ்சா லைத் துறையினரை நேரில் வரவழைத்து இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவை யான சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த வழியாக வந்த தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து ஒப்பந்ததாரரை அழைத்து விரைவில் விரைந்து பணியை முடிக்க வேண்டு மென அறிவுறுத்தினார்.

    பின்னர் சாலையை தற்காலி கமாக சீர் செய்ய வேண்டும் இல்லையெனில் இவ்வி டத்தை விட்டு செல்ல மாட்டேன் என பாப்பி ரெட்டிபட்டி எம். எல்.ஏ கோவிந்தசாமி கூறிய பின்பு அப்பகுதியில் தற்கா லிகமாக ஜல்லி கலவையை கொட்டி சீர் செய்தனர். அதனை தொடர்ந்து எம்.எல். ஏ கோவிந்தசாமி கூறியதாவது;-

    இப்பகுதியில் பல வருடங்களாக சாலை பழு தான நிலையில் பலமுறை கலெக்டரிடம் மனு அளித் தும் கண்டு கொள்ள வில்லை. தற்போது மழை யின் காரணமாக சேறும் சகதியுமாக மாறி போனதால் இப்பகுதி பொது மக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாண விகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமத்திறாகுள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் சாலையை உடனடியாக சீர் செய்யா விடில் தன்னுடைய தலை மையில் உண்ணாவி ரதம் போராட்டம் நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×