என் மலர்
நீங்கள் தேடியது "நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்"
- தருமபுரி கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
- அந்த பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட ஏமக்குட்டியூர் பகுதியில் சிறிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்க ளாக மந்தமாக நடைபெற்று வருகிறது. பாலம் பணி நடைபெற்று வருவதால் நெடுஞ்சா லைத்துறையினர் போக்குவரத்தை மாற்றி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் எதிரே செல்லும் ராமன்நகர் பகுதியில் மாற்றி அமைத்த னர்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான பஸ்கள், மற்றும் வாகனங்கள் இயக் கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்ளுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. ஏற்கனவே பழுதான சாலை யாக இருந்து வந்த நிலையில் தற்போது சேறும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதி பொது மக்கள் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இது வரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்காத நிலையில் நேற்று சகதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பிரெட் டிப்பட்டி அதிமுக சட்ட மன்ற உறுப்பி னர் கோவிந்த சாமி எம்.எல்.ஏ நெடுஞ்சா லைத் துறையினரை நேரில் வரவழைத்து இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவை யான சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த வழியாக வந்த தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து ஒப்பந்ததாரரை அழைத்து விரைவில் விரைந்து பணியை முடிக்க வேண்டு மென அறிவுறுத்தினார்.
பின்னர் சாலையை தற்காலி கமாக சீர் செய்ய வேண்டும் இல்லையெனில் இவ்வி டத்தை விட்டு செல்ல மாட்டேன் என பாப்பி ரெட்டிபட்டி எம். எல்.ஏ கோவிந்தசாமி கூறிய பின்பு அப்பகுதியில் தற்கா லிகமாக ஜல்லி கலவையை கொட்டி சீர் செய்தனர். அதனை தொடர்ந்து எம்.எல். ஏ கோவிந்தசாமி கூறியதாவது;-
இப்பகுதியில் பல வருடங்களாக சாலை பழு தான நிலையில் பலமுறை கலெக்டரிடம் மனு அளித் தும் கண்டு கொள்ள வில்லை. தற்போது மழை யின் காரணமாக சேறும் சகதியுமாக மாறி போனதால் இப்பகுதி பொது மக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாண விகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமத்திறாகுள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் சாலையை உடனடியாக சீர் செய்யா விடில் தன்னுடைய தலை மையில் உண்ணாவி ரதம் போராட்டம் நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.






