search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டுபூக்களின் விலை கிடு கிடு உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    தருமபுரி பூ மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள பூக்கள் குவியலை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டுபூக்களின் விலை கிடு கிடு உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

    • தருமபுரியில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
    • சன்னமல்லி கிலோ ரூ. 600க்கு விற்பனையானது.

    ,

    தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டி கை தவிர, புரட்டாசி மாதம் முழு வதும் பூக்களின் விலை கடும் சரிவை நோக்கி சென்றது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பூக்கள் பறிக்கும் கூலி யாட்கள் பாதிப்பு அடைந்த னர்.

    இதனைத் தொடர்ந்து சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை தருமபுரி நகர பஸ் நிலை யத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த விவசாயிகள் விலை யில்லாமல் பூக்களை பூ மார்க்கெட்டிலேயே ஆங்காங்கே விட்டுவிட்டு சென்ற அவலம் ஏற்பட்டது.

    மேலும் பறித்து பூக்களை விலை இல்லாததால் சாலை ஓரங்களில் கொட்டி விட்டு சென்றனர். கடந்த திங்கள் முதல் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. நாளை மறுநாள் வரும் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை ஒட்டி தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று பூ மார்க்கெட்டில் தரமுள்ள சாமந்திப்பூ கிலோ ரூ. 200 , சம்பங்கி கிலோ ரூ. 200 , ரோஜாப்பூ கிலோ ரூ. 160 , அரளி கிலோ ரூ. 400 , குண்டுமல்லி கிலோரூ. 600 , சன்னமல்லி கிலோ ரூ. 600 , செண்டு மல்லி கிலோ ரூ. 50, என விற்பனை செய்யப்ப டுகிறது.

    இந்த பூக்களின் விலை உயர்வால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.

    Next Story
    ×