என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை
    X

    விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை

    • தருமபுரி மாவட்டத்தில் விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை.
    • ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகிறது.

    தருமபுரி மாவட்டம் கடத்தூர், தாளநத்தம், புட்டிரெடிப்பட்டி, தா.அய்யம்பட்டி, கேத்து ரெட்டிபட்டி, இராமியணஅள்ளி, தென்கரை கோட்டை, நத்தமேடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்களில் கிழங்கு, ரோஜா, சம்பங்கி, தக்காளி, கம்பு, சாமை, சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானிய வகைகள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகின்றது.

    ஆனால் அப்பொருட்களை உரிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும் போது பகுதியில் 1.50 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யபட்டுள்ளது. தற்போது கிலோ ஏழு முதல் பத்து ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் அறுவடை கூழிகூட இல்லாத நிலையில் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டு விடுகின்றனர்.

    செடி நடவு, யூரியா, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய செலவு செய்து ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது அறுவடை செய்யும் தக்காளியானது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து வருகின்றனர்.

    எனவே கடத்தூரை மையமாகக் வைத்து உழவர் சந்தை மற்றும் குளிர்பதன கிடங்குகள் கட்டித் தருவதன் மூலம் விவசாயிகள் விலை பொருட்களை குடோனில் வைத்து விலை ஏற்றத்துடன் விற்க முடியும். எனவே அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக விவசாயிகளின் நலன் அக்கறை கொண்டு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×