என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
- நல்லம்பள்ளி அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மனைவி இறந்த கவலையில் விபரீத முடிவு.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள முத்துபூசாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 49). இவர் லாரி டிரைவராக வேலைப் பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் இருந்த நிலையில் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் பத்மாவதியை மலையூர்காடு பகுதியில் உள்ள உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் பன்னீர்செல்வம் சம்பவத்தன்று செல்போனில் மகளை தொடர்பு கொண்டு மனைவி இன்றி வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி போனை ஆப் செய்து உள்ளார்.
இதனை தொடர்ந்து முத்துபூசாரியூர் சென்று பத்மாவதியும் அவரது கணவரும் பார்த்தபோது பன்னீர்செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருந்தார். இது குறித்து மகள் பத்மாவதி அளித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி. வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






