என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதிக்கப்பட்ட  வாச்சாத்தி மக்களுக்கு  துணையாக அனைவரும் நிற்க வேண்டும்: சி. பி. எம். மாநில செயலாளர்  பேச்சு
    X

    பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கு துணையாக அனைவரும் நிற்க வேண்டும்: சி. பி. எம். மாநில செயலாளர் பேச்சு

    • வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அனைவரும் நிற்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
    • வாச்சாத்தி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்திற்க்கு வருகை தந்த மார்க்சிஸ்டு கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் வாச்சாத்தி கிராமத்திற்கு நேற்று வந்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பொதுமக்களிடம் கலந்துரை யாடினார். பின்னர் அவர்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அக்கிராம பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் வாச்சாத்தி வழக்கில் நீதி பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

    வாச்சாத்தி கிராமத்தில் பாதிப்பு ஏற்பட்டு பல ஆண்டு காலமாகிறது. நீதி கிடைத்தும் எங்கள் கிராமத்திற்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. இந்த கிராமத்தில் பல பேருக்கு சொந்த விவசாய நிலம், வீடு, இல்லை. கூலி வேலைக்காக கோய முத்தூர்,ஈரோடு,உள்ளிட்ட வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்து வருகிறோம் ,

    இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை ,பொது கழிவறை, சுகாதாரம வளாகம் இல்லை ,சமூதாய கூடம் இல்லை ,விஏஓ அலுவலகம் அமைத்து தரவேண்டும், மாயானம் வசதி இல்லை. பாறைகள் நிறைந்த கரடு முரடான இடத்தில் உள்ளது இறந்தவர்களை புதைப்பதற்க்கு குழி கொண்ட முடியவில்லை என்றனர்.

    மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில்;- போராட்டத்தில் நீங்கள் உறுதியாக நின்டு நீதியை பெற்று உள்ளீர்கள். எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படு கிறார்களோ ,பாதிக்கப்ப டுபவர்களுக்கு ஆதரவாக நின்று குரல்கொ டுக்கவேண்டும். பணக்கா ரர்க ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படுவதில்லை, சாதா ரண ஏழை விளிம்புநிலை அடித்தட்டு மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.இவர்க ளுக்கு நாம் துணைநிற்க்க வேண்டும்.

    வாச்சாத்தி கிராம மக்களின்கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் நேரில் சந்தித்து வலியு றுத்தியுத்தி யுள்ளோம் நீதிமன்ற தீர்ப்பில் நிறைவேற்ற வேண்டிய அம்சம் குறித்தும் இந்த கிராமத்திற்க்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினோம், முதல்வரும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    Next Story
    ×