என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் 9 திரையரங்குகளில் லியோ படம் வெளியீடு: டிக்கெட் ரூ.500  முதல் ரூ.1000 வரை விற்பனை
    X

    தருமபுரியில் 9 திரையரங்குகளில் லியோ படம் வெளியீடு: டிக்கெட் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை

    • பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • ரசிகர்கள் குவிந்ததால் தியேட்டர்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தருமபுரி,

    நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இதற்காக முதல் காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்கம் முன்பு குவிந்தனர்.

    தருமபுரி மாவட்டத்தில் 15 திரையரங்குகளில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் காலை 8 மணி முதல் தியேட்டர் முன்பு நின்று ஆரவாரத்தோடு பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தருமபுரி நகரில் மட்டும் டி-மேக்ஸ் தியேட்டரில் 5 திரைகளிலும், மீதமுள்ள ஜி.எம், ஹரி, சந்தோஷ், ஆனந்த், உள்ளிட்ட தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

    சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் அதிகாலையில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் அடைந்தனர். இந்நிலையில் காலை முதலே தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிந்ததால் தியேட்டர்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    டிக்கெட்கள் ரூ. 500 முதல் 1000 வரை விற்பனை செய்யப்பட்டன. அதனை வாங்க ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கினார்கள். ஆனாலும் பலருக்கு டிக்கெட் கிடைக்காத காரணாத்தால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    Next Story
    ×