என் மலர்
கடலூர்
திட்டக்குடி அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7¼ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் சக்தி குமார். விவசாயி. இவருடைய மனைவி சுகந்தி (வயது 26). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு தனது மாடி வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 12 மணியளவில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், சுகந்தியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் திடுக்கிட்டு எழுந்த சுகந்தி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். அதற்குள் மர்மநபர்கள் சுகந்தியின் கழுத்தில் கிடந்த 7¼ பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி சுப்பிரமணியன் (48) என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் அங்கிருந்த தகர பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், வெள்ளி ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தனித்தனி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நகை-பணம் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் பொதுமக்கள் வெளியில் செல்லும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட் கள் வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வெளியில் சென்று வருகின்றனர். அவர்களும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி முக கவசம் அணியாமல் சென்றால் ரூ .100 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது.
இதையடுத்து நேற்று கடலூரில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களில் சிலர் முக கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை கடலூர் புதுநகர் போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.100 அபராதம் விதித்தனர். தடை உத்தரவை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தவிர மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

சிதம்பரம் மருத்துவ கல்லூரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 75 வயது முதியவர் மரணம் அடைந்தார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு முதியவரை சோதனை செய்த டாக்டர் கொரானோ பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகம் நிலவியது.
இதனைத்தொடர்ந்து முதியவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரானோ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதியவருக்கு ரத்த மாதிரி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. முடிவு வந்த பிறகு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது தெரியவரும்.
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு நாளை முதல் கடுமையாக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. ஆனால், குறிப்பிட்ட சில நாட்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே கடலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்குள் வந்து விட்டது. இதனால் நாளை (20-ந் தேதி) ஊரடங்கு தளர்த்தப்படாது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும். பொதுமக்கள் முககவசம் இன்றி வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
கடலூர்:
கடலூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதில் டேங்கர் லாரிகள் மற்றும் மினி லாரிகள் மூலம் கிருமிநாசினி வார்டு வார்டாக தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ 3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் 2 நவீன கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு எந்திரம் நகராட்சிக்கு சொந்தமான லாரியில் பொருத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று காலை மஞ்சக்குப்பம் மணிக் கூண்டு அருகில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எந்திரத்தை இயக்கி வைத்து கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்து குணமடைந்த 5 பேரையும் கலெக்டர் அன்புச்செல்வன் பழங்கள், முககவசங்கள் வழங்கி கைதட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 பேரில் 5 பேர் பூரண குணமடைந்துள்ளனர். அதில் பண்ருட்டியை சேர்ந்த 2 பேர், விருத்தாசலத்தை சேர்ந்த 2 பேர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் என 5 பேர் குணமாகி உள்ளனர்.
இதையொட்டி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பு வார்டுக்கு சென்ற மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் குணமடைந்த 5 பேருக்கும் பழங்கள், முககவசங்கள் வழங்கி கைதட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

பண்ருட்டியில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 2 பேரை 20 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23), சிற்பி. இவரது நண்பர் பாலாஜி (வயது 22). தச்சுத் தொழிலாளி.
நேற்று இரவு 11.30 மணியளவில் மணிகண்டன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அவருடன் பாலாஜியும் சென்றார். தண்ணீர் பாய்ச்சி முடிந்ததும் அவர்கள் 2 பேரும் அங்குள்ள பம்ப் செட்டில் இருந்து செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் மணிகண்டன், பாலாஜி ஆகியோர் இருந்த வயல்வெளிக்கு சென்றனர். அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் பதட்டம் நிலவியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், தேர்தல் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
கொலையுண்ட மணிகண்டன், பாலாஜி ஆகிய 2 பேரும் பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யாபன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் உள்ளாட்சி தேர்தலின்போது தீவிரமாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களுக்கும், கொலை செய்யப்பட்ட 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர். ஆனாலும், இந்த முன்விரோதம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது கொலையில் முடிந்துள்ளது.

கடலூர் அருகே போதைக்காக மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி உயிர் இழந்தார். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகாசி (வயது 50). தொழிலாளி. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் (50), எழில்வாணன்(35), சுந்தர்ராஜ் மற்றும் ஆணையம்பேட்டையை சேர்ந்த குமரேசன் (26) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 5 பேருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது குடிக்க முடியாமல் தவித்த 5 பேரும், எங்காவது மது கிடைக்குமா? என்று பல்வேறு இடங்களில் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் வைத்து போதைக்காக ஒரு திரவத்தை குடித்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். நள்ளிரவில் திடீரென சந்திரகாசிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் சந்திரகாசி அலறி துடித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சந்திரகாசியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே மாயகிருஷ்ணன், எழில்வாணன், சுந்தர்ராஜ், குமரேசன் ஆகியோருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரகாசி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்த குமரேசன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் திரவத்தை தனது கிராமத்துக்கு எடுத்து சென்றார். பின்னர் அதை தண்ணீரை கலந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைக்காக குடித்துள்ளார். இதில் சந்திரகாசி உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது. இதற்கிடையே மெத்தனால் திரவம் வெளியே கொண்டு செல்லும் வகையில் செயல்பட்ட, சம்பந்தப்பட்ட ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 41 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 13 பேருக்கு கெரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று அறிகுறி உறிதியானது.
இந்த நிலையில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாத 28 பேரிடம் கொரோனா மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியானது. இதில் கூடுதலாக 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தவிர 29 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவரவேண்டியது உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் நேற்று முன்தினம் வரை உள்ள நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் கொரோனா அறிகுறி காணப்பட்ட 229 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 102 பேரின் பரிசோதனை அறிக்கை வந்ததில் 3 வயது பெண் குழந்தை உள்பட 14 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 88 பேருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் 127 பேரின் உமிழ் நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வரவேண்டி இருந்தது.
இந்த நிலையில் நேற்று 27 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பதும் மீதம் உள்ள நபர்களுக்கு கொரோனா இல்லை என்பதும் தெரியவந்தது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெண் டெல்லி மாநாடு சென்று திரும்பி வந்த அவரது கணவருடன் தொடர்பில் இருந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி இதுவரை கொரோனா அறிகுறி காணப்பட்ட 233 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி சேகரித்து அனுப்பப்பட்டதில் 133 பேரின் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் 118 பேருக்கு கொரோனா இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 100 பேரின் உமிழ்நீர் பரிசோதனை அறிக்கை வர வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி முந்திரிதோப்பில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. மதுவை தேடி பிரியர்கள் படையெடுக்கிறார்கள்.
விருத்தாசலம்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்தகங்கள் என்று அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
எனவே மதுபிரியர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். மதுபிரியர்களிடம் இருந்த கையிருப்பு ஏறக்குறைய தீர்ந்து போய்விட்டதால், பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திருட்டு சம்பவமும் அறங்கேறி வந்தன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, வடக்குத்து பகுதியில் திருட்டு சம்பவம் நடந்தது. இதையடுத்து உஷாரான, டாஸ்மாக் நிர்வாகம் அந்தந்த பகுதியில் கடையில் இருந்த மதுபாட்டில்களை லாரிகள் மூலம் குடோன்களுக்கு எடுத்து வந்து பாதுகாப்பாக வைக்கும் நடவடிக்கையில் இறங்கியது.
தற்போது, ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு 16 நாட்களை கடந்துவிட்டது. ஆனால் இன்றும் மதுபிரியர்கள் கைகளில் மது பாட்டில்கள் புழக்கத்தில் தான் இருந்து வருகிறது. விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் பரூர் செல்லும் சாலையில் முந்திரி தோப்பில் சில தனிநபர்கள் மது பாட்டில்களை சாக்கு பைகளில் கட்டி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் விருத்தாசலம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்கள் முந்திரி தோப்பை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர். எப்படியாது மது குடித்துவிட வேண்டும் என்று கூடுதல் விலை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்கள். ஊரடங்கு காரணமாக, வேலை மற்றும் வருமானம் இல்லாமல் பரிதவித்து வரும் இத்தகைய சூழலில் இதுபோன்று கூடுதல் விலைக்கு மது வாங்கி குடிக்கும் சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், மதுவிற்பனை தொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி, மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூரில், தடையை மீறி விற்பனை செய்ததால், இறைச்சி, மீன் கடைகளை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடலூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வருகிற 14-ந்தேதி வரை இறைச்சி, மீன் கடைகள், மார்க்கெட்டுகளை மூடவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடை உத்தரவை மீறி கடைகள் வைத்திருப்போர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைகளையும் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஒரு இறைச்சி கடையை திறந்து, அதன் உரிமையாளர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதாக புகார் வந்தது.
தகவல் அறிந்ததும் கடலூர் தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணை தாசில்தார் ராஜேஷ், சிறப்பு தாசில்தார் மகேஷ், வருவாய் ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி அலுவலர்கள், புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த கடையில் இறைச்சி வியாபாரம் நடைபெற்றது. இதையடுத்து அந்த கடையை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் முபாரக் அலியை கைது செய்தனர். இதேபோல் கடலூர் முதுநகர் ஆற்றங்கரை வீதியில் ஆறுமுகம் என்பவர் மீன் கடையை திறந்து வியாபாரம் செய்தார். இதையடுத்து அவரது கடையையும் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். அவர் மீதும் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.