என் மலர்
கடலூர்
திட்டக்குடி அடுத்த கொட்டாரம் மற்றும் போத்திரமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் 1500 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த கொட்டாரம் மற்றும் போத்திரமங்கலம் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆவினங்குடி, கொட்டாரம், செங்கமேடு, குடிகாடு, பட்டூர், எழுமாத்தூர், கோடங்குடி உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் அறுவடை செய்த நெல்லை எடுத்துவந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை எடைபோடுவதற்கு ஒரே ஒரு எந்திரத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதில் கொட்டாரத்தில் கூடுதலாக மேலும் ஒரு எந்திரம் இருந்த போதிலும் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து, ஆங்காங்கே மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு திடீரென இப்பகுதியில் பெய்த மழையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்தன. உடன் விவசாயிகள் தார்ப்பாய்கள் கொண்டு மூட்டைகளை மூடி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவைகள் நனைந்து விட்டன. பின்னர் மழை ஓய்ந்ததும், மூட்டைகளில் இருந்த நெல்லை கொட்டி காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதில் 2 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சேர்த்து மொத்தம் சுமார் 1500-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கம்மாபுரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்மாபுரம்:
கம்மாபுரம் அருகே உள்ள மேற்கிருப்பு மேல தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி வீரச்செல்வி(வயது 20). இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த வீரச்செல்வி வீட்டில் புடவையால் தூக்குப்போட்டுக்கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள நெய்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வீரச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அரவது தந்தை குமார் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. அதாவது 98 டிகிரி அளவில் தொடர்ச்சியாக வெயில் அளவு பதிவாகி வந்தது. இதனால் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள், வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அவ்வப்போது அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஒரு சிலர் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நுங்கு, தர்பூசணி போன்றவற்றை வாங்கி சாப்பிட்டனர்.
இந்நிலையில் கடலூரில் நேற்று காலை பொழுது மேகக்கூட்டங்களுடனே விடிந்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த நிலையில் 9 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரமே நீடித்தாலும், கனமழையாகவே கொட்டியது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊரடங்கால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இருப்பினும் கடந்த சில நாட்களாக வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நேற்று 30 நிமிடம் பெய்த மழை சற்று ஆறுதலை தந்தது.
இதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து இதமான சூழ்நிலை நிலவியது. தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த கோடை மழை மண்ணை மட்டுமின்றி மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் அன்பு செல்வன் ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நாளில் வைரஸ் சமூக தொற்றாக மாறக்கூடாது என்பதற்காக காலை, மாலை என 2 வேளை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
மேலும் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
இதன்படி நேற்று முழு ஊரடங்கு உத்தரவு மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் நகராட்சியில் பாரதி சாலை, நெல்லிக்குப்பம் சாலை, நேதாஜி ரோடு உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்த பணியை நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி பகுதியில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பிளச்சிங் பவுடர் போட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதையடுத்து 8 நவீன எந்திரங்கள் மூலம் நகராட்சி பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன், நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது கல்கி நகர் பகுதியில், தூய்மை பணி மேற்கொண்டு கிருமிநாசினி தெளிக்காமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி கமிஷனர் பிரபாகரன் மற்றும் நகராட்சி ஊழியர்களை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
இதேபோல் பட்டாம்பாக்கம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் சுகாதார பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு 100 சதவீதம் வரவில்லை. இதேபோல் வருகிற 3-ந்தேதி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். தேவைக்கேற்ப வெளியே வருபவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆய்வின் போது கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பரிமளம், தாசில்தார்கள் செல்வக்குமார், உதயகுமார், கீதா, கடலூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சிதம்பரத்தில் காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் சரகம் அம்மா பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். இன்று காலை காம்ப்ளக்ஸ் எதிரோ காஞ்சா வாய்க்கால் கரையோரம் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து, முழங்கால் ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்தது. எனவே, நடராஜனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு வாய்க்காலில் உடலை வீசி சென்றுள்ளனர். இது குறித்து அண்ணா மலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடராஜன் பிணமாக கிடந்த இடத்தில் மீன் பிடிப்பதற்கான வலைகள் கிடந்தது. எனவே மீன் பிடிக்கும் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பெண்ணாடம் அருகே தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் வீட்டின் சுவரில் துளை போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 62). இவர் கடலூர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆவார்.
இவருடைய தம்பி இளவரசன், தம்பி மகன் ராஜவேல் ஆகியோரின் வீடுகளும் அரு கருகிலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதியழகன் உள்ளிட்ட 3 குடும்பத்தினரும் தங்களது வீட்டின் முன்புறம் படுத்து தூங்கினர். இந்த நிலையில் நேற்று காலையில் மதியழகன் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த நகை-பணத்தை காணவில்லை. இதேபோல் இளவரசன், ராஜவேல் ஆகியோரது வீட்டின் பின்பக்க சுவர்களிலும் துளையிடப்பட்டு பீரோவில் இருந்த நகை-பணம் திருடப்பட்டிருந்தது. பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீடுகளை பார்வையிட்டு அவர்களது குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில் மதியழகன், இளவரசன், ராஜவேல் ஆகியோரின் 3 குடும்பத்தினரும் எப்போதும் வீட்டின் முன்பு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் பின்பக்க சுவர்களை துளையிட்டு 3 பேரின் வீடுகளில் இருந்த 12 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், 1 கிலோ வெள்ளி விளக்குகள், விலையுயர்ந்த செல்போன், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதேபோல் சேலம், திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முயன்றவருக்கு சிகிச்சை அளிக்காததை கண்டித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியான் மகன் அசோக்(வயது 28). இவருக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று அசோக்குமார், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அசோக்கை தவிர மற்றவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக வந்திருந்த மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், அங்கிருந்து புறப்பட தயாரானார்.
இதைபார்த்த அசோக்கின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அசோக்கை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சிகிச்சைக்காக அனுமதித்தும், இதுவரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அசோக் இறந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் இறந்த அசோக்குக்கு ஒரு மணி நேரமாக சிகிச்சை அளிக்காததால் தான் அவர் இறந்து விட்டார் என்று கூறி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, சமாதானப்படுத்தி இதுகுறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கியில் முக கவசம் அணியாமல் பணி செய்த ஊழியரை சப்-கலெக்டர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வங்கிகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டது. அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்திலும் வங்கிகள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணிந்தே பணி செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று பெண்ணாடத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்வதற்காக விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் நேரில் சென்றார். அப்போது, அங்கு இயங்கிய ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் உள்ளே சென்ற அவர், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என்று பார்வையிட்டார்.
அப்போது அங்கிருந்த வங்கியின் எழுத்தர் வெங்கடேசன்(வயது 31) முக கவசம் அணியாமல் பணி செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த சப்-கலெக்டர் பிரவீன்குமார், அவரிடம் சென்று ஏன் முக கவசம் அணியவில்லை? என்று கேட்டார். பின்னர் முக கவசம் அணிய வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கினார்.
இதற்கிடையே, பொதுமக்கள் வந்துசெல்லும் வங்கியில், முக கவசம் அணியாமல் பணி செய்ததற்காக அவரை பிடித்து பெண்ணாடம் போலீசில் சப்-கலெக்டர் ஒப்படைத்தார். பொதுமக்களுக்கு நோயை பரப்பும் வகையில் பணி செய்ததாக கூறி அவர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடலூர்:
ஊரடங்கு அமல் காரணமாக, பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாமல் இருந்தன. இந்த நிலையில் 20-ந்தேதி(நேற்று முன்தினம்) முதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடை மற்றும் முக கவசம் அணிந்து பணி புரிந்து வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் நேற்று திறந்து இருந்தது. குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் யாரும் வராததால் அலுவலக வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது. இதனால் ஊழியர்கள் மட்டும் அவரவர் இருக்கையில் அமர்ந்து அலுவலகப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் வருகிற 3-ந் தேதி வரையிலும் எந்த ஒரு பத்திரமும் எழுதுவதில்லை, அலுவலகங்களையும் திறப்பது இல்லை என முடிவு செய்துள்ளனர். பொது மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவித்து விட்டால் அது அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
இதேபோல் புதுப்பேட்டையில் பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து இயங்கி வருகிறது. நேற்று பத்திரப்பதிவு செய்ய யாரும் வராததால் மக்கள் நடமாட்டம் இன்றி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதே நிலை தான் மாவட்டம் முழுவதிலும் நீடித்தது.
மங்கலம்பேட்டை அருகே முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பாரை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 75), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர், தனது மகனுடன் சேர்ந்து அய்யாக்கண்ணுவை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அய்யாக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அய்யாக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார், தலைமறைவான தந்தை-மகனை வலைவீசி தேடி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போதிலும், முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் கடலில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். மீனவர். இவரது மகன் ஆகாஷ்(வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை தந்தை, மகன் இருவரும் அந்த பகுதியில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றனர். அப்போது கடலில் இருவரும் குளித்துக்கொண்டு இருந்தபோது, எழுந்த ராட்சத அலையில் ஆகாஷ் சிக்கி, இழுத்து செல்லப்பட்டான்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காத்தவராயன், சக மீனவர்களுடன் சேர்ந்து மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய சிறுவனை மீட்டனர். அப்போது ஆகாஷ் மயங்கிய நிலையில் இருந்தான். இதையடுத்து அவனை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஆகாஷை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.