என் மலர்
செய்திகள்

ஊரடங்கால் அடைக்கப்பட்ட கடைகள் (கோப்பு படம்)
கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு- கலெக்டர் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதேபோல் சேலம், திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






