என் மலர்
கடலூர்
அலட்சியமாக இருக்க வேண்டாம். கொரோனா 2-வது அலை இதயத்தை தாக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரி அதிர்ச்சி தகவலை கூறினார்.
கடலூர் :
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட 2-வது அலை வீரியத்துடன் காணப்படுகிறது. இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, டீக்கடைகள், காய்கறி, மளிகைக்கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேர் பலியானார்கள். நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர். முன்பு கொரோனாவுக்கு வயதானவர்கள் பலியாகி வந்தனர்.
தற்போது பரவும் 2-வது அலை இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. நேற்று 35, 45 வயதுள்ள 2 பேர் பலியாகி உள்ளனர். சமீபத்திலும் 35, 40 வயதுள்ள நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
கொரோனா 2-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட சற்று வீரியத்துடன் காணப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல், இருமல், சளியை விட தலைவலி அதிகமாக இருக்கிறது. உடல் சோர்வு அதிகம் காணப்படுகிறது. முதல் அலை அதிகம் நுரையீரலை பாதித்தது. 2-வது அலை நுரையீரலை பாதித்தாலும், அதிகம் இதயத்தை தான் பாதிக்கிறது.
கொரோனா வயதானவர்களை மட்டும் தாக்கும். நாம் உடல் தகுதியாக இருக்கிறோம். இதனால் நம்மை தாக்காது என்று இளைஞர்கள் நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கிறார்கள். தற்போது பரவும் கொரோனாவில் இளைஞர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இதயத்தை செயலிழக்க செய்து உயி ரிழப்பை ஏற்படுத்துகிறது.
ஆகவே பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒரு சிலர் காய்ச்சல், இருமல் வந்தால் டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. உடனே அருகில் இருக்கும் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுய மருந்து எடுத்து, நோய்த்தொற்று அதிகம் ஆகி வரும் நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் போய் விடும்.
ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்தால், நம்மை ஆம்புலன்சில் ஏற்றிச்செல்வார்கள் என்ற பயம் வேண்டாம். ஆகவே மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம். அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-
| திட்டக்குடி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கணேசன் | திமுக | 83726 | |||
| பெரியசாமி | பா.ஜ.க | 62163 | |||
| உமாநாத் | தேமுதிக | 4142 | |||
| பிரபாகரன் | ம.நீ.ம. | 1745 | |||
| காமாட்சி | நாம் தமிழர் | 10591 | |||
| விருத்தாச்சலம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ராதாகிருஷ்ணன் | காங்கிரஸ் | 77064 | |||
| கார்த்திகேயன் | பாமக | 76202 | |||
| பிரேமலதா விஜயகாந்த் | தேமுதிக | 25908 | |||
| அமுதா | நாம் தமிழர் | 8642 | |||
| நெய்வேலி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சபா.ராஜேந்திரன் | திமுக | 75177 | |||
| ஜெகன் | பாமக | 74200 | |||
| பக்தரட்சகன் | அ.ம.மு.க. | 2230 | |||
| இளங்கோவன் | இஜக | 1011 | |||
| ரமேஷ் | நாம் தமிழர் | 7785 | |||
| பண்ருட்டி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தி.வேல்முருகன் | த.வா.க. | 93801 | |||
| ராஜேந்திரன் | அதிமுக | 89104 | |||
| சிவக்கொழுந்து | தேமுதிக | 3362 | |||
| ஜெயிலானி | ம.நீ.ம. | 1670 | |||
| சுபாஷினி | நாம் தமிழர் | 6547 | |||
| கடலூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கோ.அய்யப்பன் | திமுக | 84563 | |||
| எம்.சி.சம்பத் | அதிமுக | 79412 | |||
| ஞானபண்டிதன் | தேமுதிக | 1499 | |||
| ஆனந்தராஜ் | சமக | 4040 | |||
| ஜலதீபன் | நாம் தமிழர் | 9563 | |||
| குறிஞ்சிப்பாடி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் | திமுக | 101456 | |||
| செல்விராமஜெயம் | அதிமுக | 83929 | |||
| வசந்தகுமார் | அமமுக | 837 | |||
| சுமதி | நாம் தமிழர் | 8512 | |||
| புவனகிரி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| அருண்மொழிதேவன் | அதிமுக | 96453 | |||
| துரை.கி.சரவணன் | திமுக | 88194 | |||
| கே.எஸ்.கே.பாலமுருகன் | அமமுக | 247 | |||
| ரேவதி | இஜக | 315 | |||
| ரத்தினவேல் | நாம் தமிழர் | 6958 | |||
| சிதம்பரம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கே .ஏ.பாண்டியன் | அதிமுக | 91961 | |||
| எஸ்.அப்துல் ரகுமான் | இயூமுலீ | 75024 | |||
| நந்தினிதேவி | அமமுக | 1388 | |||
| ஞா.தேவசகாயம் | சமக | 2953 | |||
| நடராஜன் கிருஷ்ணமூர்த்தி | நாம் தமிழர் | 9071 | |||
| காட்டுமன்னார்கோயில் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சிந்தனை செல்வன் | விசிக | 86056 | |||
| முருகுமாறன் | அதிமுக | 75491 | |||
| நாராயணமூர்த்தி | அமமுக | 1904 | |||
| தங்க விக்ரம் | ம.நீ.ம. | 1415 | |||
| நிவேதா | நாம் தமிழர் | 6806 | |||
கொரோனா பாதித்த 1678 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 283 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தினசரி உக்கிரமாகி வருகிறது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 381 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் ஆந்திரா, பெங்களூரு, டெல்லி, விஜயவாடா ஆகிய இடங்களில் இருந்து அண்ணாகிராமம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, கடலூர் வந்த 5 பேர், சென்னை, தஞ்சை, சேலத்தில் இருந்து புவனகிரி, கடலூர், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, கம்மாபுரம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களுக்கு வந்த 23 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 62 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 291 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 28 ஆயிரத்து 695 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 240 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை கொரோனாவுக்கு 329 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதித்த 1678 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 283 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 86 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டனை 9,610 பேர் அழுத்தி தங்கள் வாக்கை, எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யாராவது வாக்களிக்க விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு என வாக்குப்பதிவு எந்திரத்தின் கடைசியில் நோட்டா என்ற பட்டன் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த பட்டனை அழுத்தி அவர்கள் தங்கள் பதிவை, எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.
இந்த நடைமுறை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டனை 9,610 பேர் அழுத்தி தங்கள் வாக்கை, எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

புவனகிரி அருகே ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளது. இந்த பணிகளை குறிஞ்சிப்பாடி கோட்ட பொறியாளர் சிவசேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புவனகிரி:
புவனகிரி அருகே உள்ளது சி. ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் புவனகிரி-மருதூர் சாலையில் உள்ள பாசன வாய்க்காலின் பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டும் பணி தொடங்க உள்ளது.
இந்த பாலத்தின் கட்டுமான மற்றும் அமைவிட பணிகளை குறிஞ்சிப்பாடி கோட்ட பொறியாளர் சிவசேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாலம் அமைய உள்ள இடத்தின் தன்மை மற்றும் வரைபடத்தில் உள்ளது போல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது குறிஞ்சிப்பாடி உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் விமல், ஒப்பந்ததாரர் உள்பட பலர் உடனிருந்தனர்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் இருந்தார்.
இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாமக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
விருத்தாசலத்தில் மொத்தம் 1,94,723 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. பதிவான ஓட்டுகளில், 6 ஒரு பங்கு ஓட்டு பெற்றால் டெபாசிட் பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதன்படி, பிரேமலதா 32 ஆயிரத்து 788 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் 25,908 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் அங்கு டெபாசிட் இழந்தார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக முருகுமாறன் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சிந்தனைசெல்வன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்க.விக்ரம் நாம் தமிழர் கட்சி நிவேதா உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை சி.முட்லூர் அரசு கலை கல்லூரியில் இன்று தொடங்கியது முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப் பட்டன. இந்த தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக முருகுமாறன் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சிந்தனைசெல்வன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்க.விக்ரம் நாம் தமிழர் கட்சி நிவேதா உள்பட 13 பேர் போட்டியிட்டனர். முதல் சுற்று ஓட்டு எண் ணிக்கை விபரம் வருமாறு:-
முருகுமாறன் (அ.தி.மு.க) -3,561
சிந்தனை செல்வன் (வி.சி.க) -2,731
ஓட்டு வித்தியாசம் -830
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் உள்ளார்.
எட்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் 25,323 வாக்குகளும், பாமக வேட்பாளர் 19,533 வாக்குகளும் பெற்றனர். பிரேமலதா விஜயகாந்த் 9,902 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் 18 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
காதலித்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர் வெளிச்செம்மண்டலம் சண்முகாநகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் புருஷோத்தமன் (வயது 23). இவர் கடலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் புருஷோத்தமன் தந்தை ஜெயராமனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் புருஷோத்தமனை கண்டித்தார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி ஜெயராமன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபிரியர்கள் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அந்த மாநிலத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த 26-ந்தேதி இரவுக்கு மேல் 30-ந்தேதி வரை மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன.
தற்போது, இந்த உத்தரவு வருகிற 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபிரியர்கள் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடலூர் முதுநகர் அருகே உள்ள குடிகாடு பகுதியில் டாஸ்மாக் மொத்த குடோன் உள்ளது. இங்கிருந்து லாரிகள் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள, 144 சில்லரை மதுபான கடைகளுக்கும் மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சராசரியாக கடலூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.2½ கோடி முதல் 3 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆவது வழக்கம். தற்போது அண்டை மாநிலமான புதுச்சேரியில் உள்ள மது பிரியர்களும் கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் குவிந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதால் விற்பனை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதன்படி புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்ட முதல் நாளான (27-ந்தேதி) அன்று கடலூர் மாவட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கும், 2-வது நாளான நேற்று முன்தினம் 5 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ. 11 கோடியே 5 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், விசிக 1 தொகுதி, காங்கிரஸ் 1 தொகுதியிலும், 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:
காட்டுமன்னார்கோயில் | விசிக |
சிதம்பரம் | கடும் போட்டி |
புவனகிரி | அதிமுக |
குறிஞ்சிப்பாடி | திமுக |
கடலூர் | அதிமுக |
பண்ருட்டி | திமுக |
நெய்வேலி | திமுக |
விருத்தாச்சலம் | காங்கிரஸ் |
திட்டக்குடி | திமுக |
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர் மட்டத்திற்கு ஏற்ப தண்ணீர் அனுப்பப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர் மட்டத்திற்கு ஏற்ப தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டு வீராணம் ஏரி 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதற்கிடையே தற்போது உலக வங்கி நிதி உதவியுடன் வீராணம் ஏரியில் ரூ.73 கோடியே 64 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றினர். மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், கடும் வெயில் காரணமாகவும் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இதனால் தற்போது வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரி தண்ணீர் இன்றி வறண்டுபோய் உள்ளது. இருப்பினும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடாக பரவனாறு பகுதியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.