என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய பாலம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்த காட்சி.
    X
    புதிய பாலம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்த காட்சி.

    புவனகிரி அருகே புதிய பாலம் கட்டும் பணி- அதிகாரி ஆய்வு

    புவனகிரி அருகே ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளது. இந்த பணிகளை குறிஞ்சிப்பாடி கோட்ட பொறியாளர் சிவசேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புவனகிரி:

    புவனகிரி அருகே உள்ளது சி. ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் புவனகிரி-மருதூர் சாலையில் உள்ள பாசன வாய்க்காலின் பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டும் பணி தொடங்க உள்ளது.

    இந்த பாலத்தின் கட்டுமான மற்றும் அமைவிட பணிகளை குறிஞ்சிப்பாடி கோட்ட பொறியாளர் சிவசேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாலம் அமைய உள்ள இடத்தின் தன்மை மற்றும் வரைபடத்தில் உள்ளது போல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது குறிஞ்சிப்பாடி உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் விமல், ஒப்பந்ததாரர் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×