search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கடலூர் மாவட்டத்தில் 381 பேருக்கு கொரோனா உறுதி

    கொரோனா பாதித்த 1678 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 283 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தினசரி உக்கிரமாகி வருகிறது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 381 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இவர்களில் ஆந்திரா, பெங்களூரு, டெல்லி, விஜயவாடா ஆகிய இடங்களில் இருந்து அண்ணாகிராமம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, கடலூர் வந்த 5 பேர், சென்னை, தஞ்சை, சேலத்தில் இருந்து புவனகிரி, கடலூர், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, கம்மாபுரம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களுக்கு வந்த 23 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 62 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 291 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 28 ஆயிரத்து 695 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 240 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை கொரோனாவுக்கு 329 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதித்த 1678 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 283 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 86 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
    Next Story
    ×