என் மலர்
கடலூர்
இயற்கைத் தரும் இனிய வாழ்வு எனும் தலைப்பில் மருத்துவ குணம்மிக்க பப்பாளி குறித்து போப்பு அவர்கள் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பப்பாளி இளம் சிவப்பு நிறத்தில் தளதள வென்று எண்ணையில் முக்கி எடுத்தது போன்ற சிறிய விதைகளை உள்ளடக்கியுள்ள பழம். இந்தப் பழ மரத்தை நீங்கள் மெனக்கெட்டு வைக்க வேண்டியதே இல்லை. எங்காவது அணிலோ, காக்கையோ பப்பாளிப் பழத்தைத் தின்று விட்டு அங்கங்கே விதையைப் போட்டு வைக்கத் தானாகவே குழந்தை உள்ளங்கையை விரித்தது போன்ற இலைகளை கண்ணுக்கு இதமான குளிர்வுப் பச்சையில் மலர்த்தி வளர்ந்து கொண்டிருக்கும். வாசல் தெளிக்கும் நீரே கூட பப்பாளிக் கன்றிற்குப் போதும் அதன் ஈரப்பதத்தைக் குடித்தே வளர்ந்து விடும். கொஞ்சம் வெயில் கிடைத்தாலும் போதும் சடசடவென்று மேல்நோக்கி வளரும். கிளைகள் பரப்புவதில்லை. அதனால் பெரிதாக இடத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு ஓரமாக நின்று கொள்ளும். ஆனால் பழம் தருவதில் குறைச்சல் வைப்பதில்லை.
வளர்ந்து ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் காய்க்க ஆரம்பித்து விடும். பருவம், காலம் ஏதுமின்றி காய்க்கத் தொடங்கிய நாளில் இருந்து வருடம் முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். பப்பாளியைப் பழமாக உண்பது குறித்து அப்பறம் பார்க்கலாம். பெருமனதோடு கணுக்கணுவாகக் காய்த்துக் கொண்டிருக்கும் பப்பாளி, கனியாகப் பழுக்கும் வரைக் காத்திருக்க வேண்டியதில்லை. காயாகப் பறித்தே மேல் தோலினைச் சீவி நீக்கி விட்டு பூசணிக்காய் போலக் கூட்டாகவோ, பொரியலாகவோ சமைத்து உண்ணலாம். நிறைய நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் இருப்பதால் பப்பாளிக் காயில் சமைக்கும் கூட்டு வயிற்றிற்கு இதமாக இருக்கும். குடல் தொடர்பான நோய்களை நீக்கும். மலச்சிக்கல் உடையவர்களுக்கு மிக எளிமையான மருந்தாக இருக்கும்.
சிலருக்கு வயிற்றுப் பகுதியில் வெப்பம் அதிகரித்து பெருங்குடலில் நீர் வறட்சி ஏற்பட்டு மலம் வெளியேற முடியாமல் குதப் பகுதியில் வலி ஏற்படும். மலம் போக வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுக் கழிவறையில் போய் அமர்ந்தாலும் மலம் கீழிறங்குமே தவிர வெளியேறாது. காரணம் பெருங்குடலில் ஏற்பட்டுள்ள நீர் வறட்சி.
குறிப்பாக ப்ரைடு ரைஸ் போன்ற அதிக வெப்பமேற்றப்பட்ட உணவு வகைகளை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு இத்தகைய பிரச்சினை இளம் வயதிலேயே ஏற்பட்டு விடும். அதேபோல் நெருப்பில் சுட்ட கோழி இறைச்சி( தந்தூரி சிக்கன்), எண்ணையில் இட்டுப் பொறித்த வறள் தன்மையிலான சிக்கன் 65, கனமான தோசைக்கல்லில் சூடேற்றிய நார்சத்தற்ற பரோட்டா, சப்பாத்தி போன்ற உணவுவகைகளை அடிக்கடி உண்போருக்கு இந்த பிரச்சனை தோன்றுவது சர்வ இயல்பாக இருக்கும். மேற்படியான உணவுப் பழக்கமும் தொடர்ந்து உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாத வேலைச் சூழலும் இணைந்தால் சொல்லவே வேண்டாம். இத்தகையவர்களுக்கு பப்பாளிக் கூட்டு அருமருந்தாக இருக்கும்.
மேற்படிப் பிரச்சினை உள்ளவர்கள் காலை உணவுக்கோ அல்லது மதிய உணவிற்கோ உணவின் ஒரு பகுதியாக இல்லாமல் பப்பாளிக் கூட்டை மட்டுமே முழு உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதில் மேலே சொன்னது போல நார்ச் சத்தும், நீர்ச்சத்தும் இருப்பதோடு கார்போ ஹைடிரேட் எனும் எரிமச் சத்தும் இருப்பதால் உடலின் இயல்பான இயக்கத்திற்குத் தேவையான சர்க்கரைச் சத்தினையும், உணவின் வழியாகக் கிடைக்க வேண்டிய வெப்ப ஆற்றலையும் இது வழங்கும்.
பப்பாளிக் காயைத் தோல் நீக்கி அரையங்குல கியூப்களாக வெட்டி கனமான கடாயில் நல்லெண்ணை விட்டுக் கடுகு, உளுந்தம் பருப்புப் போட்டுத் தாளித்து உடன் மிகச் சிறிதளவு காய்ந்த மிளகாய்ப் போட்டு தாளிதம் முடிந்ததும் வெட்டிவைத்த காய்த் துண்டுகளைப் போட்டு மிதமான சூட்டில் வேகவிட வேண்டும். சுமார் பத்து நிமிடம் வெந்த பின்னர் தேங்காய் பூ போட்டு இறக்கி அப்படியே உண்ணலாம். மலச் சிக்கல் பிரச்சனை இல்லாத வர்கள் சோற்றுடன் பிசைந்தோ சப்பாத்திக்குத் தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம்.
இதன் இனிப்புச்சுவை மிதமாக இருப்பதால் சர்க்கரை நோயாளி கள் எடுத்துக் கொள்வதும் பிரச்சி னையாக இருக்காது. (இதற்கு அப்பால் சென்று பழம், காய் இனிப்பை சர்க்கரைக் கணக்கில் வைக்க வேண்டியதில்லை என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டியது). மூலநோய்ப் பிரச்சினை உள்ளவர்கள், நரம்பு சுருட்டல் பிரச்சினை உள்ள வர்களும் மேற்படி பப்பாளிக் காய்க் கூட்டினை தொடர்ந்து எடுத்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.
அதேபோல பப்பாளிக் கொழுந்து இலையை அரைத்துச் சாறு வடித்தோ அல்லது அவித்து ரசமாக வடித்தோ உள்ளுக்குள் அருந்த ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். முதிராத பப்பாளி இலையை பொடியாக அரிந்து போட்டு பருப்பு, தேங்காய்ப் பூ போட்டு கூட்டாகச் சமைத்து உண்ணலாம். இது ரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையை உடனடியாக நீக்கும்.
வீட்டிற்குப் பக்கத்தில் பப்பாளி மரம் இருந்தால் அதில் இருந்து வெளி வரும் காற்றே நமது சுவாசப் பாதையை இலகுவாக்குவதுடன் நுரையீரலில் தங்கியுள்ள நீர்த் திவலைகளை அகற்றும். எனவே காய் காய்க்கும் பெண் பப்பாளி அல்லது பூ மட்டுமே பூக்கும் ஆண் பப்பாளி எதுவானாலும் தானாக வளர்ந்து வரும் பப்பாளி மரத்தினை ஒடிக்க எளிதாக இருக்கிறதே என்றோ களையாகக் கருதியோ ஒடித்துப் போட வேண்டாம். உங்களிடம் ஒரு குவளை நீரைக் கூடக் கேட்காத பப்பாளி மரம் வளர்ந்து விட்டுப் போகட்டுமே. சாக்கடை நீரைக் குடித்து வளரும் அம்மரம் மிகையாகத் தேங்கி நாற்றமடிக்கும் சாக்கடையின் அளவைக் குறைக்கிறது என்கிற அளவிலும் வரவேற்கப்பட வேண்டியது தானே.
கூடாகவும் நாராகவும் இருக்கும் பப்பாளி மரம் காய்ந்த பின்னர் வீட்டுத் தோட்டத்தில் பரப்பி வைத்தால் நல்ல உரமாக இருப்பதோடு நீர் ஆவியாதலையும் தடுக்கும். அதேபோல செடித் தொட்டியிலும் மண் மீது காய்ந்த பப்பாளி மரத்துண்டுகளைப் போட்டு வைக்கலாம். தொட்டிச் செடிக்கு நாம் ஊற்றும் நீரினை உள்வாங்கி நிதானமாக வேர்களுக்கு வழங்கும். ஆக பனை, தென்னை மரங்கள் அளவிற்கு இல்லா விட்டாலும் பப்பாளியின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக் கூடியவை தான்.
பப்பாளிப் பழத்தின் வாசனை சிலருக்குப் பிடிக்காது. அத்தகையவர்கள் அதனைத் தவிர்ப்பது தவறில்லை. ஆனால் அதற்கு மாறாக பழம் முழுதாகப் பழுக்கும் முன்னர் தேங்காய்ப் பதத்தில் உள்ள அதன் சதைப் பாகத்தைக் கடித்துத் தின்பார்கள். ஜெல் தன்மையிலான இந்தப் பகுதி குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆனால் முக்கால் பழத்தை உண்பது பலருக்கும் வயிற்று வலியை உண்டாக்கும். சீதபேதி ஏற்படவும் காரணமாகி விடும். சிலர் இந்தக் கெட்டியான சதைப்பகுதியை உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து உண்பார்கள். இது நிச்சயமாக வயிற்றிற்கு ஒவ்வாது.
பூப்பெய்திய இளம் பெண்கள் இதே முறையில் உண்டால் உதிரப் போக்கு இல்லாத பருவத்திலும் போக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. உதிரப் போக்கு செல்லும் நாட்களில் மேற்படி விதமாக உண்டால் நிச்சயமாக உதிரப் போக்கின் அளவு கூடுதலாக இருப்பதோடு சூட்டுடன் கூடிய வயிற்று வலியும், இடுப்பு வலியும் குறிப்பாக இடுப்பும் முதுகெலும்பும் இணையும் பாகத்தில் கடும் வலியும் இருக்கும். எனவே முழுதாக பழுக்காத பப்பாளிப் பழத்தை உண்பதைத் தவிர்ப்பதே நல்லது.
முழுதாகப் பழுக்காத இந்தப் பழத்தின் சதையை சிறு துண்டுகளாக டைமண்ட் கற்கண்டு வடிவிலோ நீள வாக்கிலோ அரிந்து நிறமேற்றிப் பக்குவப்படுத்தி கேக் போன்ற இனிப்பு வகைகளில் அலங்காரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். முக்கால் பழத்தை வேகவைத்து சோற்றுடன் பிசைந்தும் சாப்பிடலாம். அரிசி வேகும் போது பொதித்து வேகவிட்டும் உண்ணலாம். ஆனால் பச்சையாக உண்பது உடல் நலனுக்கு ஏற்றதல்ல.
இனி பப்பாளிப்பழத்தைப் பார்ப்போம். சதைப் பகுதியைப் பாதுகாக்கும் தோலானது (நாட்டுப் பப்பாளி) நல்லக் கெட்டித் தன்மை கொண்டதாக இருக்கும். ஓரளவு கனிந்த பப்பாளித் தோலை எடுத்து குளிப்பதற்கு முன்னர் மேலுக்குத் தேய்த்து விட்டால் விழு விழுப்பாக இருக்கும். காயும் போது தோல் முடியை இழுப்பது போலவும் இருக்கும். நன்றாகக் காய்ந்த பின்னர் நிதானமாகத் தேய்த்துத் தளர நீர் விட்டுக் குளித்தால் பத்து எண்ணைக் குளியலை ஒரே நேரத்தில் எடுத்தது போல அத்தனை புத்துணர்ச்சியாக இருக்கும். இந்தக் குளியலால் வியர்வைத் துளைகளை அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்கு நீங்குவது போக தோலில் உள்ள சிறுசிறுத் தழும்புகள் மறையத் தொடங்கும். கண் பார்வைத் துலக்கமாக இருக்கும்.
சிலருக்கு தோலில் சில இடங்களில் திட்டுப் போன்றோ கருப்பாகவோ சில பாகங்கள் நிலைத்து இருக்கும். அந்தப் பகுதியில் இறந்த செல்கள் புதுப்பிக்கப்படவில்லை என்று பொருள். அதற்கு மருந்து மாத்திரைகள், தைலங்கள், லோசன்கள் பயன்தராது. நாம் சொன்னது போல பப்பாளித் தோலினை மேலே தேய்த்து ஆறவிட்டுக் குளித்தால் நான்கைந்து முறைக் குளியலிலேயே நல்ல பலனைப் பார்க்கலாம்.
பப்பாளித் தோலில் பூஞ்சைத் தென்பட்டாலோ அல்லது மருந்து வாசம் அடித்தாலோ அத்தோலைக் குளிப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது. பப்பாளிக் காயின் தோலை அதில் உள்ள பால், பிசின் போக கழுவி விட்டு எண்ணையிட்டு வதக்கி வறுத்த பயிறு அல்லது கடலை, மிளகாய் போன்றவற்றைச் சேர்த்து சட்னியாக அரைத்து உண்ணலாம். இது கண்ணுக்குக் குளுமையைத் தரும்.
பழ உணவு எடுத்து விரதம் இருக்கிற நாட்களில் முழுப் பப்பாளியை அப்படியே உண்ணலாம். குடல் சுத்தத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும். நோன்புப் பயிற்சியின் தொடக்க நாட்களில் உப்பு, காரம் சேர்க்காமல் வெறும் பழம் மட்டும் என்கிற போது சிலருக்கு நோன்பு தண்டனையாக இருக்கும். அப்படிக் கருதுகிறவர்கள் பப்பாளியைத் துண்டுகளாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு அதன்மீது உப்பும், மிளகுத் தூளும் லேசாகத் தூவி அதனை உண்டால் உண்ணச் சுவையாக இருப்பதோடு உப்புக் காரத்தின் மீதான வேட்கையும் தணியும். தற்காலத்தில் ஜாம் தடவி சப்பாத்தித் தோசை உண்ணும் பழக்கம் பரவலாகிக் கொண்டு வருகிறது. ஜாம் ஒன்றும் மேல் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கூடக் கட்டுப்படியான விலையில் கிடைப்பதில்லை. ஆனால் அவசரத்திற்கு ஆகுமென்று வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அதிலும் செயற்கை நிறமிகளும், பாதுகாவினிகளும் உள்ளதால் ஜாம்கள் உடல் நலனுக்குப் பாதுகாப்பானதில்லை. எனவே ஜாம் விரும்பிகள் தாமாகவே பப்பாளி ஜாம் தயாரித்துக் கொள்ளலாம்.
எப்படி? மசித்தால் மசியும் நிலையில் உள்ள பப்பாளியைத் துண்டுகளாக அரிந்து கனமான பாத்திரத்தில் இட்டு மிதமாகச் சூடேற்றி ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து விட்டால் பழம் வெந்து மசியும் நிலைக்கு வந்து விடும். பாத்திரத்தை இறக்காமலே மத்து வைத்து மசித்து விட்டால் பழம் கூழாகி விடும். இதில் சிறிது சிறிதாக நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் தூள் சேர்த்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியாகும் சமயத்தில் அதனோடு சிறிதளவு நெய் அல்லது எண்ணை விட்டு புரட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கிண்ட முடியாத நிலையை எட்டிய பிறகு அப்படியே அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஆற வைத்த பிறகு இறுக்கமாக மூடும் பாட்டில் போன்ற கலத்தில் இட்டு மூடி வைத்து அவ்வப்போது எடுத்துப் பயன்படுத்தலாம். ஒரு வாரம் பத்து நாட்களுக்குள் இதனைக் காலி செய்து விடுவது நல்லது. இந்த ஜாமினைச் சுவைத்துப் பார்த்து விட்டால் வெளியில் இருந்து வாங்கும் ஜாம் நமது பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போய்விடும். இந்த ஜாம் பிள்ளைகளின் இளம் வயிறு மற்றும் குடலுக்கு மிகவும் ஏற்றது. நாவின் சுவை மொட்டுக்களையும் பாழாக்காது.
தொடர் பயணம் வெயிலில் அலைந்து உடலின் நீர் வற்றி விடுகிற போது மறுநாள் மலம் கழிப்பதில் சிலருக்குச் சிக்கல் தோன்றலாம். அதுபோன்ற நிலையில் மேற்சொன்னவாறு பப்பாளிப் பழத்துண்டுகளோடு சற்றே தூக்கலாக மிளகுத் தூள் சேர்த்து உண்டால் மலம் கழிப்பது எளிதாகி விடும். உடலுக்கு நலனும் தோலுக்குப் பதத்தன்மையும் தரும் பப்பாளியை நுகர்வதற்கு மேலும் பல வழிமுறைகள் உண்டு.
அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
கடந்த 18-ந் தேதி விடிய விடிய பெய்த மழையால் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் 1.25 லட்சம் கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வந்ததால் வெள்ளம் கரையோர பகுதிகளில் உள்ள ஊருக்குள் புகுந்தது. அதோடு விளைநிலங்களையும் மழை வெள்ளம் விட்டு வைக்கவில்லை.
அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக ஓய்ந்த நிலையில் நேற்று முதல் பரவலாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த மழை விடிய விடிய நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.
தொடர்மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமறை அளித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இன்று காலையும் மழை பெய்ததால் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.

மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மும்பை:

மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில், "மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, தைரியமாக எதிர்கொண்ட அனைத்து பாதுகாப்பு வீரர்களுக்கும் வீர வணக்கம். உங்கள் துணிச்சலைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்படுகிறது. உங்கள் தியாகத்திற்கு தேசம் எப்போதும் நன்றியுடன் கடமைப்பட்டிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, துணை முதல்வர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள்.. மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏற்படுத்திய ஆறாத ரணத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்
மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட இடங்கள் வெடித்து சிதறின. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 166 பேர் உயிரிழந்தனர்.

மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில், "மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, தைரியமாக எதிர்கொண்ட அனைத்து பாதுகாப்பு வீரர்களுக்கும் வீர வணக்கம். உங்கள் துணிச்சலைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்படுகிறது. உங்கள் தியாகத்திற்கு தேசம் எப்போதும் நன்றியுடன் கடமைப்பட்டிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, துணை முதல்வர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள்.. மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏற்படுத்திய ஆறாத ரணத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, வடலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கடலூர்:
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுபகுதியாக தீவிரமாக நிலைகொண்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்துவந்தது. அவ்வப்போது வெயிலும் அடித்தது.
இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, வடலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாகவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கிநின்றது. அந்த மழைநீர் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தொடர் மழை பெய்யதொடங்கியதால் மீண்டும் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளிலும் நீர்வரத்து தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம் (வர்ணம் பூசும் பணி) தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அஸர் தொழுகை நடந்தது. இதை தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி வெள்ளை முகூர்த்தத்தை தொடங்கி வைத்தார்.
இதில் டிரஸ்டிகள், தர்கா ஆதீனங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடலூர்:
வங்கக்கடலில் இலங்கை அருகே தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுநிலையாக உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. நள்ளிரவில் கடலூர், முதுநகர், மஞ்சக்குப்பம், புதுநகர், திருப்பாதிரிபுலியூர், வண்டி பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போதுதான் மழை வெள்ளம் வடிந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் ஆலய வளாகத்தில் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது.
பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை ஆலய வளாகத்தில் நடந்தது. விழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் திருப்பலி நடத்தினார். வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சகாயஜான் மறையுரை ஆற்றினார்.
மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், பாதிரியார்கள் மை.பா.சேசுராஜ், அன்டோ, உடையார்பட்டி மைக்கேல், ஆயரின் செயலாளர் மைக்கேல் பிரகாசம், மும்பை டேவிட், மதுரை சேவியர் தயாளன், பேராலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர்கள் சதீஸ் செல்வ தயாளன், அந்தோணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. 28-ந் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம், 2-ந் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா, மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப் பூசுதல் நடைபெறுகிறது.

கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையத்தில் 107 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டு, மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016-ம்ஆண்டு அனைத்து கடைகளுக்கும் வாடகை இருமடங்காக உயர்த்தப்பட்டது.
இதனால் பலர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் இதுவரை மொத்தம் ரூ.10 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் 3 செல்போன் கடைகள் உள்பட 7 கடைகளின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அதாவது 7 கடைகளின் உரிமையாளர்களும் சுமார் ரூ.4½ லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதனால் வாடகை பாக்கியை செலுத்தும்படி மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் விடுத்தும், அவர்கள் வாடகை செலுத்தவில்லை.
இந்த நிலையில் வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கும்படி மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி வருவாய் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், அசோகன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். ஒரே நேரத்தில் 7 கடைகளுக்கு அடுத்தடுத்து அதிகாரிகள் ‘சீல்’ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாநகராட்சிக்கு இன்னும் பலர் வாடகை பாக்கி செலுத்த வேண்டி உள்ளது. அவர்கள் விரைவில் வாடகை பாக்கி செலுத்தவில்லை யெனில், அந்த கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்படும் என கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் ஜம்மு-காஷ்மீர் போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு 3 பேரை சுட்டு வீழ்த்தினர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடிக்கடி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் பாதுகாப்புப்படையினர் இணைந்து பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் அடிக்கடி என்கவுண்டர் நடைபெற்று வருகிறது. இன்று ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ரம்பாக் என்ற இடத்தில் போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
திட்டக்குடி அருகே நாகவள்ளி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் நந்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையோரம் நாகவள்ளி அம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த மாதவன் உள்ளார்.
நேற்று மாலை கோவிலின் உள்ளே இருந்து மின் ஒயர் கருகி துர்நாற்றத்துடன் கரும்புகை வெளியேறியது. அவ்வழியே சென்றவர்கள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் வசந்தராஜன் தலைமையிலான வீரர்கள் வருவதற்குள் தீயை அப்பகுதி இளைஞர்கள் அணைத்தனர். என்றாலும் அம்மனுக்கு சாற்றும் பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென கோவிலில் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

வாகனம் மோதி பலியான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
படுகாயமடைந்த கனகராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
மோட்டார் வாகன ஆய்வாளரிடமிருந்து தப்பிப்பதற்காகத் தான், வாகனம் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேண்டுமென்றே மோதி நிற்காமல் சென்றுள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும். விசாரணையின் முடிவில் ஒருவேளை விபத்தாக இல்லாமல் இருந்தால், மோட்டார் வாகன ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவேளை விபத்தாக இருக்கும்பட்சத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வாகனத்தை மோதிவிட்டு, மனிதாபிமான அடிப்படையில் வண்டியை நிறுத்தாமல் சென்ற குற்றத்திற்காக அவர்மீது நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டுநரின் உரிமத்தை ஆயுட்காலம் முழுவதும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலையுண்ட காவல் சிறப்பு சார் ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர், பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கியிருப்பது பாரபட்சமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
எனவே, முதல்-அமைச்சர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணியாக விளங்கும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்றும், காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை தீர விசாரித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும், மோட்டார் வாகன ஆய்வாளரும் பணியில் இக்கும்போது உயிரிழந்ததால், காவல் துறை சிறப்பு சார் ஆய்வாளரின் குடும்பத்திற்கு வழங்கியதைப்போல முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடராஜர் கோவிலில் உள்ள சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி ஏராளமான பெண்கள் விரதத்தை கடைபிடித்து வலம் வந்து தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சோமவாரமாக கருதப்படுகிறது. அதன்படி நேற்று கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அதிகாலையிலேயே நீராடி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
இதில் நடராஜர் கோவிலில் உள்ள சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி ஏராளமான பெண்கள் விரதத்தை கடைபிடித்து வலம் வந்து தரிசனம் செய்தனர்.
இதே போன்று கோவிலில் உள்ள ஆதிமூலநாதர் சன்னதியையும் பெண்கள் 108 முறை வலம் வந்தனர். அதேநேரத்தில் கார்த்திகை மாதத்தில் நடராஜர் கோவிலுக்கு அதிகளவில் அய்யப்ப பக்தர்கள் வருகை தருவதுண்டு. ஆனால் தற்போது அவர்களது வருகை குறைந்தே காணப்படுகிறது.