என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95278"

    7 ஆண்டுகளுக்கு பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ்பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும். 

    இந்த விழாவை 7 ஆண்டுகளுக்கு முன்பு தர்கா ஹக்தர்களால் தேர்வு செய்யப்படும் நிர்வாக குழு நடத்தி வந்தனர். இடையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக நிர்வாகிகள் தேர்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் கோர்ட்டு மூலம் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவருடைய மேற்பார்வையில் சந்தனக்கூடு திருவிழா நடந்து வந்தது. 

    தற்போது பக்தர்கள்   ஒன்றிணைந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இதனால் 7 ஆண்டுகளாக நடந்த இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். புதிய நிர்வாகிகள் தலைமையில் வருகிற 28-ந் தேதி ஹக்தார்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையின் 2022-ம் ஆண்டு புதியதலைவராக பாக்கிர் சுல்தான் லெவ்வை, செயலாளராக சிராஜுதீன் லெவ்வை, உதவி தலைவராக சாதிக் பாட்ஷா லெவ்வை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

    நிர்வாகக்குழு உறுப்பினர்களாக முதல் கிளையில் செய்யது சிராஜுதீன், செய்யது இப்ராஹீம் சோட்டை எஸ் பாதுஷா, ஹுஸைன், செய்யது இஸ்ஹாக்அபுல் ஹஸன், முர்சல் இபுறாஹீம் ஆலிம், 2-ம் கிளை பாக்கிர் சுல்தான், சுல்தான் செய்யது இப்ராஹீம், சாதிகுல் ஆமீன், அப்துல் கனி, கலில் ரஹ்மான், செய்யது இபுராஹிம்அமிர் ஹம்ஸா,3-ம் கிளை சித்திக்லெவ்வை, அப்துல் ரஹீம், அம்ஜத் ஹுஸைன், சாதிக் பாட்சா லெவ்வை, கனி லெவ்வை, செய்யது அபூதாஹிர், செய்யது இஸ்ஹாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

    சந்தனக்கூடு திருவிழா இன்று ஜூன் 1-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு விழா தொடங்குகிறது. இதையொட்டி இந்து சமுதாய மீனவர்கள் கொடுத்த கடல் நீரால் இன்று காலை தர்கா மண்டபத்தை சுத்தம் செய்தனர்.

    வருகிற 11-ந்தேதி கொடியேற்றம், 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ந் தேதி அதிகாலை பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றம் 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர்சுல்தான் லெப்பை, செயலாளர் சிராஜுதீன் லெப்பை, துணை தலைவர் சாதிக் பாட்ஷா லெப்பை மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்கள், தர்ஹா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
    ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா மவுலீது ஓதப்பட்டு தொடங்கியது. இதையொட்டி தர்காவை சுத்தம் செய்ய மீனவ பெண்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மவுலீது ஓதப்பட்டு தொடங்கப்பட்டது. திருவிழாவையொட்டி இந்து சமுதாய மீனவ பெண்கள் தண்ணீரை கொண்டு வந்து ஏர்வாடி தர்காவை சுத்தம் செய்வது காலம்காலமாக நடந்து வருகிறது.

    இதன்படி நேற்று மீனவ பெண்கள் கடல்நீரை குடங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து வந்து தர்காவில் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர். விழாவில் வருகிற 11-ந் தேதி மாலை கொடியேற்றம் நடைபெறுகிறது. 23-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

    30-ந் தேதி மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது என்று ஏர்வாடி ஹத்தார் நிர்வாக சபையின் கமிட்டியாளர்கள் தகவல் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பக்கீர் சுல்தான், துணைத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் தலைமையில் முன்னாள் தலைவர் அம்ஜத் உசேன், தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் உறுப்பினர்கள், உலமாக்கள் ஆகியோர் முன்னிலையில் பலர் கலந்து கொண்டனர்.
    நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம் (வர்ணம் பூசும் பணி) தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அஸர் தொழுகை நடந்தது. இதை தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி வெள்ளை முகூர்த்தத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் டிரஸ்டிகள், தர்கா ஆதீனங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நத்தம் சையது சாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.
    நத்தம் பெரிய பள்ளி வாசலில் உள்ள சையதுசாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதில் நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட

    புனித சந்தனம் குடத்தில் நிரப்பப்பட்டு சலங்கைகள் ஒலிக்க தர்காவிலிருந்து டாக்டர் நசீர் அகமது சையது மீரான் தலையில் சுமந்து செல்ல ஊர்வலம்

    புறப்பட்டது.

    இந்த ஊர்வலம் சந்தனகுடத்தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக வந்து மீண்டும் தர்காவை அடைந்தது. தொடர்ந்து அங்கு சந்தனம் பூசும்

    நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.

    இதில் வேம்பார்பட்டி அரசுப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன்,

    தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் சேக் ஒலி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான

    ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    பனைக்குளம் கிராமத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடந்தது. இதில் ஏராளமானோர் கந்தூரி தேங்காய் சாதத்தை பெற்று சென்றனர்.

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிராமத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடந்தது. மவுலீது ஓதும் நிகழ்ச்சி பனைக்குளம் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் மற்றும் ஜமாத் தார்கள் முன்னிலையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று கந்தூரி தேங்காய் சாதம் வழங்கப்பட்டது.

    பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபைத் தலைவர் சிராஜுதீன், செய லாளர் பலீல் அகமது மற்றும் ஜமாத் நிர்வாகிகள், முஸ்லீம நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது, ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கந்தூரி விழா கமிட்டி தலைவர் ரோஸ் சுல்தான் உள்பட ஐக்கிய முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தொழுகைக்கு பின்பு முகைதீன் ஆண்டகை பற்றி சொற் பொழிவு ஆற்றி மக்கள் நலனுக்காகவும் சிறப்பு துவா செய்தார்.

    இதில் ஏராளமானோர் கந்தூரி தேங்காய் சாதத்தை பெற்று சென்றனர். பனைக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பணிகளை செய்திருந்தனர். ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
    ராமநாதபுரத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழாவையொட்டி கடந்த 11 நாட்களாக மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர்.
    ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பாசிப்பட்டரைத்தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழாவை நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவையொட்டி கடந்த 11 நாட்களாக மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த் தனை நடத்தபட்டது. கந்தூரி விழாவையொட்டி நெய்சோறு வழஙகப்பட்டது.

    விழாவில் ஜமாத் நிர்வாகத்தின் அறங்கா வலர்கள், மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 203-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடந்தது. நேற்று நேர்ச்சை வழங்கல், மவுலூது ஷரிபு, துவா ஓதி நேர்ச்சை வழங்கல் நடந்தது.
    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 203-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடந்தது.

    கடந்த 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிலம்பு விளையாட்டுடன் பால்குட ஊர்வலம் நடந்தது. மறுநாள் காலை 8 மணிக்கு கொடிசுற்று வரி வசூல், மாலை 3 மணிக்கு அரபி மதரஸா நிகழ்ச்சிகள், இரவு 9.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நடைபெற்றது. நேற்று காலையில் நேர்ச்சை வழங்கல், மவுலூது ஷரிபு, துவா ஓதி நேர்ச்சை வழங்கல் நடந்தது.

    போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ரஹ்மான் பரிசு வழங்கினார். இமாம்கள் முகம்மது ஆலிம், முகம்மது சபீக் ஆகியோர் மார்க்க சொற்பொழிவு வழங்கினர். கந்தூரி கமிட்டி ஆலோசகர் மொய்த்தீன் வரவேற்று பேசினார். கந்தூரி விழாக் கமிட்டி நிர்வாகிகள் உட்பட திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் யூனூஸ் மீரான் மற்றும் புதுமனை ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
    திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி தர்காவில் உரூஸ் பாத்திகாவும், தொடர்ந்து இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    மறுநாள் திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்காவில் இருந்து நிர்வாக அறங்காவலர் ஹாஜா மொய்தீன் தலைமையில் ஜமாத்தார்கள் ஊர்வலமாக சின்னசூரியூருக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திருச்சி, மைசூரு, பெங்களூரு, கோலார், சின்னசூரியூர், மாத்தூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த மதபோதகர்கள், குருமார்கள், ஊர்முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பீர்பாபா சையத் நயீம் கலந்தர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது.
    அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது. இதனையொட்டி கொடி மரங்கள் அழைக்கப்பட்டு பள்ளி வாசலுக்கு வந்தன.

    பின்னர் பொது கொடிமரம், சந்தனம், ஜவ்வாது, மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இன்னிசை முழங்க ஒயிலாட்டத்துடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது.

    அத்துடன் மற்ற கொடிமரங்களும் ஒன்றாகவே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
    தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் 59-வது ஆண்டு உரூஸ் என்ற சந்தனக்குட விழா இன்றும், நாளையும்தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் உறைவிடத்தில் நடைபெற உள்ளது.
    தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் 59-வது ஆண்டு உரூஸ் என்ற சந்தனக்குட விழா இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் உறைவிடத்தில் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று இரவு 10 மணியளவில் ஹஜரத் வீட்டில் இருந்து சந்தனக்குடம் ஊர்வலமாக புறப்பட்டு இரவு தர்காவுக்கு வந்து சேரும்.

    நாளை காலை 5 மணியளவில் சந்தனம் பூசப்படும். இந்த இரண்டு நாட்களும் இஸ்லாமிய இசைக்கச்சேரி நடைபெறும். அதேநேரம் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மற்றும் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் நல்லாசியும், துவாவையும் பெற்று கொண்டு தர்காவில் நடைபெறும் பாத்திஹாலில் கலந்து கொண்டு தப்ரூக்கையும் பெற்று செல்லுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த விழாவையொட்டி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை மன்சூர் ஜானி(மும்பை)-சாதிக்கா சஞ்சேரி (ஐதராபாத்) ஆகியோரின் போட்டி உருது கவ்வாலி கச்சேரியும், நாளைஇரவு 7 மணி முதல் 11 மணிக்குள் கலைமாமணி சென்னை எம்.ஏ.குத்தூஸ் குழுவினரின் தமிழ் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும், நாளை இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை சமீர் ஷேஹசாதே(கர்நாடகம்)-சல்மாதாஜ்(ஆந்திரா) குழுவினரின் உருது கவ்வாலி கச்சேரியும் நடைபெறும். தர்காவில் பாத்திஹாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும், தங்குவதற்கு இடவசதி உண்டு என்று தர்கா குடும்ப உரிமையாளர்கள் தெரிவித்தனர். 
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி தர்காவில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது.. ஏராளமான வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களின் கூட்டத்தால் ஏர்வாடி தர்கா களை கட்டி உள்ளது.

    நேற்று மாலை 4 மணிக்கு யானை, குதிரைகளுடன், மேளதாளங்கள் முழங்க தைக்காவில் இருந்து ஊர்வலமாக சென்று போர்வை எடுக்கும் விழா நடைபெற்றது. அதன்பிறகு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுராகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இன்று அதிகாலை 4 மணிக்கு தர்கா வந்தடைந்தது. தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பக்தர்கள் தங்குவதற்கு தர்காவில் சிறப்பு பந்தல்களும். வளாகத்தில் பல்வேறு இடங்களில் கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறையினரின் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 24 மணி நேரம் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் தடையில்லா மின்சாரம் வழங்க மின்துறை அலுவலர்கள் ஏர்வாடியில் முகாமிட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    சமூக விரோதிகள் நட மாட்டத்தை கண்காணிக்கும் வகையில் தர்கா வளாகத்தில் 50-க்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தர்கா நிர்வாக அலுவலகத்தில் இருந்தபடியே கண் காணிக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    ×