என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பின்புறம் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் 117 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 50 பேர் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெறலாம் என தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளனர்.

    மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவையும் தளர்த்தி வழக்கம்போல் கோவில்கள் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இன்று முகூர்த்த நாள் என்பதால் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வந்தன.

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பின்புறம் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன. மேலும் திருவந்திபுரம் சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

    இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில்கள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்ததால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மூடப்பட்டு கோவில் முகப்பு பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் மணமக்கள் ஜோடியாக கோவில் முன்பு தங்கள் உறவினர்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் சாலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் முகக்கவசம் அணியாமல் திருமணம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் நடைபெறும் திருமணத்தின்போது அவர்கள் உறவினர்கள் பெற்றோர்கள் என 10 பேர் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து திருமண நடைபெற வேண்டும் என எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக திருவந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 2 மணிக்கே விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். இத்தலம் இறைவனுக்கு ‘பழமலைநாதர்’ என்ற பெயரும் உண்டு.

    பிரம்மதேவனும், அகத்தியரும் வழிபாடு செய்த இந்த ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் கொண்ட சிறப்புமிக்கது. முன்காலத்தில் இத்தல இறைவன் மலையாக காட்சியளித்தவர் என்பதால் இவருக்கு ‘முதுகுன்றீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரும் முன்காலத்தில் ‘திருமுதுகுன்றம்’ என்றே அழைக்கப்பட்டுள்ளது.

    இத்தல அம்பாளின் திருநாமம், பெரியநாயகி என்பதாகும். ‘விருத்தாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார். குரு நமச்சிவாயத்திற்கு இளமையாக காட்சி கொடுத்ததால், ‘பாலம்பிகை’, ‘இளைய நாயகி’ என்ற பெயரும் உண்டு. புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த கோவிலில் 5 நந்தி, 5 பிரகாரம், 5 கோபுரங்கள், 5 தீர்த்தம் என அனைத்தும் 5 ஆக அமையப்பெற்றது தனி சிறப்பாகும். அந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2002-ம் ஆண்டு நடந்தது. இதையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான விழா கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 2-ந் தேதி மணிமுக்தா ஆற்றில் இருந்து யாக சாலை பூஜைக்கான தீர்த்தம் யானை மீது வைத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    3-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று 4-ம் கால யாகசாலை, 5-ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இன்று (6-ந்தேதி) காலை 4 மணிக்கு 6-ம் கால யாக பூஜைகள், காலை 5 மணிக்கு பரிவார யாகங்கள், பூர்ணா ஹூதி, பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 7 மணிக்கு பிரதான மூர்த்திகளுக்கு மகா பூர்ணாஹூதி, காலை 7.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 8.15 மணிக்கு கோபுரங்கள், விமானங்கள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 8.30 மணிக்கு மூலவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை 2 ஆயிரம் கோவில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்திய சிறப்பு பெற்ற பிச்சை குருக்கள் நடத்தி வைத்தார். அப்போது கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் நின்ற பக்தர்கள் மீது புனிநீர் தெளிக்கப்பட்டது.

     விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்

    கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 2 மணிக்கே விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் 4 வீதிகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    இன்று அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்குள் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பக்தர்கள் நின்ற இடத்தை விட்டு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதையொட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவரும் ஜெயின் ஜூவல்லரி அதிபருமான அகர்சந்த், அமைச்சர் கணேசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    கடலூர் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் சுத்துகுளம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் முகிலன் (வயது 21)மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐ.டி.ஐ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    1 ஆண்டுக்கு முன்பு முகிலனுக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மீண்டும் வயிற்றில் வலி ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று அதிக வலியுடன் தூங்கச் சென்ற முகிலன், காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

    இதைப்பார்த்த அவர்களது பெற்றோர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில்18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, 5-வது வார்டு தமிழ்செல்வன், 10-வது வார்டு கிருஷ்ண மூர்த்தி, 18 வது வார்டு ராமலிங்கம் உள்ளிட்ட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    மற்ற 9 பேர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க., நகர செயலாளர் முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் 17 -வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது மருமகள் ஆனந்தி வசந்த் 15-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவதுஅந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் 24-வது வார்டில் நகர துணை செயலாளர் மோகன், வார்டு 22-ல் மோகன் மனைவி சரளா ஆகிய இருவரும் போட்டியிட மனு கொடுத்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் தி.மு.க., சார்பில் நகர செயலாளர் ராஜேந்திரன் (முன்னாள் கவுன்சிலர்), ராஜேந்திரன் மனைவி கஸ்தூரி 22-வது வார்டில் போட்டியிட மனு செய்துள்ளார்.

    அ.தி.மு.க.,வில் 24-வது வார்டில் நகர துணை செயலாளர் மோகன், வார்டு 22-ல் மோகன் மனைவி சரளா (முன்னாள் கவுன்சிலர்) ஆகிய இருவரும் போட்டியிட மனு கொடுத்தனர்.

    அதே போல் சுயேட்சை வேட்பாளர்கள் 30-வது வார்டில் ராமலிங்கம் (முன்னாள் கவுன்சிலர்), ராமலிங்கம் மனைவி ரமாதேவி 19 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, 5-வது வார்டு தமிழ்செல்வன், 10-வது வார்டு கிருஷ்ண மூர்த்தி, 18 வது வார்டு ராமலிங்கம் உள்ளிட்ட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 9 பேர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தி.மு.க. நகர செயலாளர் முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் 17-வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது மருமகள் ஆனந்தி வசந்த் 15-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க.,வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் 14-வது வார்டில் தி.மு.க., சார்பில் பேரூராட்சி செயலாளர் ஜெயமூர்த்தியும் 4-வது வார்டில் அவரது மனைவி மணிமேகலையும் போட்டியிடுகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம் பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகள் பெண்களுக்கும் தலைவர் பதவி பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட 51 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க., சார்பில் 14-வது வார்டில் பேரூராட்சி செயலாளர் ஜெயமூர்த்தியும் 4-வது வார்டில் அவரது மனைவி மணிமேகலையும் போட்டியிடுகின்றனர்.

    இவர்கள் 2 பேரும் இதற்கு முன்பு பேரூராட்சி தலைவர்களாக பணியாற்றி உள்ளனர். தற்போது தி.மு.க., வேட்பாளர்கள் அதிகளவு வெற்றி பெற்றால் மீண்டும் இருவரில் ஒருவர் தலைவராக வாய்ப்புள்ளது. கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் மீண்டும் தலைவராக வேண்டுமென்பதால் இருவரும் போட்டியிடுகின்றனர்.
    கும்பாபிஷேகத்தையொட்டி விருத்தாசலம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு ‘பழமலைநாதர்’ என்ற பெயரும் உண்டு.

    பிரம்மதேவனும், அகத்தியரும் வழிபாடு செய்த இந்த ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் கொண்ட சிறப்புமிக்கது. முன்காலத்தில் இத்தல இறைவன் மலையாக காட்சியளித்தவர் என்பதால் இவருக்கு ‘முதுகுன்றீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரும் முன்காலத்தில் ‘திருமுதுகுன்றம்’ என்றே அழைக்கப்பட்டுள்ளது.

    இத்தல அம்பாளின் திருநாமம், பெரியநாயகி என்பதாகும். ‘விருத்தாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார். குரு நமச்சிவாயத்திற்கு இளமையாக காட்சி கொடுத்ததால், ‘பாலம்பிகை’, ‘இளையநாயகி’ என்ற பெயரும் உண்டு. புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி முன்னதாக கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.

    அதனை தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. கடந்த 2-ந்தேதி மணிமுக்தா ஆற்றில் இருந்து யாக சாலை பூஜைக்கு யானைகளில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

    இதை தொடர்ந்து யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 2-ம் கால யாக சாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாக சாலை பூஜையும் நடந்தது.

    நாளை (6-ந்தேதி) காலை 4 மணிக்கு 6-ம் கால யாக பூஜைகள், காலை 5 மணிக்கு பரிவார யாகங்கள், பூர்ணாஹூதி, பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 7 மணிக்கு பிரதான மூர்த்திகளுக்கு மகா பூர்ணாஹூதி, காலை 7.15 மணிக்கு கடம் புறப்பாடு, 8.15 மணிக்கு கோபுரங்கள், விமானங்கள் மகா கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு மூலவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கிறார்கள். விழாவில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா குழு தலைவரும், ஜெயின் ஜூவல்லரி அதிபருமான அகர்சந்த் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    கும்பாபிஷேகத்தையொட்டி விருத்தாசலம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க நவீன மின் மோட்டார் மற்றும் நீர் தூவும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

    திட்டக்குடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மாதிரி சேகரித்து கோவை ஆய்வு கூடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே கீழக்கல்பூண்டியில் இப்ராஹிம் (47) இவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். இதனை அறிந்த குற்ற தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையில் 25 டன் புகையிலை பறிமுதல் செய்தனர்.

    நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ்குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு 25 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மாதிரி சேகரித்து கோவை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    திராவிட கழகம் சார்பில் காந்தி நினைவு நாளில் கோட்சே பெயரை கூற தடைவிதித்ததை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    திராவிட கழகம் சார்பில் காந்தி நினைவு நாளில் கோட்சே பெயரை கூற தடைவிதித்ததை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இதில் நிர்வாகிகள் ராவணன், இந்திரசித், வேணுகோபால், தமிழன்பன், சேகர், சின்னதுரை, மாதவன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் எழிலேந்தி நன்றி கூறினார்.
    சிதம்பரத்தில் கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் விக்னேஷ்(வயது 27). இவர் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விக்னேசை வழிமறித்து, கத்தி முனையில் செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கே.ஆடூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமரன் மகன் சிவா (எ) சிவராஜ்(24), ராஜசேகரன் மகன் விமல்ராஜ்(22) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் அதிகாரிகள், காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் காவல் உதவி எண்களை அறிமுகம் செய்தார்.

    காவல் உதவி எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் அதிகாரிகள், காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் பொது இடங்களில் மது அருந்திய 48 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காவல்துறையின் அறிவுரையை பின்பற்றாத 1794 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பொது இடங்களில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ×