என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி வட்டத்தில் பணிபுரியும் அனைத்து ரேசன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து உடனடியாக அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி போராட்டம் செய்தனர்.

    பண்ருட்டி:

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 31 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைகடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று (8-ந்தேதி) இந்த போராட்டம் நடந்தது. பண்ருட்டி வட்டத்தில் பணிபுரியும் அனைத்து ரேசன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து உடனடியாக அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி போராட்டம் செய்தனர்.

    பண்ருட்டி பகுதியில் உள்ள200-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் மூடப்பட்டு இருந்தது.

    சிதம்பரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் இளஞ்சூரியன் 31, இவர் சிதம்பரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இளஞ்சூரியன் கடந்த 2ஆம் தேதி என்று சி. முட்லூர் ராகவேந்திரா கல்லூரி அருகே விஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளார். 

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இளஞ்சூரியன் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 6 தேதி மருத்துவமனையில் இளஞ்சூரியன் உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி அனிதா சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

    புகாரில் தனது கணவர், இளஞ்சூரியன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளதாகவும், வாங்கிய பணத்தை சரியான முறையில் கட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர்களும், சிலர் வற்புறுத்தி மிரட்டியதாகவும் அதனால் மன உளைச்சல் காரணமாக எனது கணவர் இறந்துள்ளார். 

    இதனால் எனது கணவர் , இறந்ததற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கை தற்கொலை தூண்டுதல் வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளஞ்சூரியன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

    பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பஸ் வராததை கண்டித்து போராட்டம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகரில் சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இங்கு அரசு மற்றும் தனியார் பஸ் அந்தந்த நேரத்திற்கு.பரங்கிப்பேட்டை பஸ் நிலையம். வந்து செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக தனியார் பஸ்கள் அனைத்தும் பரங்கிப்பேட்டை வராமல் செல்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்" "அரசு.மற்றும்.தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை நகருக்கு வந்து செல்ல அனுமதி பெற்றுள்ளார்கள். 

    ஆனால் சில தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வராமல் சிதம்பரத்தில் இருந்து நேராக கடலூர். கடலூரில் இருந்து நேராக சிதம்பரத்திற்கும். செல்கின்றார்கள். இதனால் பஸ்சை நம்பியிருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து பஸ் நிலையத்தில் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. 

    நேற்று மதியம் 11. மணியளவில் கடலூரிலிருந்து பரங்கிப்பேட்டை வழியாக தனியார் பஸ் ஒன்று சிதம்பரம் செல்ல பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் நின்றது. அப்போது பரங்கிப்பேட்டை பஸ் நிலைய சமூக ஆர்வலர்கள் அந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

    பரங்கிப்பேட்டை நகருக்கு அனுமதி பெற்றுக் கொண்டு ஆனால் பரங்கிப்பேட்டை நீங்கள் வருவதில்லை. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. என்று பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அந்த தனியார் பஸ்சை பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் சிறை பிடித்தனர்.சம்பவம்கேள்விப்பட்டதும். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ். மற்றும் போலீசார் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்தனர். 

    பின்னர் சிறைபிடித்த பொதுமக்களிடம் நீங்கள் பஸ்சை மறிக்க வேண்டாம் நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உங்கள் முடிவை சொல்லுங்கள் அதற்கான விடிவு காலம் பிறக்கும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் பஸ் டிரைவரிடமும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ்.சரியான நேரத்திற்கு பரங்கிப்பேட்டையில் வந்து செல்ல வேண்டும் என்று எச்சரித்தார் .மேலும் அந்த சமூக ஆர்வலர்கள் அந்த தனியார் பஸ்சில் 'வழி பரங்கிப்பேட்டை என்று பஸ் முன் பக்கம் கண்ணாடி பின்பக்கம் கண்ணாடியில் ஒட்டினர்கள்.

    இதனால் பஸ் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் பின்னர் பஸ் எடுத்துச்செல்லப்பட்டது.இதனால் ஒரு மணி நேரம் அந்த பஸ் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    உள்ளாட்சித் தேர்தல் வருவதையொட்டி லால்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனைமேற்கொண்டு வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சியில் வருகிற 19ம்தேதி வார்டு உறுப்பினருக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி பறக்கும் படை அதிகாரி ஆனந்தன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதுபாலன் போலீஸ் ஏட்டு ஆகிய குழுவினர்கள் லால்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனைமேற்கொண்டு வருகின்றனர்.

    ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த ராமசாமியை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் பஞ்சாயத்து தலைவர் வாசுகி (வயது 40) இவர் தனது கணவர் துளசியுடன் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் நின்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் அங்கு வந்தார்.அப்போது வாசுகியிடம் எனது வீட்டுக்கு அமைத்த குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என தெரிவித்தார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி நாளைக்கு சரிவர தண்ணீர் வரும் என்று கூறினார். ஆத்திரமடைந்த ராமசாமி பஞ்சாயத்து தலைவர் வாசுகியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி கீழே தள்ளி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தடுக்க வந்த வாசுகி கணவரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த ராமசாமியை கைது செய்து பண்ருட்டி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கடலூர் அருகே திருவந்திபுரம் கோவில் சாலையில் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து திருமணம் நடைபெற வேண்டும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதையொட்டி வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

    அதோடு திருணமண விழாக்களில் 50 பேர் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெறலாம் என தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளனர்.

    கடலூர் அருகே திருவந்திபுரத்தில் பிரசித்திப்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காகவே கோவில் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளது.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பின்புறம் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன. மேலும் திருவந்திபுரம் சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களில் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

    இதையொட்டி இன்று காலை முதல் மணமக்கள் ஜோடியாக கோவில் முன்பு தங்கள் உறவினர்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் சாலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் முகக் கவசம் அணியாமலும் திருமணத்தில் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் நடைபெறும் திருமணத்தின் போது அவர்கள் உறவினர்கள் பெற்றோர்கள் என 10 பேர் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து திருமணம் நடைபெற வேண்டும் என எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக திருவந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 447 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான மொத்தம் 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும், வாக்கு எண்ணிக்கைக்கும் 14 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி, கடலூர் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு டேனிஷ் மி‌ஷன் மேல்நிலைப்பள்ளியும், பண்ருட்டி நகராட்சிக்கு சுப்பராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், சிதம்பரம் நகராட்சிக்கு ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியும், விருத்தாசலம் நகராட்சிக்கு திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியும், வடலூர் நகராட்சிக்கு குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், திட்டக்குடி நகராட்சிக்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதேபோல, அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியும், காட்டுமன்னார் கோயில், லால்பேட்டை பேரூராட்சிகளுக்கு காட்டு மன்னார் கோவிலில் உள்ள பருவதராஜ குருகுல மேல்நிலைப்பள்ளியும், புவனகிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகளுக்கு புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், கங்கை கொண்டான், மங்கலம்பேட்டை பேரூராட்சிகளுக்கு மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியும், பெண்ணாடம் பேரூராட்சிக்கு திட்டக்குடி அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகளுக்கு சேத்தியாத்தோப்பு தேவங்குடி கோபால கிருஷ்ணன் மழவராயர் மேல்நிலைப்பள்ளியும், தொரப்பாடி, மேல்பட்டாம் பாக்கம் பேரூராட்சிகளுக்கு புதுப்பேட்டையிலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், கிள்ளை பேரூராட்சிக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    கடலூர் அருகே அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் இருந்து கடலூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு இன்று காலை வந்து கொண்டிருந்தது.

    அப்போது கடலூர் அருகே உள்ள செல்லாங்குப்பம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் அரசு பஸ்சும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    அப்போது அரசு பஸ் முன்பக்க கண்ணாடி மற்றும் டிரைவர் அருகாமையிலிருந்த இரும்புக் கம்பி பலத்த சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். மேலும் அரசு பஸ் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.

    ஆனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து காயமடைந்த அரசு பஸ் டிரைவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலை கடலூர் சிதம்பரம் சாலையில் விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    கடலூர் மாநகராட்சியில் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக வார்டு எண்கள் 15, 16, 34, 45 ஆகியவற்றில் தலா 2 வாக்குச்சாவடிகளும், வார்டு எண்கள் 25, 28-ல் தலா ஒரு வாக்குச்சாவடியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடலூர் மாநகராட்சியில் 352 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 350 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுவை திரும்பப்பெற இன்று கடைசி நாளாகும்.

    கடலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 வார்டுகளுக்கு 152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 68,873 ஆண் வாக்காளர்களும், 74972 பெண் வாக்காளர்களும், இதரர் 50 பேரும் வாக்களிக்கின்றனர். மொத்தம் 1,43895 வாக்காளர்கள் உள்ளனர்.

    கடந்த தேர்தல் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கொண்டு பதட்டமான, மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டன.

    அதன்படி, கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 35 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

    இதன்படி, வார்டு எண்கள் 4, 7, 16, 28, 38 ஆகியவற்றில் தலா 4 வாக்குச்சாவடிகளும், வார்டு எண் 34-ல்2 வாக்குச்சாவடிகளும், வார்டு எண் 35-ல் 3 வாக்குச் சாவடிகளும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக வார்டு எண்கள் 15, 16, 34, 45 ஆகியவற்றில் தலா 2 வாக்குச்சாவடிகளும், வார்டு எண்கள் 25, 28-ல் தலா ஒரு வாக்குச்சாவடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மாநகர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் நெல்சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வறண்டு காணப்படுகிறது.

    இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 45 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.90 அடியாக குறைந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது இன்று 333 கனஅடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது அறுவடை நடந்து வருவதால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

    சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
    விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காணாமல் போன 4 வயது சிறுமியை உடனே மீட்ட போலீசார் அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.
    கடலூர்:

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

    கோவிலின் மேற்குரத வீதியில் பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் ஈடுபட்டது. அப்போது போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்.

    உடனே போலீசார் அந்த குழந்தையின் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் பெயர் மகாலட்சுமி, தந்தை பெயர் சுதன், தாய் பெயர் கவுரி கள்ளக்குறிச்சி என கூறியது.

    அதன்பேரில் உடனடியாக காவல்துறை பாதுகாப்புபணி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. போலீசாரின் அறிவிப்பை கேட்ட குழந்தை மகாலட்சுமியின் தாய் கவுரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டு உறுதி செய்துகொண்டு குழந்தை மகாலட்சுமியை அவரது தாய் கவுரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

    குழந்தையை உடனடியாக மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பெண் பக்தர்களின் ஆபரணங்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்கள் மூலம் ஊக்கு அணிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திட்டக்குடி அருகே வேகத்தடை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    திட்டக்குடி:

    திட்டக்குடி விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையின் ஓரம் அமைந்துள்ள சத்தியவாடி கிராமத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    தற்போது மேலும் அப்பகுதியில் சிறிய சிறிய பாலங்கள் அமைத்துள்ளனர். அந்தப் பாலம் அதிக உயரமாக உள்ளதால் பாலத்தின் மட்டத்திற்கு தார் சாலை அமைக்காமல் உள்ளதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் செல்வோர் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது.

    இதை தடுக்கும் வகையில் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் இது வரை செவிசாய்க்காமல் இன்றுவரை அவ்விடத்தில் வேகத்தடை அமைத்து தராமல் உள்ளனர். நேற்று இரவு அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திட்டக்குடி விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது .

    இதுகுறித்து தகவலின்பேரில் வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×