என் மலர்
கடலூர்
சிதம்பரம் அருகே கடல் சீற்றத்தால் ஏற்பட்ட படகு விபத்தில் மீனவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 45). மீனவர். இவர் விசைப்படகில் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றார். மீன்பிடித்து விட்டு பாஸ்கர் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பெத்தோடை முகத்துவாரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தில் படகு சிக்கியது. தொடர்ந்து கடல் சீற்றத்தில் சிக்கிய படகு சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டு தரை தட்டியது.
அப்போது படகில் இருந்த இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக பாஸ்கரின் மார்பில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த பாஸ்கர் வலியில் அலறி துடித்தார். உடனே பாஸ்கரை மற்ற மீனவர்கள் மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட பாஸ்கர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 10,55,000 மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த அருண்குமார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019 நவம்பர் மாதம் தனியார் நிறுவனம் மூலம் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரத்தை பார்த்து அதன் மூலம் தொடர்பு கொண்டு அதன் உரிமையாளர் தீபக் மற்றும் அதில் பணிபுரிந்த ஊழியர் பவதாரணி ஆகிய2 பேரும் தாங்கள் பல நபர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் பணம் கொடுத்தால் கண்டிப்பாக தன்னை சிங்கப்பூர் நகை கடை சேல்ஸ்மேன் வேலைக்கு அனுப்புவதாக கூறினார்கள்.
இதனை தொடர்ந்து 65 ஆயிரம் பணம் அளித்துள்ளேன். இதனை தொடர்ந்து நெய்வேலி மந்தாரக்குப்பம் அருண், சிதம்பரத்தை சேர்ந்த சிவக்குமார், கில்லியை சேர்ந்த சதீஷ்குமார் பெரியப்பட்டு வினோத்குமார் வாண்டயான்பள்ளம் சீனிவாசன், பெராம்பட்டு பிரபு, ராதா விளாகம் கிராமத்தை சேர்ந்த கற்பகவல்லி என்பவரிடம் அஞ்சல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதன்படி மொத்தம் 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 10,55,000 மோசடி செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த வசபுத்தூர் சேர்ந்த தீபக் என்பவரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணைகாவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குருசாமி தலைமையிலான போலீசார் சென்னையில் திருமுல்லை வாயில் பொத்தூர் அருகில் பதுங்கி இருந்த நபரை ரகசிய தகவலின் பேரில் கைது செய்தனர்.
இவர் மேலும் பல நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலலட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி மோசடி செய்து இருப்பது விசாரணையில் தெரியவருகிறது.
பண்ருட்டியில் காதலி பேசாததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 30) இவர் நேற்று மாலை குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் புடவை துணியால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல இதே தெருவை சேர்ந்த மூர்த்தி என்பது மகன் கவியரசன் (22).இவர் சென்னையில் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டரில் படித்து வந்தார்.
இவருக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பெண் இவருடன் பேசவில்லை என்பதால் தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோலஅதே தெருவை சேர்ந்த பலராமன் (82). இவர் சர்க்கரை நோயாளி. சர்க்கரைநோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக 2 கால்களில் உள்ள விரல்கள் எடுக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த பலராமன் தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்தார்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்புஷ்பராஜ், ரங்கநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் உடல்களை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் நகராட்சி 7-வது வார்டில் தி.மு.க., பா.ம.க., வேட்பாளர்கள் இருவருக்கும் தளபதி என்று பெயர் உள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 7-வது வார்டில், தி.மு.க., வேட்பாளர் வே. தளபதி, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் சேர்மன் அருள் அழகன், பா.ம.க., வேட்பாளராக கா. தளபதி, பா.ஜனதா வேட்பாளர் ஜெயராமன் போட்டியிடுகின்றனர்.
இதில் தி.மு.க., மற்றும் பா.ம.க., வேட்பாளர்கள், இருவரும் தளபதி என்ற ஒரே பெயரை கொண்டவர்கள். தேர்தல்களில் ஒரே பெயரை கொண்ட சுயேட்சை வேட்பாளர்கள் பலர் களமிறங்குவர். இதனால் வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை தடுத்துவிட முடியும் என்பது பரவலான கருத்து.
விருத்தாசலம் நகராட்சி 7-வது வார்டில் தி.மு.க., பா.ம.க., வேட்பாளர்கள் இருவருக்கும் தளபதி என்று பெயர் உள்ளது. இதனால் சின்னங்களை வைத்து ஓட்டுபோட வேண்டும் என ஆதரவாளர்கள் பிரசாரத்தில் வேண்டுகோள் விடுக்கின்றனர். அதன்படி, சூரியன் தளபதி, மாம்பழ தளபதி என வாக்காளர்களிடம் வித்தியாசமாக கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சிதம்பரம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த ஊராட்சி செயலாளர் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியா தோப்பு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மன் குப்பம் பஸ் நிலையம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் சுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அங்கு இறந்து கிடந்த நபர் புவனகிரி ஒன்றியம் அம்மன்குப்பம் ஊராட்சி செயலாளராக இருந்த சண்முகம் (வயது 54) என்பது தெரிய வந்தது. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.
சம்பவத்தன்று சண்முகம் அம்மன்குப்பம் பஸ்நிலையம் பகுதியில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சண்முகத்தின் வாய் மற்றும் மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதனால் சண்முகம் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
மேற்கண்டவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் போட்டியின்றி புதிய கவுன்சிலர்கள் தேர்வாகினர். இதனால், மீதமுள்ள 437 இடங்களுக்கு 1994 பேர் போட்டியிடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் உள்ள 447 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக மொத்தம் 2,558 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 38 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 516 பேர் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனர். இதில், மாவட்டத்தில் 10 இடங்களில் போட்டியின்றி புதிய கவுன்சிலர்கள் தேர்வாகினர். இதனால், மீதமுள்ள 437 இடங்களுக்கு 1994 பேர் போட்டியிடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளிலும் போட்டி நிலவுகிறது. இங்கு, 286 பேர் போட்டியிடுகின்றனர். வடலூர் நகராட்சியில் 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சித்ராசங்கர், 16-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விஜயராகவன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 15-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தமயந்தி செங்கல்வராயன், மங்கலம்பேட்டையில் பெண்ணாடம் பேரூராட்சி 2-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சண்முகப்பிரியா, காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி 18-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி 14-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர்செல்வி தங்க ஆனந்தன், கிள்ளை பேரூராட்சி 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவழகன், 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மல்லிகா, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தங்க. குலோத்துங்கன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

காட்டுமன்னார்கோவில் அருகே கந்து வட்டியால் சலூன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ரம்ஜான் தைக்கால் பகுதியை சேர்ந் தவர் கவியரசன் (வயது 32). சலூன் கடை நடத்தி வந்தார். அவரது மனைவி ஸ்ரீமதி.
கவியரசன் மோவூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் வட்டிக்கு வாங்கி உள்ளார். பணம் கொடுத்த சசிகுமார் கவியரசனிடம் வட்டியை கட்டுமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.
இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சசிகுமார் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கவியரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கவியரசனை ஆபாசமாக திட்டி தாக்கி தனது பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் கவியரசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். தொடர்ந்து காலை கவியரசன் வழக்கம்போல் சலூன் கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது மனைவியை தொடர்பு கொண்ட கவியரசன் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஸ்ரீமதி பதறியடித்துக் கொண்டு சலூன் கடைக்கு சென்றார். ஆனால் அதற்குள் கவியரசன் கடைக்குள் இருந்த மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே கவியரசனின் உறவினர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். மேலும் இவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்து வட்டி கொடுமையால்தான் கவியரசன் இறந்து உள்ளார். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்தனர்.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக் டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து கல்வி உரிமையைப் பறிப்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இருக்கிறோம். அதை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பட்டியலின பழங்குடி மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு தடை போடக் கூடிய, தடுப்பணையாக இந்த நீட் தேர்வு இருக்கிறது.
நீட் தேர்வு என்ற சதித் தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டால், அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இது மாதிரி தேர்வைக்கொண்டு வருவார்கள். கலைக் கல்லூரிகளுக்கும் கொண்டு வருவார்கள்.
அவர்கள் கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை என்பதே மாணவர்களை வடிகட்டுவதற்காகக் கொண்டு வரும் திட்டம்தான். ஒட்டு மொத்தமாக ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து கல்வி உரிமையைப் பறிப்பதற்காகத்தான் இது போன்ற கல்விக் கொள்கைகளை அமல்படுத்தத் துடிக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்துக்குப் பின்னால் போராடிப் பெற்ற சமூகநீதியை நாம் யாருக்காகவும்,எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம் என்பதன் அடையாளமாகத்தான் இன்றைய தினம் நீட் விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்றி இருக்கிறோம்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கெடிலம் மற்றும் பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்த 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை அரசின் பரிசீலனைக்கு வந்துள்ளது.
இதேபோலத்தான் சென்னைக்கும் வாக்குறுதி தந்தோம். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல கடலூருக்கும் ஆலோசனைக் குழு அமைத்து நிரந்தரத் தீர்வு காண்போம்.
அறிவியல்பூர்வமான ஆய்வை இதற்காக மேற்கொள்வோம். நிரந்தரத் தீர்வை நிச்சயம் காண்போம் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
பாதாளச் சாக்கடை அமைக்கப்படாத கடலூரின் மற்ற வார்டுகளிலும் அதனை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் மேலாண்மைக் கழகத்தின் மூலமாக 180 கோடி ரூபாய் மதிப்பில் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது.

வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக மழைநீர் வடிகால் கட்டும் பணி கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 சிப்பங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.அதிகமாக மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு கெடிலம் நதி மற்றும் தென் பெண்ணையாறு நதிகளுக்கு இடையில் 16 வார்டுகளில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும்.
விடுபட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு மழைநீர் வடிகால்களை 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு 78.85 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க கருத்துரு அரசிடம் பரிசீலனையில் உள்ளது. இது போன்ற பணிகளை ஒருங்கிணைத்து நிரந்தரத் தீர்வைக் காண்போம்.
தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம். அதனை நிச்சயமாகச் செயல்படுத்திக் காட்டுவேன்.
தமிழ்நாட்டு மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளைச் செய்வதற்காக 6500 கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்டோம். இதுவரை கிடைக்கல. மூன்று மாதம் ஆகிவிட்டது. இதுதான் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதான அக்கறை ஆகும்.
தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் வணக்கம் என்றும் நன்றி என்றும் சொன்னால் போதுமா? அதனால்தான் தமிழ்நாட்டு மக்களும் பாஜகவுக்கு நன்றி வணக்கம் என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர வாக்களிப்பது இல்லை.
நீங்கள் எங்களுக்கு வாக்களிக்காமல் போனாலும் பரவாயில்லை, தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்ய மாட்டோம் என்று அடம்பிடிக்கும் அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.
ஆட்சியை இழந்த ஆற்றாமையில் நித்தமும் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி. என்னைச் சர்வாதிகாரி என்கிறார் பழனிசாமி. அடுத்த நிமிடமே என்னை பொம்மை என்றும் சொல்கிறார். அவருக்கு சர்வாதிகாரி என்றால் என்ன என்பதும் தெரியவில்லை.
டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பார்த்து, அவர்கள் விவசாயிகள் அல்ல, தரகர்கள் என்று பழனிசாமி சொன்னதுதான் சர்வாதிகாரத்தனம். ஆம்புலென்ஸ் ஓட்டுநர்கள் சம்பள உயர்வு கேட்டபோது, எல்லாரும் சம்பளம் கூட்டிக் கேட்டால் எப்படித் தரமுடியும்? அவசரக் காலத்தில் வேலை செய்வதுதான் அவர்கள் பணியே என்று பழனிசாமி சொன்னதுதான் சர்வாதிகாரம்.
13 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதை டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று முதலமைச்சராக இருந்துகொண்டு சொன்னதுதான் சர்வாதிகாரத்தின் உச்சம். ஒன்றிய பாஜக அரசு சொன்னதற்கு எல்லாம் தலையாட்டி அவர்களின் பாதம் தாங்கிக் கிடந்த பழனிசாமியை விட தலையாட்டிப் பொம்மைக்கு உதாரணம் வேண்டுமா? பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அடிமைச் சேவகம் செய்வதில் போட்டி போட்டவர்கள்.
இன்று பதவி பறிபோனதும் ஊருக்கு அறிவுரை சொல்லி வருகிறார்கள் இருவரும். அ.தி.மு.க.தான் மக்களாட்சியைக் கொடுத்தது என்கிறார் பழனிசாமி. மக்களாட்சியை அதிமுக கொடுத்தால், அதற்கு மக்கள் ஏன் தோல்வியைக் கொடுத்தார்கள்?
அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். 2011 முதல் 2021 வரை பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது அதிமுக. 2011 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
பழனிசாமி கொடுத்த செல்போன் உங்கள் ஊரில் யாரிடமாவது இருக்கிறதா? பெண்களுக்கு ஸ்கூட்டி கொடுப்பதாகச் சொல்லி 50 பேருக்குக் கொடுத்துவிட்டு கடையை மூடிய கம்பெனிதான் அதிமுக. திடீரென்று சீட்டுப் பிடிக்கும் கம்பெனிகள் உருவாகும். மக்களிடம் பணத்தை வசூல் செய்ததும் ஓடிவிடும். அப்படி ஓடும் கம்பெனிதான் பழனிசாமி - பன்னீர்செல்வம் கம்பெனி.அவர்கள் எங்களைப் பார்த்துக் குறை சொல்வதா?
தேர்தல் வாக்குறுதிகளை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறேன். பெரும்பாலான வாக்குறுதிகளை எட்டே மாதத்தில் நிறைவேற்றி விட்டதாகத் துணிச்சலாக நான் சொல்கிறேன்.அந்தப் புத்தகத்தை வைத்துப் பாருங்கள். அதில் சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
அனைத்தையும் ஒன்று விடாமல் நிறைவேற்றுவோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது ஒன்றுதான் எமது இலக்கு. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கப்பட வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் பணிக்கன் குப்பம் நரிக்குறவர் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் பணிக்கன் குப்பம் ஊராட்சியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்குசுமார் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. இந்த வீடுகள் முற்றிலும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது
இதுகுறித்து சபா. ராஜேந்திரன் எம்எல்ஏ, யூனியன் சேர்மேன் சபா. பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் மீனா பிலோமினா ஆரோக்கியதாஸ் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் பணிக்கன் குப்பம் நரிக்குறவர் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள அனைவருக்கும் மாற்று இடத்தில் வீட்டு மனை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் இன்று ரதசப்தமி முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி தாயாருக்கு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆற்றுத் திருவிழா, ரத சப்தமியன்று தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரியும், தை அமாவாசை மற்றும் மாசி மகத்தன்று கடலில் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
இன்று ரதசப்தமி முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி தாயாருக்கு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து சாமி ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து சாமிக்கு கலச பூஜை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலில் சாமி நிலை அடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ரத சப்தமியை முன்னிட்டு சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலில் தேரோட்டம், சாமி வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவில் உட்புறத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் முகூர்த்த நாட்களில் திருமணத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று ரதசப்தமியை முன்னிட்டு தேவநாத சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பஸ் மீது மினி பஸ் மோதியதில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவரின் உடல் நசுங்கியது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ஆனத்தூர்நத்தம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (வயது16) . புதுப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலை நத்தம் கிராமத்தில் இருந்து புதுப்பேட்டை வழியாக பண்ருட்டிக்கு செல்லும் அரசு பஸ்சில் வந்தார்.
அப்போது பஸ் படிக்கட்டில் லோகாநாதன் பயணித்தார். இந்த பஸ் புதுப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது பண்டரக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் புறப்பட்டது.
அப்போது அந்த வழியாக அம்மாபேட்டையில் இருந்து வந்த தனியார் மினிபஸ் ஒன்று அரசு பஸ் மீதுமோதியது. இதனால் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் லோகநாதன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கினார். இதனால் இவரது உடல் நசுங்கியது. மற்றொரு மாணவர் லேசான காயத்துடன் தப்பினார்.
தகவல் அறிந்ததும் புதுப்பேட்டைபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் உடல் நசுங்கி உயிருக்கு போராடிய மாணவன் லோகநாதனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராம்ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களிலும் படியில் பயணம் செய்யும் பயணிகளை போலீசார் இறக்கி விட்டனர்.