என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அளவுக்கு அதிகமாக மது குடித்த ஊராட்சி செயலாளர் பலி
    X
    அளவுக்கு அதிகமாக மது குடித்த ஊராட்சி செயலாளர் பலி

    சிதம்பரம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த ஊராட்சி செயலாளர் பலி

    சிதம்பரம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த ஊராட்சி செயலாளர் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியா தோப்பு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மன் குப்பம் பஸ் நிலையம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் சுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அங்கு இறந்து கிடந்த நபர் புவனகிரி ஒன்றியம் அம்மன்குப்பம் ஊராட்சி செயலாளராக இருந்த சண்முகம் (வயது 54) என்பது தெரிய வந்தது. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

    சம்பவத்தன்று சண்முகம் அம்மன்குப்பம் பஸ்நிலையம் பகுதியில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சண்முகத்தின் வாய் மற்றும் மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதனால் சண்முகம் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

    மேற்கண்டவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×