என் மலர்
கடலூர்
கடலூர்:
நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வாக்குச்சாவடி பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பாலசுப்ரமணியம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் தலைமையில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குபதிவு எந்திரத்தில் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது.
இதனைத் தொடர்ந்து கடலூர் மாநகராட்சி முழுவதும் உள்ள 152 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் மேற்பார்வையில் 121 பணியாளர்கள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பண்ருட்டி அருகே கீழ்காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது 17 வயது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்தில் தேனீர் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 10-ந் தேதி இரவு வீட்டில் இருந்த போது திடீர் என மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவரது மகள் கிடைக்கவில்லை.
எனவே சிவகுமார் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகளை டீக்கடை நடத்தி வரும் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடத்தி சென்று உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கடலூர்:
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும். மேலும் நாளை (13 -ந்தேதி) முதல் 15- ந்தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. அதன்படி கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புவனகிரி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழையுடன் தொடங்கி மழை தொடர்ந்து பெய்து வந்தது.
கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவு மதியம் சுட்டெரிக்கும் வெயில் மாலை குளிர்ந்த காற்று என்ற சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே பொதுமக்களுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அவதி அடைந்து வருவதை காணமுடிகிறது.
மேலும் சாலை ஓரங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி இருக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலையில் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:-
பரங்கிப்பேட்டை- 92.6, புவனகிரி- 91.0, சிதம்பரம்- 89.8, அண்ணாமலைநகர்- 83.2, காட்டுமன்னார்கோயில்-64.0, கொத்தவாச்சேரி- 54.0, லால்பேட்டை- 50.6, சேத்தியாதோப்பு- 49.2, கடலூர்- 18.8, கலெக்டர் அலுவலகம் - 18.8 ஸ்ரீமுஷ்ணம்- 14.2, குறிஞ்சிப்பாடி- 10.0, பெல்லாந்துறை- 8.6, வானமாதேவி- 7.0, குப்பநத்தம்- 5.2, விருத்தாசலம்- 4.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி- 4.0, பண்ருட்டி- 3.3, வடக்குத்து-3.0, மீமாத்தூர்-2.0, காட்டுமயிலூர்-1.0, வேப்பூர்-1.0, என மொத்தம் 675.30 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
திட்டக்குடியை அடுத்துள்ள போத்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சக்தி முருகன் (வயது 29). இவருக்கும், இவரது உறவினர் சேலம் மாவட்டம் வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் நேற்று போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இது பற்றிய தகவல் மாவட்ட சமூக நலஅலுவலருக்கு கிடைத்தது. இச்சம்பவம் குறித்து அவினங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆவினங்குடி போலீசார் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். தற்போது கொரோனா பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் முன்பு உள்ள மலை மீது வைத்து திருமணம் நடத்த இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும் கோவில் முன்பு உள்ள சாலையில் வைத்து திருமணங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தை மாத கடைசி முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்றது.
அந்த வகையில் நேற்று அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதில் கோவில் அருகே உள்ள சாலையில் அமர்ந்தே, சாமியை தரிசனம் செய்து புதுமண ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இதில் கோவில் சாலையில் வைத்து 80 திருமணங்களும், அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணமண்டபத்தில் 40 திருமணங்கள் என்று நேற்று ஒரே நாளில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே காலையில் பக்தர்கள் யாரும் காலை 8 மணிவரைக்கும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் கடலோர பகுதியில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பகுதியில் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக லால்பேட்டை, குமராட்சி, ஆயங்குடி, முட்டம், தில்லைநாயகபுரம், உடையூர், கருநாகநல்லூர், திட்டமல்லி, திருச்சின்னபுரம், மானியஆடூர், அரசூர், ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இன்று காலையும் பன்னீர் தெளிப்பது போல மழை தூறியது.
இந்த மழை காரணமாக மோகூர், ரெட்டியூர், ஈச்சம்பூண்டி, கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 100 ஏக்கர் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஏரிக்கு மேட்டூர் அணை மற்றும் பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து வீராணம் ஏரி பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.
அதன்படி தற்போது நெல் அறுவடை ஓரளவு முடிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வடவாறு வழியாக வரக்கூடிய நீர்வரத்து வீராணம் ஏரிக்கு நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 44.50 அடியாக உள்ளது. ஏரிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது.
சென்னை மாநகர் குடிநீருக்காக நேற்று 63 கனஅடி நீர் அனுப்பப்பட்டது. அது இன்று 62 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால் சென்னைக்கு அனுப்பக்கூடிய அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி, வாக்குச்சாவடி பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மாவட்ட தேர்தல் அலு வலரும், கலெக்டருமான பாலசுப்ரமணியம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் தலைமையில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குபதிவு எந்திரத்தில் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது வேட்பாளர்கள் தங்கள் பெயர் மற்றும் சின்னம் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதனை பார்வையிட்டனர்.






