என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, மற்றும் பருவ காலங்களில் பெய்யும் மழையால் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை பயன்படுத்தி நெல் சாகுபடி முடிந்துஉள்ளது.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 44.35 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 44.30 அடியாக குறைந்து உள்ளது. ஏரிக்கு 391 கன அடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 64 கன அடிநீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. கடலூர் மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 28 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகில் நடக்கிறது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் காரில் சிதம்பரத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிதம்பரம் போல்நாராயணன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ்நிலையத்தில் சிறிய சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூட்டையைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.
இதை பஸ் நிலையத்தில் வீசிச்சென்றவர்கள் யார்? என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான பஸ்நிலையத்தில் திடீர் என மூட்டை ஒன்றை வீசி சென்றதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
அதன்படி கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள், மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி, வாக்குச்சாவடி பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றது.
கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனைத் தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுப்பு கட்டைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் போலீஸ் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு செய்தார்.
பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு விருத்தாச்சலம் கார்மாங்குடி பகுதிகளில் ரேசன் அரிசி பதுக்கி வைத்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று திடீரென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் மூட்டைகள் அடுக்கி வைத்ததை இருந்ததை பார்த்தனர். அதனை திறந்து பார்த்தபோது ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த நபரை பிடித்து வந்து விசாரணை நடத்தியபோது, விருத்தாசலம் தாலுகா கார்மாங்குடியை சேர்ந்தவர் திருஞானம் (வயது 58) என்றும் மேலும் 21 மூட்டையில் 1 டன் ரேசன் அரிசி இருந்ததும் தெரியவந்தது. மேலும் பதிக்க வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி கோழி மற்றும் மாடுகளுக்கு தீவனமாக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் திருஞானத்தை கைது செய்தனர்.
கடலூர்:
மாலத்தீவு பகுதியிலிருந்து வடகர்நாடகா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல் மாலத்தீவு ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், பாதிரிகுப்பம், செம்மண்டலம்,, சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழையாக மாறியது. இம்மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்தது. இதன் காரணமாக சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் பலர் குடை பிடித்தபடியும், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பூ.மங்கலத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 44). இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மதுரையில் தங்கி கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இதில் அவருக்கு சில லட்சங்கள் கடன் ஏற்பட்டது.
இதனால் தனது சொந்த ஊருக்கு வந்த மதியழகன் கடனை அடைப்பதற்காக தனது நிலம் ஒன்றை ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்தார். முன்பணம் மட்டும் வாங்கி இருந்தார். மீதமுள்ள பணத்தை பண்ருட்டிக்கு வந்து வாங்கி செல்லுமாறு நிலத்தை வாங்கியவர் கூறினார்.
சம்பவத்தன்று மதியழகன் பண்ருட்டிக்கு வந்தார். அப்போது மதியழகனை 4 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடத்தியது. செம்மேடு ஏரிபாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் மதியழகனை அடைத்து வைத்தனர்.
பின்னர் 2 நாட்கள் அடைத்து வைத்திருந்த அவர்கள் நிலத்தை விற்றதில் கிடைத்த பணத்தை தங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்று மதியழகனை மிரட்டி உள்ளனர். அவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் கடத்தல்காரர்கள் ஒருவரின் தந்தை கார் புரோக்கர் மதியழகன் மீது பரிதாபப்பட்டு அவரை மீட்டு பஸ் ஏற்றி அனுப்பிவைத்தார்.
கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் மன உளைச்சலில் இருந்த மதியழகன் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் கடலூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த கடத்தல் கும்பல் ஏற்கனவே காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை கடத்திய வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
பண்ருட்டி:
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட்டு உள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தொரப்பாடி பேரூராட்சியில்பறக்கும் படை துணை தாசில்தார் ராஜீ,சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானப்பிரகாசம், முதல்நிலை காவலர்கள் சந்திரசேகரன், கோவிந்தசாமி ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த பணம் ரூ. 81, 450 பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நல்லூர் மேலமாத்தூர் ரெயில்வே காலனி அருகில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் விருத்தாசலம் அருகே எடசித்தூர் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் (வயது 37) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மணல் கடத்தி வந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.






