என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடத்தல்
பண்ருட்டியில் ரூ.60 லட்சத்துக்காக கார் புரோக்கர் கடத்தல்- 4 பேர் மீது புகார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ரூ.60 லட்சத்துக்காக கார் புரோக்கர் கடத்தப்பட்டது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பூ.மங்கலத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 44). இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மதுரையில் தங்கி கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இதில் அவருக்கு சில லட்சங்கள் கடன் ஏற்பட்டது.
இதனால் தனது சொந்த ஊருக்கு வந்த மதியழகன் கடனை அடைப்பதற்காக தனது நிலம் ஒன்றை ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்தார். முன்பணம் மட்டும் வாங்கி இருந்தார். மீதமுள்ள பணத்தை பண்ருட்டிக்கு வந்து வாங்கி செல்லுமாறு நிலத்தை வாங்கியவர் கூறினார்.
சம்பவத்தன்று மதியழகன் பண்ருட்டிக்கு வந்தார். அப்போது மதியழகனை 4 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடத்தியது. செம்மேடு ஏரிபாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் மதியழகனை அடைத்து வைத்தனர்.
பின்னர் 2 நாட்கள் அடைத்து வைத்திருந்த அவர்கள் நிலத்தை விற்றதில் கிடைத்த பணத்தை தங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்று மதியழகனை மிரட்டி உள்ளனர். அவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் கடத்தல்காரர்கள் ஒருவரின் தந்தை கார் புரோக்கர் மதியழகன் மீது பரிதாபப்பட்டு அவரை மீட்டு பஸ் ஏற்றி அனுப்பிவைத்தார்.
கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் மன உளைச்சலில் இருந்த மதியழகன் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் கடலூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த கடத்தல் கும்பல் ஏற்கனவே காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை கடத்திய வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

Next Story