என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    வடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

    வடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 58 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் சம்பளம் காலதாமதமாக வழங்கப்படுவதாகவும், மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என சம்பள பிடித்தம் செய்யப்படுவதாகவும், தினம் இரவு கால தாமதமாக வீட்டிற்கு அனுப்புவதாக புகார் எழுந்தது.

    எனவே தூய்மை பணியாளர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள் அங்கு விரைந்தனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இது போன்று நடக்காது. ஞாயிற்றுக்கிழமைகளில் பாதி சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×