என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு இயந்திரம்
    X
    வாக்குப்பதிவு இயந்திரம்

    கடலூர் மாநகராட்சியில் 35 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

    கடலூர் மாநகராட்சியில் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக வார்டு எண்கள் 15, 16, 34, 45 ஆகியவற்றில் தலா 2 வாக்குச்சாவடிகளும், வார்டு எண்கள் 25, 28-ல் தலா ஒரு வாக்குச்சாவடியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடலூர் மாநகராட்சியில் 352 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 350 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுவை திரும்பப்பெற இன்று கடைசி நாளாகும்.

    கடலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 வார்டுகளுக்கு 152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 68,873 ஆண் வாக்காளர்களும், 74972 பெண் வாக்காளர்களும், இதரர் 50 பேரும் வாக்களிக்கின்றனர். மொத்தம் 1,43895 வாக்காளர்கள் உள்ளனர்.

    கடந்த தேர்தல் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கொண்டு பதட்டமான, மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டன.

    அதன்படி, கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 35 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

    இதன்படி, வார்டு எண்கள் 4, 7, 16, 28, 38 ஆகியவற்றில் தலா 4 வாக்குச்சாவடிகளும், வார்டு எண் 34-ல்2 வாக்குச்சாவடிகளும், வார்டு எண் 35-ல் 3 வாக்குச் சாவடிகளும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக வார்டு எண்கள் 15, 16, 34, 45 ஆகியவற்றில் தலா 2 வாக்குச்சாவடிகளும், வார்டு எண்கள் 25, 28-ல் தலா ஒரு வாக்குச்சாவடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×