என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்து வருவதை படத்தில் காணலாம்.
வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர் மட்டம்
கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மாநகர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் நெல்சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வறண்டு காணப்படுகிறது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 45 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.90 அடியாக குறைந்தது.
நேற்று வீராணம் ஏரிக்கு 382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது இன்று 333 கனஅடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது அறுவடை நடந்து வருவதால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Next Story