என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    அரசு டவுன் பஸ் லாரி நேருக்கு நேர் மோதல் - பஸ் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அலறல்

    கடலூர் அருகே அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் இருந்து கடலூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு இன்று காலை வந்து கொண்டிருந்தது.

    அப்போது கடலூர் அருகே உள்ள செல்லாங்குப்பம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் அரசு பஸ்சும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    அப்போது அரசு பஸ் முன்பக்க கண்ணாடி மற்றும் டிரைவர் அருகாமையிலிருந்த இரும்புக் கம்பி பலத்த சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். மேலும் அரசு பஸ் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.

    ஆனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து காயமடைந்த அரசு பஸ் டிரைவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலை கடலூர் சிதம்பரம் சாலையில் விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×