என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் அருகே சான்றோர் பாளையம் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் சான்றோர் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது ஆடையில் வைத்திருந்த மது பாட்டில் உடைந்து தொடைப் பகுதியில் குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்றவர்கள் வெங்கடேசனை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள பாணாசந்து பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகள் பாரதி (வயது 20). கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற பாரதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் பாரதி பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் அருள்ராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பாரதியை தேடி வருகின்றனர்.
இதேபோல சிதம்பரம் அருகே தா.கா.பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா (23). இவர் கடந்த 9-ந்தேதி கடை வீதிக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்ட சூர்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சூர்யாவின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அண்ணா மலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. காவிரியின் குறுக்கே 1000 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக மேகதாது அணை ஒன்றைக் கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசு, அத்திட்டத்திற்கான செயல்பாடுகளை இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பாலைவனமாகும்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசு இப்போது வந்துகொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசின் மறைமுகத் துணையோடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவிரி நதி மீதான எந்தவிதமானக் கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும். ஆனால், தற்போது ஒன்றிய அரசு கொடுத்துள்ளதாகக் கூறப்படும் ஒப்புதல் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.
எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ் நாட்டு மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக வருகிற 15 -ந் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழர்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்படும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், விவசாய அமைப்புகளும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே கண்டரக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரவதனம். இவரது மகன் பாக்கியராஜ் (வயது 20). கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் ரெயில் மூலம் கல்லூரிக்கு சென்று வரும் பாக்கியராஜ் நேற்று மாலை பரங்கிபேட்டை ரெயில் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் ராகுல் (வயது 24) என்பவர் அரசு பஸ் மோதி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டியன் சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் மற்றும் போலீசார் சென்னை கும்பகோணம் சாலைபூ தங்குடி பகுதியில்வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தண்டகாரன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 19)என தெரியவந்தது. இவரிடம் கடந்த செப்டம்பர் மாதம் சிதம்பரம் அருகே உள்ள விளாகம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள ஒரு ஏ.டி. எம். மில் பணம் எடுக்க கூறி உள்ளார்.
அப்போது விக்னேஷ் அவரிடம் அதில் பணம் வரவில்லை என்று கூறி போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து சென்றார். அதன்பின்னர் ராஜேந்திரன் கொடுத்த ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.34 ஆயிரத்து 850 பணம் திருடி இருப்பதை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் விக்னேசை கைது செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு வடக்கு புறம் பிடாரி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பந்தல் தொழிலாளர்கள், நகரவாசிகள் இணைந்து 108 திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டிற்கான 108 திருக்குட நன்னீராட்டு விழா இன்று காலை நடந்தது.
விழாவையொட்டி காலை மூலவர் சக்தி பீடங்களுக்கு 108 குட நன்னீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சந்தன காப்பு அலங்காரத்துடன், உற்சவர் வீதி உலா நடந்தது. இதில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி வேல். இவரது மகன் அபிசுந்தர் (வயது 17).
சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த அபிசுந்தர் கடந்த வாரம் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அபிசுந்தர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டு பேசியபோது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மறுமுனையில் பேசினார். அபிசுந்தரின் செல்போன் அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் அருகே கிடந்தது என்று கூறினார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அபிசுந்தரின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அபிசுந்தர் அந்த கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி அபிசுந்தரின் உடலை மீட்டனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அபிசுந்தரின் உடலில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாரோ கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர் என்று அவரது உறவினர்கள் கூறினர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை அபிசுந்தரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாலிபர் அபிசுந்தரின் மரணம் தொடர்பாக திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 33), மணிமேகலை (31), ராமர் (18), பூலாம்பாடியை சேர்ந்த ஸ்ரீரங்கன் (70), தினகரன் (27) ஆகிய 5 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 19). இவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் நிவேதா கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நிவேதாவை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நிவேதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாலகரம் டோல்கேட் அருகே உள்ள ஓடையில் இருந்து அரசகுழி தெற்கு தெருவைச் சேர்ந்த வின்சென்ட் பவுல் (வயது 39) என்பவர் மாட்டு வண்டியில் மண் கடத்தி வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.






