என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் டி.எஸ்.பி
    X
    போலீஸ் டி.எஸ்.பி

    ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே மாணவர்களுக்கு உயர்வை தரும்- போலீஸ் டி.எஸ்.பி பேச்சு

    ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே மாணவர்களுக்கு உயர்வை தரும். ஒழுக்கத்தை பள்ளியில் மட்டும்தான் கற்க முடியும் என போலீஸ் டிஎஸ்பி கூறியுள்ளார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தாளாளர் வீரதாஸ் தலைமை வகித்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், நெல்லிக்குப்பம் அசோகன், பள்ளி முதல்வர் வாலண்டீனாலெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார்.

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே மாணவர்களுக்கு உயர்வை தரும். ஒழுக்கத்தை பள்ளியில் மட்டும்தான் கற்க முடியும். மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை படிப்பது மட்டும்தான். கல்வி மூலம்தான் எல்லா தகவல்களும் பெற முடியும்.

    படிக்கும் காலத்தில் நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். எதையும் சரியா செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சரியாக பகுத்து பார்க்க வேண்டும். மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும்.

    பெற்றோரையும், ஆசிரியரையும் மதிக்காதவரை சமூகம் மதிக்காது. பெற்றோரையும், ஆசிரியரையும் நேசிக்கிறவர்கள் ஜெயிக்கலாம். அந்தந்த வயதில் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். ஏழ்மை காரணமாக அரசு பள்ளியில் படித்தேன் . வறுமையை உணர்ந்ததால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஏற்காடு,ஊட்டி, டான்பாஸ் கோ பள்ளியில் படித்தால் மட்டும்போதாது. சரியான புரிதல், ஆர்வம் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×