என் மலர்
கடலூர்
- ஏ.குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
- அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர்.
கடலூர்:
கடலூர்அருகே ஏ. குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர். அ.தி.மு.க. சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த கடலூர் மாவட்டத்துக்கு வந்தார்.முதல் கட்டமாக அயன் குறிஞ்சிப்பாடிக்கு சென்று அவர் ஆறுதல் கூறினார். அதன்பினனர் ஏ.குச்சிபாளையத்துக்கு வந்தார். அங்கு ஆற்றில் மூழ்கி பலியானவர்களுக்கு குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்கள்பிரேமலதா கண்ணீருடன் தங்களது குடும்ப நிலவரங்களை தெரிவித்தனர். பின்னர் பிரேமலதா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கினார்.
அவருடன் மாவட்ட செயலாளர் சிவகொழுந்து, அவைதலைவர் ராஜாராம், ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், நகர செயலாளர்கள் சரவணன், கஜேந்திரன் மற்றும் பலர் சென்றனர்.
- அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.
- கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டத்தில் நாளை மறுதினம் (11- ந்தேதி) கீழ்கண்ட வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் கடலூர் தோட்டப்பட்டு, பண்ருட்டி சிறுகிராமம், குறிஞ்சிப்பாடி ஆதிநாராய–ணபுரம் (கிழக்கு), சிதம்பரம் கிள்ளை (தெற்கு), காட்டுமன்னார்கோயில் குமாரகுடி, புவனகிரி சி. புதுப்பேட்டை, விருத்தாசலம் மாத்தூர், திட்டக்குடி எறையூர், வேப்பூர் மண்ணம்பாடி, திருமுட்டம் சோழதரம் கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.
மேற்குறிப்பிட்ட கிராமங்களில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுப்பட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்க–லாம்.
தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை–களான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடை பிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- பல்வேறு கடைகளில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்
- 30 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், பொது விநியோகத்திற்கான தனித் துறை அமைக்க வேண்டும் என கோரிக்கை
கடலூர்:
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு 30 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். பொது விநியோகத்திற்கான தனித் துறை அமைக்க வேண்டும். தரமற்ற பொருட்களுக்காக நியாய விலை கடை பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் அதிகமாக இருந்தால் பல மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3நாள் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டன.
அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கியதையொட்டி இன்று 3-வது நாளாக 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணி புரிந்து வந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கடலூர் பழைய கலெக்டர் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட துணைத் தலைவர் முத்து பாபு தலைமை தாங்கினார் நிர்வாகிகள் கந்தன் தேவராஜ் ராமானுஜம் குமரன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி கண்டன உரையாற்றினார் இதில் நிர்வாகிகள் ஸ்ரீதர் ராமதாஸ் கணேசன் குமரன் செல்வம் மனோகர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைகள் மூடப்பட்டு இருந்தது காணமுடிந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் அருள் நன்றி கூறினார்.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அஷ்டமி தோறும் சிறப்புவழிபாடுநடைபெறுவது வழக்கம்.
- அதேபோல வளர்பிறை அஷ்டமி தினமான இன்று சிறப்புவழிபாடு நடைபெற்றது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அஷ்டமி தோறும் சிறப்புவழிபாடுநடைபெறுவது வழக்கம். அதேபோல வளர்பிறை அஷ்டமி தினமான இன்று சிறப்புவழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மூலவர் சாமி, அம்பாள் மற்றும் கால பைரவருக்கு மஞ்சள்பொடி, திரவியபொடி, வில்வப் பொடி, அருகம்புல்பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்நடைபெற்றது.
பின்னர் வடைமாலை மற்றும் செவ்வரளி மலர்அலங்காரத்தில் பைரவாஸ்டகம் முழங்க மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக் கடனுக்காகவும் விளக்கேற்றி சாமிதரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கு அஷ்டமி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடுசெய்திருந்தனர். முன்னதாகவராகி அம்மன்சன்னதியில் சிறப்புவழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர்சிறப்புஅலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது.
- திட்டமிட்டப்படி இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவினர் வந்தனர்.
- அவர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் பகுதியில் ஆய்வு செய்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் நிலங்கள், நகைகள், வரவு-செலவு விபரங்களை நேற்றும், இன்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆய்வுக்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. ஆகமவிதிப்படி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் தலையிடக்கூடாது என நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டினர்.
என்றாலும் திட்டமிட்டப்படி அறநிலையத்துறை வேலூர் இணை ஆனையர் சுகுமார் தலைமையில், பழனிகோவில் இணை ஆனையர் நடராஜன், கடலூர் துணை ஆனையர்கள் ஜோதி, அசோக்குமார், உதவி ஆணையர் சந்திரன் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அய்வுக்கு வந்தனர்.
அப்போது பொது தீட்சிதர்கள் அவர்களை வரவேற்றனர். அப்போது அதிகாரிகள் தீட்சிதர்களிடம் கோவில் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் பொது தீட்சிதர்கள் ஆய்வுக்குறிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் நடக்கிறது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே அதிகாரிகள் கோவிலில் உள் பிரகாரம், வெளி பிரகாரத்தில் தற்போதைய மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபம் முகப்பில் தரையில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் கோவில் தீட்சிதர்கள் அதிகாரிகளிடம் கோவில் நடை சாத்தும் நேரம் ஆகிவிட்டது என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் 4 மணிக்கு கோவிலுக்கு வருவதாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அதிகாரிகள் மீண்டும் 5 மணி அளவில் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் சார்பில் வக்கீல் சந்திரசேகர் பேசினார். சட்டரீதியாக வந்தால் மட்டுமே ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திட்டமிட்டப்படி இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் பகுதியில் ஆய்வு செய்தனர்.
- திட்டமிட்டப்படி இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்துறை அலுவலர் சுகுமார் தலைமையில் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர்.
- கோவில் ஆவணங்களை பொது தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்தனர்.
சிதம்பரம்:
உலக பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்தனர். பின்னர் அரசு உத்தரவின் பேரில் அந்த தடை நீக்கப்பட்டு பக்தர்கள் தற்போது கனகசபை மீது ஏறி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த கோவிலை சட்ட விதிகளின்படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதி என்பவரை நியமித்தது. இவரது தலைமையிலான குழு நடராஜர் கோவிலில் இன்று (7-ந் தேதி), நாளை (8-ந் தேதி) 2 நாட்கள் நேரடியாக ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆய்வுக்கு பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர் பாபு கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என்று அறிவித்திருந்தார்.
என்றாலும் திட்டமிட்டப்படி இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்துறை அலுவலர் சுகுமார் தலைமையில் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர்.
அதாவது 2014-ம் ஆண்டு முதல் வரவு- செலவு கணக்குகள், திருப்பணி குறித்த விபரங்கள், அவற்றுக்கான தொல்லியல் கருத்துறு, இந்து சமய அறநிலைத்துறை அனுமதி விபரம், மதிப்பீடு விபரங்கள், கோவிலுக்கு சொந்தமான கட்டளைகள், அவற்றுக்கு சொந்தமான சொத்து, அவற்றில் இருந்து பெறப்படும் வருவாய் இனங்கள், சொத்துக்களின் தற்போதைய நிலை, இந்துசமய அறநிலையத்துறை சட்டவிதிகளின் படி அங்கீகரிக்கப்பட்ட சொத்து பதிவேடு உள்ளிட்டவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்களிடம் கேட்டனர். இதற்கு பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் ஆவணங்களை பொது தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்தனர்.
இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் எங்களுக்கு ஆய்வு தொடர்பாக முறையான நோட்டீஸ் எதுவும் வரவில்லை. எனவே ஆய்வு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு
- பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
சிதம்பரம்:
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் (புதன்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் பொது தீட்சிதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீட்சிதர்களின் கோரிக்கைகளின் நிலைப்பாடுகளையும், அரசின் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொண்டோம் என்றார்.
அனைவருக்கும் சமமான நீதி வழங்க வேண்டும், அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது, யாருக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படாமல் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- ஒரு பெண் உள்பட 7 மாணவிகள் கெடிலம் ஆற்றில் தடுப்பணையில் மூழ்கி பலியானார்கள்.
- 7 பேர் இறந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் உடனடியாக தன்னை சம்பவ இடத்திற்கு அனுப்பியதை யொட்டி தான் நேரில் வந்து பார்த்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தேன்.
கடலூர்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் அருங்குணம் ஊராட்சி குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 7 மாணவிகள் கெடிலம் ஆற்றில் தடுப்பணையில் மூழ்கி பலியானார்கள். இத்தகவலினை அறிந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவருடைய சொந்த நிதி ஆதாரத்திலிருந்து தலா ரூ.25,000 - வீதம் 7 பேர் குடும்பதாரர்களிடம் ரூ.1,75,000- வழங்கினார்.
அதன்பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
7 பேர் இறந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் உடனடியாக தன்னை சம்பவ இடத்திற்கு அனுப்பியதை யொட்டி தான் நேரில் வந்து பார்த்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தேன். மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இந்த விசாரணையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் பள்ளம் எப்படி ஏற்பட்டது மேலும் அங்குள்ள மண்ணின் தன்மை என்ன என்பதெல்லாம் குறித்து ஆய்வின் முடிவில் தெரியவரும்.
இவ்வாறு கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.
- ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
- கூடுதல் ஆட்சியர் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மனுக்கள் பெற்றுவந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அலுவலக வளாகத்தில் இருந்து அழைத்து வெளியில் வரப்பட்டு, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்த சத்தியவேணி. நான் வசிக்கக்கூடிய பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வீடு கட்டி இருந்து வருகின்றேன்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் திடீரென்று என் வீட்டை இடித்து விட்டனர். மேலும் எனது மகன் மற்றும் மகளை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது மட்டுமன்றி வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரம் பணத்தையும் திருடி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது போலீசார் கூறுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பார்கள் ஆகையால் இது போன்ற நடவடிக்கையில் இனி வருங்காலங்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் ஆட்சியர் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கிராம மக்கள் உதவியுடன் 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேரும் இறந்தனர்.
- இந்த சம்பவத்தை கேள்விபட்டு ஏராளமானோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் மகள் சங்கவி (வயது 18), குணாலன் மனைவி பிரியா (19), அமர்நாத் மகள் மோனிசா (17), மோகன் மகள் நவநீதா (20), முத்துராமன் மகள் சுமிதா (15), அயன்குறிஞ்சிப்பாடி ராஜகுரு மகள்கள் பிரிய தர்ஷினி (15), காவியா (10).
இவர்கள் 7 பேரும் நேற்று மதியம் கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்கள் குளிக்க சென்ற பகுதி ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை. ஆற்றில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதியில் இறங்கினர். அப்போது ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்கள்.
இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கம் ஆடு, மாடு மேய்த்தவர்கள் ஓடிவந்தனர். இவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடிய வில்லை. உனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
கிராம மக்கள் உதவியுடன் 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேரும் இறந்தனர். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விபட்டு ஏராளமானோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர்களது உடல் நேற்று பிரேத பரிசோதனை முடிந்தது. பின்னர் அயன்குறிஞ்சிப்பாடி ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி, காவியா ஆகியோரது உடல்கள் அயன்குறிஞ்சிப்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேபோல மற்ற 5 பேரின் உடலும் ஏ.குச்சிபாளையம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரவர் வீட்டில் உடல்களை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் 5 பேரின் உடலும் அங்குள்ள மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஊர்மக்கள் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.
- விருத்தாசலம் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானது.
- தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், பாஸ்கர், ரமேஷ் ஆகியோரது வீட்டில் திடீர் என தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் 3 வீடுகளும் எரிந்து நாசமானது.
இதனால் 3 குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
- கடலூரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு புதிய கலெக்டர் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது.
- அவ்விடம் பொதுமக்கள் அனைவருக்கும் உகந்த இடமாகவும், போக்குவரத்திற்கு ஏற்ற இடமாகவும் கருதப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்புராயன், குரு ராமலிங்கம், சிவாஜிகணேசன், மன்சூர், சட்ட ஆலோசகர் திருமார்பன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
கடலூரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு புதிய கலெக்டர் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது. அவ்விடம் பொதுமக்கள் அனைவருக்கும் உகந்த இடமாகவும், போக்குவரத்திற்கு ஏற்ற இடமாகவும் கருதப்பட்டது. இந்த இடம் புதுச்சேரி, சென்னை, பண்ருட்டி விழுப்புரம், திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லும் பிரதான சாலைக்கும் கஸ்டம்ஸ் சாலைக்கும் விழுப்புரம் - நாகை விரைவு சாலைக்கும் இணைப்பு பாலமாக அமைந்து இருந்தது.
ஆனால் எம்.புதூர் பகுதியில் பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிய வருகிறது. இந்த இடம் 10 கீ மீ . தூரம் உள்ளதால் பொருத்தமற்ற இடமாக உள்ளது. எனவே புதிய பஸ் நிலையத்தை முன்பு திட்டமிட்ட படி கலெக்டர் அலுவலகம் அருகே கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகையால் தனிக்கவனம் செலுத்தி, கடலூர் பொதுமக்களுக்காக உரிய ஆய்வு செய்து, புதிய பேருந்து நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.






