search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்
    X

    கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்

    • கிராம மக்கள் உதவியுடன் 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேரும் இறந்தனர்.
    • இந்த சம்பவத்தை கேள்விபட்டு ஏராளமானோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் மகள் சங்கவி (வயது 18), குணாலன் மனைவி பிரியா (19), அமர்நாத் மகள் மோனிசா (17), மோகன் மகள் நவநீதா (20), முத்துராமன் மகள் சுமிதா (15), அயன்குறிஞ்சிப்பாடி ராஜகுரு மகள்கள் பிரிய தர்ஷினி (15), காவியா (10).

    இவர்கள் 7 பேரும் நேற்று மதியம் கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்கள் குளிக்க சென்ற பகுதி ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை. ஆற்றில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதியில் இறங்கினர். அப்போது ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்கள்.

    இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கம் ஆடு, மாடு மேய்த்தவர்கள் ஓடிவந்தனர். இவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடிய வில்லை. உனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

    கிராம மக்கள் உதவியுடன் 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேரும் இறந்தனர். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த சம்பவத்தை கேள்விபட்டு ஏராளமானோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர்களது உடல் நேற்று பிரேத பரிசோதனை முடிந்தது. பின்னர் அயன்குறிஞ்சிப்பாடி ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி, காவியா ஆகியோரது உடல்கள் அயன்குறிஞ்சிப்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதேபோல மற்ற 5 பேரின் உடலும் ஏ.குச்சிபாளையம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரவர் வீட்டில் உடல்களை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் 5 பேரின் உடலும் அங்குள்ள மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஊர்மக்கள் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

    Next Story
    ×