என் மலர்tooltip icon

    கடலூர்

    • வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
    • போலீசாரின் விசாரணையில் ஆட்டுப்பட்டி ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பனை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம்வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் ஈரோட்டில் தங்கி கூலிவேலை செய்துவருகின்றனர்.

    நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட அதேபகுதியில் உள்ள ஆட்டுபண்ணையில் கூலி வேலை செய்துவரும் நாகப்பன்(வயது55) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. உடனடியாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், மகளிர் இன்ஸ்பெக்டர் வள்ளி, காடாம்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் பூவராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர விசாரணை தீவிர நடத்தினர்.

    விசாரணையில் அதே பகுதியில்ஆட்டுப்பட்டி ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பனை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டி போலீஸ் நிலையங்களில் விழாகுழுவினர் மனு அளித்தனர்.
    • விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    தமிழக முழுவதும் நாளை மறுதினம் (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக அரசு சட்ட திட்டத்திற்கு உட்பட்டு விநாயகர் சிலை செய்யும் பணிகளில் தொழிலா ளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை வைத்து விமர்சையாக கொண்டாட வேண்டி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்ட க்குடி, விருத்தாச்சலம் ஆகிய 7 உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வரை 630 மனுக்கள் போலீஸ் நிலையத்தில் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் வழங்கி உள்ளனர்.

    இது மட்டும் இன்றி இன்னும் 2 தினங்களில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைப்பதற்கு மனுக்கள் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மனுக்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்காமல் இருந்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வைக்கப்பட்ட இடத்தில் விநாயகர் சிலை வைக்கப்படுகிறதா? பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிலை வைத்து கொண்டாடுவதற்கு அந்த பகுதி எந்தவித பாதிப்பும் ஏற்பாடாத பகுதிகளா? உள்ளிட்டவைகளை போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அனுமதி அளித்தால் எந்த தினம் விநாயகர் சிலை கரைக்க வேண்டும். விநாயகர் சிலை கரைக்க செல்லும் போது ஊர்வலமாக செல்ல க்கூடாது. பாதுகாப்பாகவும் எந்தவித பிரச்சனைகள் இல்லாமலும் விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் சம்பந்தப்பட்டவரிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மற்றும் நாளை மாவட்டம் முழுவதும் பெறப்படும் மனுக்கள் குறித்து முழு ஆய்வு செய்து போலீசார் எந்தெந்த பகுதியில் சிலை வைத்து வழிபட வேண்டும் என அறிவுறுத்த உள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    • சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.
    • 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக மத்திய சிறைச்சாலை தீவிர சோதனையில் செல்போன், சார்ஜர் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்தார். மேலும் கைதிகளை கடும் எச்சரிக்கை செய்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை மணிகண்டன் வீட்டில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், டெல்டா பிரிவு உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் யாரேனும் கூலிப்படை ஏவி இந்த சம்பவத்தில் ஈடுபட வைத்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து விசாரணை செய்ய விரைந்துள்ளனர்.

    • பண்ருட்டியில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • திடீர் மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது திடீரென இடி, மின்னல், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில்மழைநீர் வெள்ளநீராக பெருக் கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய தெருக்கள், எல்.என்.புரம் உள்ளிட்டபகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.பலகிரா மங்கள் இருளில்மூழ்கியது. திடீர் மழையால் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு ள்ளா கினர்.வாகனங்க ளில்முகப்பு விளக்கை எரியவி ட்டபடி ஊர்ந்து சென்றனர். தெருக்கள் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி கும்பகோ ணம் சாலை குளம் போல காட்சியளித்தது. சாலை களில் குண்டும் குழியுமான பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக இருந்தது.

    • மனோஜ்குமார் பி.எஸ்.சி.,பட்டதாரியான இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது.
    • சம்பவத்தன்று மனோஜ்குமாருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தாங்கமுடியாத அவர், மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி, அருகே ராமநத்தம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல்மகன் மனோஜ்குமார்(வயது 26) பி.எஸ்.சி.,பட்டதாரி. இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று மனோஜ்குமாருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தாங்கமுடியாத அவர், மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்தார். உறவினர்கள்அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மனோஜ்குமார், சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர்.
    • முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தபள்ளி மாணவர்கள் அக்கட வல்லி பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர். அப்போது இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

    இந்த மோதலில் ஒரு பிரிவை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடை ந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை க்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டனர். தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான பல்வேறு குற்றத்தில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • சமையலறையில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் யாரோ தீ வைத்த காரணமாக சமையலறை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான பல்வேறு குற்றத்தில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு உதவி ஜெயிலராக மணிகண்டன் (வயது 35) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்றார். இவரது மனைவி பவ்யா, இரண்டு மகன்கள் மற்றும் தாய் தந்தை என 5 பேர் வீட்டில் இருந்து வந்தனர்.

    இன்று அதிகாலை திடீரென்று மற்றொரு அறையில் இருந்து எரிந்த வாடை வீசியதால் பவ்யா சந்தேகம் அடைந்து அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தார். அப்போது சமையலறையில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் யாரோ தீ வைத்த காரணமாக சமையலறை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த பவ்யா அலறடித்து கட்டிக் கொண்டு தனது குடும்பத்தை சேர்ந்த நபர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்.அந்த அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர்களையும் அப்புறப்படுத்தினர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தகவல் அறிந்த சிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் சிறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து வீட்டினை சுற்றி பார்த்த போது 2 பாட்டிலில் சிறிது அளவு பெட்ரோல் இருந்தது தெரியவந்தது. மேலும் யாரோ மர்ம நபர்கள் சமையல் அறையில் பெட்ரோல் ஊற்றி உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினரை தீ வைத்து எரித்து கொல்வதற்கு முயற்சி செய்த சம்பவம் தெரிய வந்தது‌.

    கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி ஜெயிலர் மணிகண்டன் தலைமையில் சிறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில முக்கிய குற்றவாளிகளிடமிருந்து செல்போன், சார்ஜர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது மணிகண்டன் சிறை கைதிகளை கடுமையாக எச்சரிக்கை செய்தார். இந்த முன்விரோதத்தில் சிறை கைதிகள் ஏதேனும் தங்களது ஆட்களை ஏவி உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சினிமா பாணியில் எந்தவித தடயமும் இல்லாமல் சமையலறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தால் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமாகி கொலை செய்து விடலாம் என்ற நோக்கத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் உதவி ஜெயிலர் மணிகண்டனுக்கும், கைதிகளுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததா? என்பதனை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் இது மட்டும் இன்றி இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? யார் இவர்களை ஏவி விட்டனர்? என்பதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
    • நாளை மறுநாள் (30- ந்தேதி) முதல் நேரடி சேர்க்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும்; நெய்வேலி தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022 -ம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்ய முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டுநாளை மறுநாள் (30- ந்தேதி) முதல் நேரடி சேர்க்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதற் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பித்து தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்கள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்ககையை உறுதி செய்யாதவர்கள் ஆகியோர் நேரடி சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய இணையதளத்தினை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த இணையதள வழியிலான 2-ம் கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

    • லாரி டிரைவர் கட்டுப்பட்டைஇழந்து தாறுமாறாக ஓடினார்.
    • போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் விரைந்து சென்று போக்கு வரத்தை சரி செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இருந்து 12 டன்அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்றுபெங்களூர்சென்றது.பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரியின் முன்பக்க டயர் திடீர்என வெடித்து. இதனால் லாரி டிரைவர் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. லாரியைஓட்டி வந்தடி ரை வர் பரசுராமன் சாதுர்ய மாக பாலத்தின் கட்டையில் மோதி லாரி நின்றது இதனால் லாரியில் வந்த டிரைவர் உட்பட அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தபினார்.இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் திடீர் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் என்பதும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் போக்குவரத்து போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    • திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழக்கல்பூண்டி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் நேற்று இரவு அனுமதி இன்றி மணல் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (28), புலிக்கரைம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (29), கீழக்கல் பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிரத்தினம் (32), கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (43) மற்றும் இவர்களுடன்2 சிறுவர்கள் இணைந்து மினி லாரியில் ஜேசிபி உதவியுடன் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது போலீசார் கையும் களவுவமாக பிடித்தனர். தகவலின் பேரில் இரவு சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி காவியா மற்றும் ராமநத்தம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மற்றும் போலீசார் ராமநத்தம் காவல் நிலையம் அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.

    • தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக 1 மாதமாக முழு கொள்ளளவில் வீராணம் ஏரி நீடிக்கிறது.
    • கடந்த மாதம் கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர்அனுப்பி வைக்கப்பட்டது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இதன் முழுகொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி 15 கி.மீ நீளமும், 5 கி.மீஅகலமும் கொண்டதாகும். ஏரிமூலம் 44 ஆயிரத்து 850 ஏக்கர்பாசனம் பெறுகிறது. சென்னைகுடிநீருக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வருகிறது. மழைக் காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில்பெய்யும் மழை தண்ணீர் செங்கால்ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம்ஏரிக்கு தண்ணீர் வரும். கடந்த மாதம் கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர்அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் கடந்தமாதம் 27-ந் தேதி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டது.

    நீர்வளத்துறை அதிகாரிக ள்பூதங்குடி பகுதியில் உள்ள ஏரியின்வடிகால் மதகான விஎன்எஸ்எஸ்வழியாக வெள்ளா ற்றில் உபரி தண்ணீரை வெளியேற்றினர். தொடர்ந்து ஏரியின் மட்டத்தைஅதன் முழு கொள்ளளவான 47.50அடியில் வைத்து நீர்வளத்துறைஅதிகாரிகள் பராமரித்து வந்தனர். தற்போது ஏரிக்கு வடவாறுவழியாக விநாடிக்கு 502 கன அடி வந்துகொண்டிருக்கிறது. சென்னைக்கு விநாடிக்கு 64 கன அடி தண்ணீர்அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.  கடந்த ஒரு மாதமாக ஏரி முழுகொள்ளளவில் உள்ளதால் ஏரியை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.   

    • மங்கலம்பேட்டை அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • ஆட்டின் உரிமையாளர் லோகேஷ் இடம் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே கோ.பூவனுர், மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகேஷ் (வயது. 38), விவசாயி. இவரது 6 மாத ஆடு ஒன்று, அப்பகுதியில், சரவணன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள 5 அடி விட்டமும், சுமார் 50 அடி ஆழமும் கொண்ட, தண்ணீர் இல்லாத உறைக் கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்த தகவலி ன்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஐயப்பன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஸ்தகீன், முகமது புன்யாமீன், மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் விரைந்து சென்று, 6 மாத ஆட்டினை உயிருடன் மீட்டு, ஆட்டின் உரிமையாளர் லோகேஷ் இடம் ஒப்படைத்தனர்.

    ×