என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை வைக்க"

    • விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டி போலீஸ் நிலையங்களில் விழாகுழுவினர் மனு அளித்தனர்.
    • விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    தமிழக முழுவதும் நாளை மறுதினம் (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக அரசு சட்ட திட்டத்திற்கு உட்பட்டு விநாயகர் சிலை செய்யும் பணிகளில் தொழிலா ளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை வைத்து விமர்சையாக கொண்டாட வேண்டி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்ட க்குடி, விருத்தாச்சலம் ஆகிய 7 உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வரை 630 மனுக்கள் போலீஸ் நிலையத்தில் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் வழங்கி உள்ளனர்.

    இது மட்டும் இன்றி இன்னும் 2 தினங்களில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைப்பதற்கு மனுக்கள் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மனுக்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்காமல் இருந்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வைக்கப்பட்ட இடத்தில் விநாயகர் சிலை வைக்கப்படுகிறதா? பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிலை வைத்து கொண்டாடுவதற்கு அந்த பகுதி எந்தவித பாதிப்பும் ஏற்பாடாத பகுதிகளா? உள்ளிட்டவைகளை போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அனுமதி அளித்தால் எந்த தினம் விநாயகர் சிலை கரைக்க வேண்டும். விநாயகர் சிலை கரைக்க செல்லும் போது ஊர்வலமாக செல்ல க்கூடாது. பாதுகாப்பாகவும் எந்தவித பிரச்சனைகள் இல்லாமலும் விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் சம்பந்தப்பட்டவரிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மற்றும் நாளை மாவட்டம் முழுவதும் பெறப்படும் மனுக்கள் குறித்து முழு ஆய்வு செய்து போலீசார் எந்தெந்த பகுதியில் சிலை வைத்து வழிபட வேண்டும் என அறிவுறுத்த உள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    ×