search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
    X

    கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

    • கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
    • நாளை மறுநாள் (30- ந்தேதி) முதல் நேரடி சேர்க்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும்; நெய்வேலி தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022 -ம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்ய முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டுநாளை மறுநாள் (30- ந்தேதி) முதல் நேரடி சேர்க்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதற் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பித்து தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்கள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்ககையை உறுதி செய்யாதவர்கள் ஆகியோர் நேரடி சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய இணையதளத்தினை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த இணையதள வழியிலான 2-ம் கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×