பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்

ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர். முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர்களை படத்தில் காணலாம். 
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர்களை படத்தில் காணலாம். 
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தபள்ளி மாணவர்கள் அக்கட வல்லி பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர். அப்போது இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

இந்த மோதலில் ஒரு பிரிவை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடை ந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை க்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டனர். தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com