என் மலர்
சென்னை
- மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
- மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூரில் நேற்று இரவு நடந்த சம்பவம், மிகவும் வருந்தத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இந்த சம்பவம் நடந்துவிட்டது.
அந்தக் கூட்ட நெரிசலில் பல பேர், தங்களது இன்னுயிரை இழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.
அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, இந்த கரூர் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும். அவ்வாறு பதில் கொடுத்த பிறகு, அதைப்பற்றி விவரமாக பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
- எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறுவதற்கும், நிதி உதவி வழங்குவதற்கும் எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் அடிப்படையில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போலீசில் மனு கொடுக்க உள்ளனர்.
- முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது
- அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
- சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு தமிழக வெற்றிக்கழகத்தினர் முறையீடு செய்துள்ளனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
- தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காவல்துறையினரால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
- எடப்பாடி பழனிசாமி சிறிது கூட மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும் பழி போடுகிறார்.
சென்னை:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறியதாவது:-
* பிரசார கூட்டத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க.வினர் பின்பற்றவில்லை.
* ஆம்புலன்ஸை வழிமறித்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
* தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காவல்துறையினரால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
* அ.தி.மு.க.வினர் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதே த.வெ.க. தொண்டர்களின் இந்த மனநிலைக்கு காரணம்.
* எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனை கதைகளையும் பரப்பி வருகிறார்.
* த.வெ.க. தொண்டர்களின் இந்த மனநிலைக்கு மாற்றிய எடப்பாடி பழனிசாமியும் இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர்தான்.
* எடப்பாடி பழனிசாமி சிறிது கூட மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும் பழி போடுகிறார் என்றார்.
- யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.
- காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.
சென்னை :
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.
- த.வெ.க. தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
- விஜயின் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் கைதாவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயின் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
- தி.நகர் மேம்பால திறப்பு நிகழ்ச்சி, நாளை ராமநாதபுரம் செல்லும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கரூருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இன்றைய தி.நகர் மேம்பால திறப்பு நிகழ்ச்சி, நாளை ராமநாதபுரம் செல்லும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க. நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை...
- பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கரூருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.
கரூர் சம்பவம் குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தாங்க முடியவில்லை;
இரவு என்னால்
தூங்க முடியவில்லை
மரணத்தின் படையெடுப்பால்
கரூர் கருப்பூர் ஆகிவிட்டது
அந்த மரணங்களுக்கு
முன்னும் பின்னுமான
மனிதத் துயரங்கள்
கற்பனையில் வந்து வந்து
கலங்க வைக்கின்றன
பாமரத் தமிழர்களுக்கு
இப்படி ஒரு பயங்கரமா?
இந்த வகையில்
இதுவே கடைசித் துயரமாக
இருக்கட்டும்
ஒவ்வோர் உயிருக்கும்
என் அஞ்சலி
ஒவ்வொரு குடும்பத்துக்கும்
ஆழ்ந்த இரங்கல்
இனி இப்படி நிகழாமல்
பார்த்துக் கொள்வதே
இந்த நீண்ட துயரத்துக்கு
நிரந்தர நிவாரணம்
ஆடும் உடம்பு
அடங்குவதற்கு நாளாகும்
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- டி.வி.நகர், கிருஷ்ணவேணி நகர், லலிதாம்பாள் நகர், ரோஜாம்பாள் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (29.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ராமாபுரம்: டி.வி.நகர், கிருஷ்ணவேணி நகர், லலிதாம்பாள் நகர், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீலட்சுமி நகர், கார்த்திக் பாலாஜி நகர், சபரி நகர், டி.எல்.எப்., குப்தா கம்பெனி, மவுண்ட் பூந்தமல்லி மெயின் ரோடு, கமலா நகர், ஸ்ரீராம் நகர், வெங்கடேஸ்வரா அவென்யூ, சுபஸ்ரீ நகர்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர்.
- தவெகவினர் கேட்டதன் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்பட்டது என்றார்.
சென்னை:
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன் நள்ளிரவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். ஆண்கள் 12, பெண்கள் 16, ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தைகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் முதலில் அனுமதி கேட்டது லைட்ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர்சந்தை பகுதியில்தான். அது இதைவிட நெரிசலான பகுதி.
இந்தக் கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம்.
மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டுவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் காரணம் தெரிய வரும் என தெரிவித்தார்.






