என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெருங்கும் டிட்வா புயல்- அமைச்சர் ஆலோசனை
    X

    நெருங்கும் டிட்வா புயல்- அமைச்சர் ஆலோசனை

    • மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
    • பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    சென்னை:

    'டிட்வா' புயலானது சென்னையை நோக்கி நெருங்கிவருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், புயலின் தாக்கம், செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    டெல்டா மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×