என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாலிபரை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் சந்தையில் வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில், அவர் சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த் (வயது 21) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 40 போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

    • கடைகளிலிருந்து மது பாட்டில்கள் மொத்தமாக வாங்கி வந்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது.
    • மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்று வந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிகல்களை பறிமுதல் செய்தனர்.

    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த சாலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), கோவிந்தராஜ் (49). இவர்கள் கடைகளிலிருந்து மது பாட்டில்கள் மொத்தமாக வாங்கி வந்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீசார் அந்த பகுதிக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்று வந்த செல்வம் மற்றும் கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிகல்களை பறிமுதல் செய்தனர்.

    • தோழி இறந்த துக்கத்தில் இருந்த அசோக் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் வரதராஜன் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 22), பி.காம் பட்டதாரியான இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் படிக்கும்போது உடன் படித்த பெண் ஒருவருடன் பழகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழகி வந்த தோழி இறந்து விட்டார்.

    தோழி இறந்த துக்கத்தில் இருந்த அசோக் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • நாகப்பா நகர், நாகல்கேணி, மெப்ஸ், லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.

    சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

    மின்தடை ஏற்படும் இடங்கள்: தாம்பரம் பகுதியில் கடப்பேரி ராதா நகர், நேரு நகர், குமரன் குன்றம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, நாகப்பா நகர், நாகல்கேணி, மெப்ஸ், லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.

    • புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது.
    • கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக இருந்தது.

    மாமல்லபுரம்:

    திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள் செய்து நடத்துவது வழக்கம்.

    முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நட்சத்திர விடுதி, கடற்கரை ரிசார்ட், அரங்கங்களில் பிரமாண்டமான முறையில் திருமண விழாக்கள் நடத்தி வருகிறார்கள்.

    தற்போது புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது. ஸ்கூபா டைவிங், பாராசூட் திருமணம் என வாழ்வில் மறக்க முடியாதபடி பிரம்மாண்டமாக தங்களது திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    இந்த வகை திருமணங்கள் பலருக்கு ஆச்சரியமாகவும், பிரமிக்க வைப்பவையாகவும் உள்ளது. இதற்கு முன்பு கடலுக்கு அடியில் திருமணம் செய்வது கோவாவில் அதிகளவில் நடந்து வந்தது. தற்போது இதுபோன்ற திருமணங்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரையில் அதிகரித்து வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம் விமான நிலையத்தில் இருந்து குறைந்த நேர பயணம், இடையூறு இல்லாத வாகன போக்குவரத்து, முக்கியமாக பாதுகாப்பு உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன. கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து அதிக அளவு புதுமண ஜோடிகள் வருவதாக இதற்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இதற்காக சிறப்பு பயிற்சி கொடுத்து வருகிறது. ஒரு மணிநேரத்திற்கு ரூ.25ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதற்கான முன்பதிவு செய்யும் புதுமண ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. காதலர்கள் மற்றும் புதுவித அனுபவத்தை பெற விரும்புபவர்களும் இதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிய மாமல்லபுரம் தற்போது சாகச திருமணத்தில் கோவாவை பின்னுக்கு தள்ளி வருகிறது.

    ஏப்ரல் மாதம் ஆசியாவின் மிகப்பெரிய திருமண உச்சி மாநாடு சென்னையில் நடத்தப்பட இருப்பதாகவும் அதில் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச திருமண சேவை அமைப்பினர் கலந்துகொள்ள இருப்பதாகவும், திருமண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

    தற்போது இதுபோன்ற வாழ்வில் மறக்க முடியாத திருமணம், போட்டோ சூட், கேன்டிட் ஷாட், அட்வென்ஜர், விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட புதிய திட்டங்களை பிரபலமாக்க மாமல்லபுரம், கோவளம் பகுதியில் உள்ள தனியார் மரைன் நிறுவனம், நட்சத்திர ஓட்டல்கள் இந்த ஆண்டு கூடுதலாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த இலக்கு வைத்து முயற்சி எடுத்து வருவதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • மாமல்லபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்க்க எஸ்வந்த்ராஜ் வந்திருந்தார்.
    • வேலை முடிந்ததும் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் எஸ்வந்த்ராஜ் (வயது20). வியாசர்பாடியில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நண்பர் ஆகாஷ் (20) என்பவருடன் மாமல்லபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்க்க வந்திருந்தார். வேலை முடிந்ததும் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தபோது எதிரே வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த எஸ்வந்த்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆகாஷ் காயத்துடன் உயிர் தப்பினார்.

    • கால்நடைகளுக்கான சிறப்பு நோய் தடுப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.
    • விவசாய பெருமக்கள் அனைவரும் முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு பயனடையலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சிதுறை, உள்பட பல துறைகள் இணைந்து கிராம பஞ்சாயத்துகளை தன்னிறைவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளாக மாற்றிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடர்பாக இன்று, (வியாழக்கிழமை) 89 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாம்களில் பட்டா மாறுதல், நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பம் பெறுதல், சிறு குறு விவசாயி சான்று வழங்குதல், விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர்காப்பீடு திட்ட விழிப்புணர்வு, வேளாண் துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. மேலும் கால்நடைகளுக்கான சிறப்பு நோய் தடுப்பு முகாம்களும் நடைபெற உள்ளது. எனவே விவசாய பெருமக்கள் அனைவரும் இந்த முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.

    • சந்திரன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ‌.700 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
    • சந்திரன் ஒட்டேரி போலீசில் புகார் செய்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 26), மண்ணிவாக்கம் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கடையை திறந்து கடையில் வெளியே பழயை பொருள்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் சந்திரனிடம் முகவரி கேட்டுள்ளார். பின்னர் சந்திரன் கீழே குனிந்து பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சந்திரன் சட்டை மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.700 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சந்திரன் ஒட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 32 சிறுவர்கள் உள்ளனர்.
    • சீர்திருத்தப்பள்ளி அருகே உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி இருப்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 32 சிறுவர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயதான திருநெல்வேலி, கீழகளக்காடு பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் விருத்தாசலம் அருகே உள்ள புதுகோரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் நேற்று மாலை திடீரென அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர்கள் சீர்திருத்தப்பள்ளி அருகே உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி இருப்பது தெரிந்தது.

    தப்பி ஓடிய சிறுவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
    • 8 ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு மொத்தம் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள் அதில் மொத்த ரவுடிகள் 423 பேர்களில் 373 ரவுடிகளின் வீடுகளில் 17 வகையாக கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    மேலும் 45 ரவுடிகளின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ரவுடிகளை சம்பந்தப்பட்ட உட்கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து அவர்கள் ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க ஒரு ஆண்டுக்கான நன்னடத்தைப் பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    32 ரவுடிகளை சம்பந்தப்பட்ட உட்கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து அவர்களையும் ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணையம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு மொத்தம் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 11-ந்தேதி (சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு-கொளத்தூர், செய்யூர்-பொலம்பாக்கம், மதுராந்தகம்-மங்கலம், திருக்கழுக்குன்றம்-புலிக்குன்றம், திருப்போரூர்-திருநிலை, வண்டலூர்- குமிழி.

    மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது.
    • சங்க நிர்வாகிகள் அனைவரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் என்.சிவாநத்தம் இருவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், இன்று மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க நிர்வாகிகள் அனைவரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் என்.சிவாநத்தம் இருவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக மாநகராட்சி பகுதியில் உள்ள கார்பரேட் சலூன், அழகு நிலையங்களால் ஏற்படும் தொழில் பாதிப்பு, அறநிலையத்துறை கோயிலில் நாதஸ்வரம், மேளம் வாசிப்போரை அரசு ஊழியர்கள் ஆக்குவது, நகராட்சி கடைகளின் வரியை சீறமைப்பது, உள்ளிட்டவை நிறைவேற்றபட்டுள்ளது. சங்கத்திற்கு என புதிய இணையதளம் துவங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மாநில பொது செயலாளர் கரியப்பா டி.கே.ராஜா, பொருளாளர் எஸ்.நடராஜன், செங்கை, காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் ருக்மாந்தகன், சண்முகம், ராஜீவ்காந்தி உட்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ×