என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 2 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
- செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 32 சிறுவர்கள் உள்ளனர்.
- சீர்திருத்தப்பள்ளி அருகே உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி இருப்பது தெரிந்தது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 32 சிறுவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயதான திருநெல்வேலி, கீழகளக்காடு பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் விருத்தாசலம் அருகே உள்ள புதுகோரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் நேற்று மாலை திடீரென அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர்கள் சீர்திருத்தப்பள்ளி அருகே உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி இருப்பது தெரிந்தது.
தப்பி ஓடிய சிறுவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






