என் மலர்
செங்கல்பட்டு
அமைந்தகரையில் 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 5-வது மாடியில் உள்ள தனியார் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
பூந்தமல்லி:
சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 5-வது மாடியில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது.
நேற்று காலை இந்த அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 5-வது மாடியில் உள்ள அலுவலகத்தில் எரிந்த தீயை சுமார் ஒருமணி நேரமாக போராடி அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், ஏ.சி. எந்திரம், மேஜை, நாற்காலிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
தீ உடனடியாக அணைக்கப்பட்டதாலும், காலை நேரத்தில் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்கள் தீ வைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் 1993-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் 1993-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் தற்போது சென்னை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். தங்கள் நினைவுகளை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி மதுராந்தகம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முடிவில் மாணவ-மாணவர்கள் பாடல், நடனம், விளையாட்டு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
படப்பை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற டிரைவர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
படப்பை:
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 46). இவர் வரதராஜபுரம் பகுதிகளில் உள்ள இரும்பு கடைகளில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருடன் பணியாற்றிவரும் நண்பர்களான சரவணகுமார்(22) நூர், (50) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் படப்பை அருகே மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
இதையடுத்து ஏரியில் குளித்து கொண்டிருந்த 3 பேரில், சரவணகுமார், நூர், ஆகிய இரண்டு பேரும் கரைக்கு திரும்பி வந்த நிலையில், கோவிந்தராஜ் மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது.
இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெரிய ஏரியில் நேற்று ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக மணிமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஏரியில் இறந்து மிதந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில், ஏரியில் மூழ்கி இறந்த நபர் கோவிந்தராஜ் என தெரியவந்துள்ளது. பின்னர் இறந்த உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து 3 வழித்தடத்தில் 7 புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு:
கொரோனா ஊரடங்கு காரணமாக புறநகர் பயணிகள் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு பணியாளர்களுக்கு மட்டும் அலுவலகம் வந்து செல்ல வசதியாக நேற்று முதல் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை செங்கல்பட்டிலிருந்து 7 சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.
காலை 6.15 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சூலூர்பேட்டைக்கு முதல் ரெயிலானது புறப்பட்டு சென்றது. அதனைத்தொடர்ந்து 7.15-க்கு சென்னை கடற்கரைக்கும், 7.40-க்கு கும்மிடிப்பூண்டி வரையிலும் 3 வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் ரெயில்வே துறையில் பணிபுரியும் பணியாளர்கள் இலவசமாக பயணிக்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு பணியாளர்கள் பொதுத்துறை துணைச் செயலாளர் கையொப்பமிட்ட அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மின்சார ரெயில்களில் பயணம் செய்ய வந்த அரசு ஊழியர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு டிக்கெட் எடுப்பதற்கு கவுண்ட்டர்களில் முண்டியடித்து சென்றதை காண முடிந்தது.
புறநகர் ரெயில் நிலையங்களில் மின்சார ரெயிலில் பயணம் செய்ய வந்த அரசு ஊழியர்களுக்கு சானிடைசர், உடல் வெப்ப நிலை பரிசோதனை உள்ளிட்ட எந்த வசதிகளையும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
கிழக்கு தாம்பரத்தில் வீடு புகுந்து நகையை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், திருமங்கை மன்னன் தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டார். மர்மநபர்கள் இவரது வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் மாடியில் உள்ள அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் சென்னையை அடுத்த கீழ்கட்டளை பாலாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மனோகர மோகன் (வயது 72). இவர், திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான வள்ளியூர் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் நேற்று ஏராளமான சுற்றலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகளில் சிலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பார்வையாளர் கட்டணம் செலுத்தி கண்டுகளிக்கும் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன சின்னங்கள் கொரோனா ஊரடங்கால் இன்னும் திறக்கப்படவில்லை.
பார்வையாளர் கட்டணமின்றி அனுமதிக்கப்படும் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், மிகிஷாசூரமர்த்தினி மண்டபம் உள்ளிட்ட ஒரு சில புராதன சின்னங்களை மட்டும் கடந்த சில வாரங்களாக வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (காந்தி ஜெயந்தி), சனி, ஞாயிறு ஆகிய தொடர் விடுமுறையால் வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் திரண்டு வந்திருந்தனர்.
அவர்கள் சாலையோரம் கட்டணமின்றி பார்க்கும் புராதன சின்னங்களை மட்டும் பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்தனர்.
பூட்டு போட்டு மூடப்பட்டுள்ள கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் சாலையோரத்தில் தொலைவில் நின்று பார்த்து ரசித்துவிட்டு தங்கள் குடும்பத்துடன் புகைப்படம் மட்டுமே எடுத்த நிலையில் பலர் அருகில் சென்று பார்க்க முடியாத ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. ஒரு சில சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் திரண்டதால் கடற்கரை சாலையில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றதையும் நேற்று காண முடிந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 395 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 7 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 27 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 பேர் உள்பட நேற்று மாவட்டம் முழுவதும் 395 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 683 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 564 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 498 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலத்தூர் சிட்கோ அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி அருகே திருநிலை கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 35). திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
செல்வகுமார் பணி முடித்துவிட்டு தொழிற்சாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓ.எம்.ஆர். சாலையை கடந்து சென்றார். ஆலத்தூர் சிட்கோ அருகே முன்னால் சென்ற லாரி திடீரென்று வலது புறம் திரும்பியது. இதில் பின்தொடர்ந்து வந்த செல்வகுமாரின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். லாரியை போலீசார் கைப்பற்றினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 222 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,580 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,08,885 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 5,52,938 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,653-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,70,025 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 36,358 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 222 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,580 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 33,470 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 561 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகன சோதனையில் ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கம் சாலை சந்திப்பில் நேற்று காலை கூடுவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் அந்த வழியாக காரில் வந்தவர்கள் வேகமாக செல்ல முயன்றனர். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அந்த காரை வழிமறித்து விசாரித்தபோது அந்த காரில் இருந்த 5 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் காரை சோதனை செய்தார். அதில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காரில் இருந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரோஸ் பாக்கியம் (வயது 40), சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (46), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (27), ரமேஷ் குமார் (30), கடலூர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா (24) என்பது தெரியவந்தது. அவர்கள் வந்த கார் மற்றும் காரில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஊரப்பாக்கத்தில் சாப்ட்வேர் நிறுவன மேலாளர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36), இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்கநகை மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து லோகநாதன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் மாயமானார்.
மாமல்லபுரம்:
சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 13 பேர் ஒரு குழுவாக பொழுது போக்குவதற்காக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த இ.சி.ஆர். சாலையில் உள்ள புலிக்குகை கடற்கரைக்கு நேற்று சென்றனர். இதில் மாணவர்கள் அனைவரும் புலிக்குகைக்கு பின்புறம் உள்ள கடலில் சந்தோஷமாக குளித்தனர். இதில் சென்னை தனியார் கலை கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கும், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவர் சந்தோஷ் (வயது 19) , மற்றொரு மாணவர் நவீன் (20) ஆகியோரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
அருகில் குளித்து கொண்டிருந்த சக மாணவர்கள் கடல் அலையில் சிக்கிய அவர்களை காப்பாற்ற கூச்சல் போடவே அங்கிருந்த மீனவர்கள் சிலர் கடலில் இறங்கி இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். நவீனை மட்டும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
சந்தோஷ் ராட்சத அலையில் சிக்கி மாயமானார். ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட சந்தோஷை மீனவர்கள் படகு மூலம் தேடி வருகின்றனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.