என் மலர்
செய்திகள்

முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு
மதுராந்தகம் பள்ளியில் முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் 1993-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் 1993-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் தற்போது சென்னை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். தங்கள் நினைவுகளை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி மதுராந்தகம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முடிவில் மாணவ-மாணவர்கள் பாடல், நடனம், விளையாட்டு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
Next Story






